Quantcast
Channel: என் மனவானில்....Speaking My Mind!
Viewing all 68 articles
Browse latest View live

ஏன் இந்த மயக்கம்

$
0
0
வாசிப்பு பற்றி எத்தனை தடவை என் அனுபவத்தின் வழி எழுதியிருப்பேனோ தெரியாது. அதைப் பற்றோடு செய்தால் மனம் ஒருவழிப்படும், தன்னம்பிக்கையும் அதிகமாகும் என்பதாய் தோன்றும். தன்னம்பிக்கை என்பது உலகம் பற்றியும், தன்னைப்பற்றியும் ஒருவர் முழுதாய் அறியும் போது ஆழப்படுவதுமாகும். இப்படித்தான் கொஞ்சம் வாசிப்பில் மூழ்கிப்போவேன் அவ்வப்போது. 

Dune by Frank Herbert (Science Fiction), The Politics of Genocide by Edward S. Herman and David Peterson (Non-Fiction), Unbroken by Laura Hillenbrand - A World War II Story of Survival, Resilience, and Redemption (Based on a True story). 

ஆரம்பத்தில் ஒவ்வொரு புத்தகத்தையும் தனித்தனியாக அவ்வப்போது பொழுதுபோகாமல் தான் படிக்கத்தொடங்கினேன். பிறகு, ஒவ்வொன்றிலும் படிக்கும்போது அலுப்புத் தட்ட மாற்றி, மாற்றி படிக்கத்தொடங்கியாகிவிட்டது. படித்துக்கொண்டு போகத்தான் மூன்றுக்கும் இடையே உலகவரலாற்றை கற்பனையாகவும், சான்றுகளாகவும், தனிப்பட்ட அனுபவமாகவும் சொல்லப்பட்டது சுவாரஸ்யப்பட்டது. இந்த மூன்று வாசிப்பிலும் ஒரே முடிச்சு அவிழ்வது போலத் தோன்றியது. இருந்தாலும், இப்பதிவானது நான் வாசித்த இப்புத்தகங்கள் பற்றியல்ல. 

மூன்று புத்தகங்களிலுமே போர் என்பதும் அதன் ராஜதந்திரங்கள், அரசியல் சாணக்கியங்கள், எதிர்பார்த்த முடிவுகள், எதிர்பாராத விளைவுகள் பற்றியனவாக கவனத்தை ஈர்த்தன. இதெல்லாம் எப்படியோ ஈழத்தை எப்போதும் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும் எனக்கு. ஏன் தொடர்ச்சியாக உலகில் விடுதலை வேண்டியோ அல்லது சுயநிர்ணய உரிமை வேண்டியோ போராடும் இனம் அல்லது மக்களின் உரிமையும், குரலும் நசுக்கப்பட்டே வருகிறது என்று எப்போதுமே ஒரு கேள்வி உண்டு. அதற்குப் பதில், உலகமயமாக்கல் என்பதும், ஒரு மண்ணின் சொந்த வளங்கள் அந்நியரால் சுரண்டப்படுவதுமே காரணங்கள் என்பது வெளிப்படையாய் தெரியாமல் பூசி மெழுகப்படும் உண்மை என்பதை அறைந்தாற்போல் சொல்லவும், யோசிக்கவும் வைக்கும் வாசிப்புகள் மூன்றும். 

இந்த வாசிப்பிலிருந்து கொஞ்சம் விலகி வென்றவர்கள் எழுதிய உலகவரலாற்றிலும் சில உண்மைகளைப் படிக்க நேரிடுவது அபூர்வம். அதில் ஒன்று எப்படி கொலம்பஸ் வட அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்பது. கொலம்பஸ் காலத்தில் ஐரோப்பாவில் இருந்த ஆட்சியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அல்லது Elites க்கும் சீனாவின் Textile, Porcelain, Spices இதுபோன்றவற்றிற்காக அவர்களுடன் வியாபார ஒப்பந்தங்கள் செய்வது அல்லது அவர்கள் பிராந்தியஙக்ளைப் பிடிப்பது என்கிற நோக்கத்துடன் முனைந்தார்களாம்.

கொலம்பஸ்க்கோ நிறைய ஆர்வக்கோளாறு போல! அவர் உலகத்தின் வடிவம், சுற்றளவு கணக்கெல்லாம் ஒரு குத்துமதிப்பா கணக்குப்போட்டு ஸ்பெயின் ராஜ்யத்திடம் ஒப்படைத்தாராம். ஐரோப்பாவிலிருந்து ஆசியாவின் இவர்கள் விரும்பிய பகுதிகளுக்குச் செல்ல விரும்பினாலும் 8 ம் நூற்றாண்டில் மொஹமட்டின் ராணுவம் (மொஹமட் மறைந்தது 632 இல் என்கிறது மற்றொரு குறிப்பு) இஸ்லாமிய ஆட்சியில் (ஒட்டமன் ராஜ்சியம்) ஸ்பெயின், போச்சுக்கல் எல்லாம் இஸ்லாமியர்களின் ஆட்சியில் பிடிக்குள் வீழ்த்தப்பட்டதை ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டார்களாம் ஐரோப்பியர்கள். ஸ்பெயின், போர்ச்சுக்கல் 711ம் ஆண்டில் Umayyad Dynasty அல்லது உமாயட் பரம்பரையின் ஆட்சிவிஸ்தரிப்பில் அரபிய ராணுவத்தின் படையெடுப்பில் அவர்கள் வசமானதாய் ஃப்ரான்சிஸ் ஃபுக்குயாமா The Origins of Political Order இல் குறிப்பிடுகிறார். அந்தப் பகையின் தொடர்ச்சியால் கொலம்பஸ் அவர்கள் கடல் எல்லையைத் தாண்டிப்போவதில் இருந்த சிக்கல்களை சமாளிக்க இருந்த வழியாய் அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து போய் சீனாவை அடையலாம் என்று சொன்னாராம்.  ஐரோப்பாவில் எந்த ராச்சியத்திலும் யாருமே அவருக்கு Financial assistance கொடுக்காமல் இருக்க ஸ்பெயின் உதவியதாம். அதற்கும் அவர்கள் ராச்சியத்திலிருக்கும் ஒரு குழுவிடம் (Astronomy, Navigation, Natural Philosophy experts) அவர்களிடம் கொலம்பஸ் இன் கணிப்புகள் சரிதானா என்று சோதிக்கச்சொன்னார்களாம். 

அந்த குழுவிலுள்ளவர்களும் சோதித்துவிட்டு இவர் எப்படி இவருக்கு முன்னர் இருந்த அறிவாளிகள் சொல்வதையெல்லாம் கேள்விக்குள்ளாக்குவது என்று நினத்தோ என்னவோ கொலம்பஸ் கணக்கு தவறு என்றார்களாம். இருந்தாலும், ஸ்பெயின் ராஜ்யம் அதைக் கணக்கில் கொள்ளாமல் இவரது சீனாவை, இந்தியாவை அடையும் முயற்சிக்கு ஃபைனான்ஸ் செய்தார்களாம். ஆனால், கொலம்பஸ் முயற்சி தோல்விதான். அவர் கண்டுபிடித்தது தான் வட அமெரிக்காவாச்சே. 

இன்றைய காலகட்டத்திலும் Biologists ’சிலர்’ Homogenocene க்கு முன்னோடி கொலம்பஸ் என்கிறார்களாம். இதைத்தான்  எளிய தமிழில் உலகமயமாக்கல் என்கிறார்கள்.  

கொலம்பஸ் சீனாவை, இந்தியாவை கண்டடையும் முயற்சி தோல்வியாக அந்தக்காலத்தில் கருதப்பட்டதால் ஸ்பெயின் அவருக்குரிய சலுகைகளை ரத்துசெய்துவிட்டதாம். இவரும் சளைக்காமல் ஸ்பெயின் சாம்ராஜ்யத்தின் மன்னருக்கு கடைசியாய் ஒரு கடிதம் எழுதினாராம். அதில் அவர் சொன்னது சீனாவின் ராச்சியத்தை கிறிஸ்த்துவமத்தை தழுவுபடி மாற்ற தன்னால் முடியும் என்று (1493 by Charles C. Mann). கொஞ்சம் சிரிப்பும் வந்தது இதைப் படித்த போது. 


அது எப்படியோ, ஆனால், இவர்கள் பின்நாட்களில் வட அமெரிக்காவை வந்தடைந்த ஆங்கிலேயர்களும் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்வியந்திர்களை தங்கள் Church மூலம், அதாவது மத்தின் வழி தங்களை ஆள்பவராகவும், மாட்சிமை கொண்டவர்களாகவும் ஏற்றுக்கொண்டால், தங்களுக்கு அவர்கள் அடிமைசேவகம் செய்யாமல் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழலாம் என்று சொன்ன உண்மைக்கதைகள் வரலாற்றில் அதிகம் பேசப்படுவதில்லையாம். 


இதைத்தான் கொலம்பஸ் கண்டுபிடித்து இன்று அமெரிக்கா என்கிற பூவோடு சேர்ந்த நாராக இல்லாமல் நரகலாகவும் உலக மக்கள் பூராவும் நாற்றத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. 


கொலம்பஸ் கண்டுபிடித்து அதன்வழி வந்த அமெரிக்கா இன்றுவரை எந்தவொரு போரிலும் நேரடியாகப் பாதிக்கப்படாதது என்றும்; ஆனால், அதேநேரம் 1959-2009 ம் ஆண்டுவரை அமெரிக்கா 29 நாடுகளில் மிகத்தீவிரமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார்கள் The Politics of Genocide ஆசிரியர்கள். 2009 ம் ஆண்டு என்றால் ஈழமும் அடங்குமோ என்று யோசிக்கவைக்கிறார்கள்.  The Politics of Genocide இல் லிபியா மற்றும் ஈழத்தின் இறுதிப்போரில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் இரண்டையும் ஒப்பிட்டு தமிழர்களது இனப்படுகொலையானது எவ்வளவு மோசமாக கண்டும் காணாதது போல் நிகழ அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒப்பிடுகிறார்கள். 

நாங்களும் தமிழின இனப்படுகொலை மிகத்தீவிரமாக முள்ளிவாய்க்காலில் முடுக்கிவிடப்பட்ட நாளிலிருந்து ஏன் ஐ. நா. தன் R 2 P, Responsibility to Protect என்கிற கோட்பாட்டை அப்பிடியே அமுல்படுத்தி ஈழத்தமிழினப் படுகொலையை தடுத்திருக்கவில்லை என்றெல்லாம் தமிழின சில அரசியல் ஆலோசகர்களால் அறிவூட்டப்பட்டோம். ஆனால், இப்போது தான் படித்து தெரிந்துகொண்டேன் அந்த R2P என்பது ஐ. நா. வின் பாதுகாப்பு சபையின் அனுமதிக்கு காத்திராமல் அமெரிக்கா போன்ற வல்லரசு ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு கொண்டுவரப்பட்ட ஒரு கோட்பாடாகும் (Doctrine) என்பதை. 

அமெரிக்காவானது தனது பொருளாதார நலன்களுக்காக மூன்றாம் உலக நாடுகளில் மக்களை அடிமைகளாக வைத்திருக்கும், மக்களின் உரிமைகளுக்கான எந்தவொரு அரசியல் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாத ஜனநாயகத்தை மதிக்காத ஆட்சியாளர்களை அந்தந்த நாடுகளில் வளர்த்தெடுத்து அதன்வழி சமத்துவமில்லா கட்டமைப்பை பேணிவருவதும், இனப்படுகொலைக்கு துணைபோவதும், தூண்டிவிடுவதுமான செயல்களைச் செய்துவருவதாக விளக்குகிறார்கள். 

இதெல்லாம் ஏன் என்னை யோசிக்கவைக்கிறது என்றால், இலங்கையின் வடக்கு மாகாணசபைத்தேர்தல் முடிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றவுடன் இனி தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் பையப் பைய கிடைக்கும் என்கிற சிலரது வாதப்பிரதிவாதங்கள் தான். மாகாணசபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு விக்னேஸ்வரன் அவர்களது ஒரே இலங்கைக்குள் அதாவது ஒற்றையாட்சிக்குள் தீர்வும் அதற்கான ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தனின் தமிழ் தேசியம் என்றால் தமிழ் தேசியம் என்பதை வலியுறுத்தும் அதேவேளை கொஞ்சம் அதிகப்படியான, வரம்புமீறிய வார்த்தைப் பிரயோகப் பதில்களும்; தமிழ்தேசிய கூட்டமைப்பை அதன் தலைவர்களின் சில அபத்தமான பேச்சுக்களுக்கு சப்பைக்கட்டு கட்டி பிழையைப் பிழையெனக் கூறாமல் மழுப்பும் சில தமிழின அரசியல் ஆலோசகர்களும் என் போன்றவர்களுக்கு பயத்தையே விளைவிக்கிறார்கள். 

இப்படித்தான் கனடாவின் தமிழ்தொலைக்காட்சியில் ஒரு அரசியல் களவிவாதம் ஈழம் பற்றி நடந்துகொண்டிருந்தது. அதில் எப்போதும் தமிழ்தேசிய கூட்டமைப்பை ஆதரித்து பேசும் ஒரு ஐயா ஒருவர் சொன்னார் விக்னேஸ்வரன் உண்மையிலேயே துணிச்சலானவர் என்று. எனக்கு இவர்கள் அளவுக்கு அரசியல் அறிவு இல்லை என்றாலும் ஆர்வக்கோளாறில் ஏன் என்று அறிய தொடர்ந்து கவனித்ததில் அறிந்தது என்னவென்றால், அவர் இலங்கை ஆட்சியாளர்களுக்குப் பயமில்லாமல் தமீழத் தேசிய தலைவரை “Freedom fighter"என்று சொல்லிவிட்டாராம். அடக்கொடுமையே என்றிருந்தது எனக்கு. விக்னேஸ்வரன் அதற்குப் பின் சொன்னது இந்திய மைய ஊடகங்களில் காணப்பட்டது அந்த ஐயாவின் கண்களில் படவில்லை போலும். பிரபாகரனை ராஜபக்‌ஷேக்களோடு ஒப்பிட்டு கொலையாளி ஆக்குவது தான் தமிழின அரைகுறை சாணக்கியம் என்பது ஒருவேளை என் சிற்றறிவுக்கு எட்டாமல் போய்விட்டதோ! இதுபோன்ற சில தமிழின அரசியல் ஐயாக்கள் பேச்சைக் கேட்டால் எனக்கு தலை சுற்றும். உங்களுக்கும் இப்படி தலைசுற்றினால் நீங்கள் என் இனம். 

இதுபோன்ற பேச்சுக்களால் இவர்கள் யாரை சந்தோசப்படுத்துகிறார்கள் என்கிற கேள்வியும் மனதில் எழும்பும். பதிலாய் அமெரிக்கா, இந்தியா என்பதைத் தவிர வேறொன்றும் தோன்றாது. இப்படி அமெரிக்காவை, இந்தியாவை மனம்குளிரச்செய்ய பேசுவதும், நாடகம் நடத்துவமே தமிழினத்தலைவர்கள் செயல் என்றால் உங்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு என்ன மதிப்பு. தமிழர்களின் தமிழ் தேசியத்தை மக்கள் கேவலப்படுத்துவதில்லை. அதை அவர்கள் இன்றுவரை மறக்கவுமில்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வழி மக்கள் ஆணை வழங்கப்பட்ட தமிழ்தேசியத்தை இவர்கள் காக்கும் லட்சணம் அதன் எதிர்காலம் குறித்து பயம் கொள்ளச் செய்கிறது. 

வடக்கு மாகாணச் சபை முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களின் பதவியேற்பு விழாவும் அதன் இந்துமத அடையாளத்தூக்கல்களும் என்ன வகையான சாணக்கியமோ. அது அசூசையாகவே இருக்கிறது. தவறு என்னுடையதல்ல. ஏன் விக்னேஸ்வரனை மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டார் என்பதற்கு சம்பந்தன் ஐயாவின் விளக்கம் தந்தை செல்வா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, யாரை தேர்வு செய்திருப்பாரோ அதையே நானும் செய்தேன் என்பது. ஈழவிடுதலைக்காகப் போராடிய புலிகளை ஆங்காங்கே விக்னேஸ்வரன் மறைமுகமாகத் தாக்கிப் பேசுகிறார் என்கின்றன சில ஊடகச் செய்திகள். இப்படி, தந்தை செல்வாவின் தமிழ் தேசியம், புலிகள் கடைசிவரை கொண்ட கொள்கைக்காக உறுதியாய் இருந்ததென எல்லாத்தையும் ஆணவம் என்கிற ஒற்றைச் சொல்லில் கடந்துபோய்விட முடிவதில்லை எம்மால் சுலபமாய். 

உங்களைப்போல அரசியல் படிப்போ அல்லது சாணக்கியமோ கற்றவர்கள் அல்ல நாங்கள். உலகவரலாற்றை சான்றுகளாகவும், கற்பனை கலந்த கதைகளாகவும் படிக்கும் போது தெரிகிறது யாரை நம்பவேண்டும், யாருடைய சாணக்கியத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கவேண்டும் என்பது. இவையெல்லாம் மாட்சிமை பொருந்திய பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல்வாதிகளான உங்களுக்குப் புரியாமல் போனால் அது தமிழர்களின் தலைகளை அல்லவா காவு கொள்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் ஒட்டுமொத்த தமிழினத்தையே ஏய்ப்பது உங்களுக்குப் புரியவில்லையா! இது புரியாமல் இருக்கிறீர்களா அல்லது புரிந்தும் நடிக்கிறீர்களா! 

ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகம் என்பது உய்ய ஏதோவொரு புதுவழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், இனி மானுடம் விடுதலை பெற்றுவிடும் என்பதும் சொல்லப்பட்டே வருகிறது. Tribal Society ஆக இருந்த மனிதகுலம் முன்னேறி ஜனநாயகத்தின் வழி எல்லா உரிமைகளையும் பெற்றுவிடுவார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இன்னும் அது பூர்த்தியாகவுமில்லை; மானுடம் விடுதலை அடையவும் இல்லை. கொலம்பஸ் கண்ட கனவுக்கு இன்னும் தீவிரமாக வடிவம் கொடுத்தபடி சுயநிர்ணய உரிமைப்போரையும், மக்கள் விடுதலையையும் நசுக்கியபடியே இருக்கிறார்கள் வல்லமை படைத்தவர்கள்.   ஆளும்முறைமைகளும், அதன் பிரதிநிதித்துவங்களும் குறைபாடுகளுடன் விளங்கும் பட்சத்தில் இதுபோன்ற வல்லாதிக்கத்தின் நிகழ்ச்சிநிரல்களுக்கு துணைபோகிறவர்களால் மனிதகுலத்துக்கு மீட்சியும் இல்லை, மாட்சிமையும் இல்லை. 


Image Courtesy: Google & TamilNet. 

வெள்ளக்காடும் அற்றகுளத்துப் பறவைகளும் - Kiribati

$
0
0

ஒளவையார் சொன்ன முதுமொழி அல்லது பழமொழி ஒன்று, Do not lose (your) dignity. ஒளவையார் எப்போது ஆங்கிலத்தில் பழமொழி சொன்னார் என்றால், மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று தமிழில் தான் சொல்லியிருந்தார். எப்போது மானம் உயிரை வதைக்கும்! உயிர்ப்பிச்சை போடு, பசிக்கு ஒரு பிடி உணவு கொடு என்று கெஞ்சும்போது மட்டுமல்ல; என் நிலம் இழந்தேன், என் இனம் இழந்தேன், என் மக்களை, மண்ணைப் பிரிந்ததில் சகலமும் இழந்தேன் என்னும் நிலை வரும்போது எங்கேயோ வேண்டாத விருந்தாளியாய் வாழ ஒரு வழிகாட்டு, உயிர்ப்பிச்சை கொடு என்று கெஞ்சும்போது உயிருக்குள் முள்ளாய் உறுத்தும் அவமானம். அதை உணர்ந்தவனுக்கு மட்டுமே அது உயிர்வலி.

உலகமயமாக்கலுக்குத் தேவையான அல்லது ஒரு Global Village உருவாக்கத்துக்குத் தேவையான படிப்பைப் படித்தவர்களையெல்லாம் அடிமாட்டுவிலைக்கு மேலைத்தேசங்கள் வாங்கிக்கொள்ளும். அந்த எல்லையைத்தாண்டிய படிப்புபடித்தவர்கள் எல்லாம் அல்லது படிப்பே கிடைக்காதவர்கள் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ வாழும் உரிமை கேட்கத் தகுதியில்லாதவர்கள் ஆகக்கூடும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எல்லாரும் குடியேற நினைத்தால் முடியுமா என்று நினைக்கலாம் மறுவளத்தில். முடியவே முடியாது தான். ஐரோப்பாவின் அன்றைய காலனியாதிக்கமும், அமெரிக்காவின் இன்றைய நவீன காலனியாதிக்கமும் தான் மூன்றாம் உலகநாடுகளின் மக்கள் வாழ வழிவகை தெரியாமல் ஆனவர்களாய், பாரம்பரிய தொழில்முறைகளை, வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் ஆகக்காரணமும் கூட.

எழுதப்படாத அபத்தமான சமூகவிதிகளின் வழி தான்சார்ந்த ஒரு சமூகத்தோடு ஒருங்கிணைந்து வாழமுடியாமற்போகும் தன்னிலைக்கொவ்வாத சூழ்நிலைகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும், தன்னிறைவுக்கான அத்தனையும் கிடைக்குமிடத்திலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை இடம்பெயர்த்துக்கொள்ளத் துணியமாட்டார்கள் என்பதே பொருத்தம். தான்வாழும் சூழலில் தன் அத்தியாவசியத் தேவைகளுக்கான வளங்கள், தன் ஆரோக்கியமான உடல் மற்றும் உளநல வாழ்வுக்க்குத் தேவையான ஆதாரங்கள் என்று தன் அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஏற்றபடி தான் நம்பும் அத்தனையும் கிடைக்கும் செளகர்யமான வாழ்க்கைச்சூழலில் இருந்து தன்னை இடம்பெயர்த்துக்கொள்ளாத சுயநலம் தான் மனிதர்களின் இயற்கயோடு இயைந்த இயல்பு. அதைத் தவறென்று இயற்கையை நான் விமர்சிக்கவும் இல்லை. உடலை இடம்பெயர்க்கலாம். நினைவுகளை என்ன செய்ய என்கிற போது, சில உணர்வுகளைக் கடந்தே வாழ்க்கையை வாழ்ந்துமுடிக்க வேண்டிய காலம் விதித்த கட்டாயமும் உண்டு.

மூன்று பந்திகள் எழுதிய பின்னும் தலைப்புக்குச் சம்பந்தமான விடயத்தைச் சொல்லாமல் இழுத்தடிக்கக் கூடாது. இருந்தாலும், இனி எழுதப்போவதைப் படித்தபின் மறுபடியும் படித்தால் நான் சொலவதன் அர்த்தம் புரியலாம். அண்மையில் எந்த நாட்டின் மைய ஊடகங்களிலும் அதிகம் பேசப்படாத, ஆனால் எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது Kiribati என்கிற ஒரு குடியரசு அமைப்பைக்கொண்ட நாட்டில். மத்திய பசுபிக்கடலில், ஹவாய்த்தீவிலிருந்து பாதிதூரத்திற்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே இருக்கிற நாடாம் என்பது தேடித்தெரிந்து கொண்டது. ஐக்கிய ராச்சியத்திடமிருந்து 1979ம் ஆண்டு விடுதலை பெற்றிருக்கிறது கூகுள் கூற்றுப்படி. பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் இருந்தது என்பதால் அங்கே Christianity மற்றும் ஆங்கிலத்தின் பாதிப்பு இருக்குமென்று நினைதேன். நான் நினைத்தது சரிதான். அங்குள்ள மக்கள்தொகையில் 55% வீதத்திற்கு மேலானோர் ரோமன் கத்தோலிக்கத்தை தழுவுபவர்களாம். அந்த நாட்டு மக்கள் மதம் சார்ந்த கொள்கையால் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. 

அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாதவர்களுக்காக, கிரிபாற்றி Climate change, Global warming அதாவது புவி வெப்பமடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தின் அளவு அந்த குட்டித்தீவை முழுதுமாய் விழுங்கிவிடும் ஆபத்தில் இருக்கிறது. அந்த நாட்டின் சனத்தொகை ஒருலட்சத்தி சொச்சம். இவ்வளவு பேரும் உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து ஆதரிக்க ஏனைய பிறநாடுகள் மிகவும் தயக்கம் காட்டி ஆரம்பத்திலேயே அவர்கள் வருகையை தங்கள் நாடுகளிலிருந்து தட்டிக்கழிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தி இப்போது எப்படி முதலாளித்துவ நாடுகளை யோசிக்கவைக்கிறது என்று தேடினால் கிரிபாற்றி நாட்டிலிருந்து ஒரு குடியானவன் தன் மனைவியுடன் நியுசிலாந்து நாட்டுக்கு ஆறுவருடங்களுக்கு முன் சென்று அகதி அந்தஸ்து கோரியிருக்கிறார். அந்த வழக்கு இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டு இப்போது தீர்ர்புச் சொல்லும் காலத்தை எட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறது. புவிவெப்பமடைதலால் கடல்மட்டம் உயர்ந்து அதன் விளைவாய் இடம்பெயர்ந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து கோரவோ அல்லது கொடுக்கவோ ஐக்கிய நாடுகள் சபையின் அகதிநிலைக் கோரிக்கைகள் தொடர்பான உடன்பாட்டில் இதுபோன்று அகதிநிலை கோரியவர்களுக்கு தீர்வாக அகதி அந்தஸ்து கொடுப்பது பற்றி ஏதும் சொல்லவில்லையாம். அதுதான் உண்மையும் கூட.

ஐக்கியநாடுகளின் அகதிநிலைக்கான இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் முன்னமே யோசித்திருந்தால் இதுபோன்றவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது என்று தீர்மானத்தை திண்ணமாய் நிறைவேற்றி இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.

ஆறுவருடங்களுக்கு முன் கிரிபாற்றி தீவு அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதை மறுத்தவர்கள், அந்த மனிதரின் வழக்கில் இப்போது விஞ்ஞானிகள் அத்தீவு கடல்மட்டத்தில் எல்லை மீறி அழிவுக்கு உட்படும் அபாயம் இருக்கிறது என்று எதிர்வுகூற, அகதி அந்தஸ்து கொடுக்கும் நிலையில் ஐ. நா. உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் யோசிக்கிறார்கள் இப்போது. அனேகமாக எல்லா நாடுகளுமே இவ்வழக்கின் தீர்ப்பை ஆவலாய் எதிர்நோக்கியிருக்கின்றனவாம். சுத்தமான குடிநீர் கூட கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவரும் வேளையில் அந்நாட்டு மக்கள் அந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவண்ணம் இருக்கிறார்களாம். 

உலகம் சனத்தொகைப் பெருக்கத்தால் பிதுங்கிப்போய் இருக்கும் கட்டத்தில் இப்படி நடந்தால் யாராவது கண்டுகொள்வார்களா என்று யோசித்து, அப்பிடியே கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் தேடிப்பார்த்தேன். பூவுலகின் மக்கள் தொகையும், மதங்கள் கண்டுபிடித்த இறப்பின் பின் சொர்க்கத்தின் மக்கள் தொகையும் எப்படி சமப்படும் என்றால் வெள்ளப்பெருக்கு, வறட்சி, நோய்கள் வரும்போது என்று 1700களில் சீனாவின் Qing ராஜ்யத்தில் வாழ்ந்த Hong Liangji என்கிற ஒரு அறிஞர் சொல்லி வைத்திருக்கிறார் என்பது காணநேர்ந்தது. இவர் Thomas Robert Malthus சனத்தொகைப் பெருக்கத்துக்கும், உணவு உற்பத்திக்குமிடையேயான விகிதாசாரத் தொடர்பு, வளர்ச்சிவீதம் குறித்த தியரியை அந்தக் காலத்தில் சரியென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுக்கு முன்பே, அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பே, ஹாங் சீனாவின் சனத்தொகைப் பெருக்கம் மற்றும் உணவு உற்பத்திக்கும் இடையேயான தொடர்பை விளக்கியிருக்கிறார். 

தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து மனித இனம் செல்வத்தையும் அறிவையும் வளர்த்துக்கொண்டே போகிறது. அல்லது, சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாவதால் ஏற்படும் மண்ணை அழிப்பதும், பல்வேறு உயிரினங்களை அழிப்பதும், காலநிலை மாற்றங்களுக்கு பூமி உட்பட்டு இப்படி மனித இனம் இடம்பெயர்க்கப்படுவதும் தொடருமா என்று கேள்விகளை விட்டுச்செல்கிறார்கள். ஆனால், அதன் விளைவுகளான இதுபோன்ற பூதாகரமான பிரச்சனைகள் வந்தால் ஏற்கனவே எழுதிவைத்த guidelines ஐத் தேடுகிறார்கள். 

கிரிபாற்றி பிரச்சனைக்கு எல்லா நாடுகளும் அந்த நாடு தன்னாலான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அவர்களும் ஓரளவு இதற்கு தீர்வு என்று ஒன்றை எட்ட ஜப்பானுடன் சேர்ந்து யோசிக்கிறார்களாம். ஆனால், அதுக்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் தேவைப்படுமாம். இந்த நாட்டுக் குடிகளின் இடப்பெயர்வும் அகதிநிலைக் கோரிக்கையும் எப்படியோ வேண்டா வெறுப்பாகவே இனி எல்லா நாடுகளாலும் பார்க்கப்படும். ஏற்கனவே தேசப்பாதுகாப்பு முக்கியம் அது, இதுவென்று உளறத்தொடங்கியிருக்கிறார்கள். 

அனேகமாக, நியுசிலாந்தில் அகதிநிலைக் கோரிக்கை வைத்தவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தான் சில சர்வதேச சட்டவல்லுனர்கள் எதிர்வுகூறுகிறார்கள். அந்த நாட்டின் சார்பில் அல்லது அந்த மக்களின் சார்பில் பேசுபவர்கள் அவர்கள் அகதிநிலையை விரும்பவில்லை. வேறோர் நாட்டில் கெளரவமான "Migrant Status"ஐ விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இல்லையா பின்ன, அகதிநிலை என்பதும் இடப்பெயர்வு என்பதும் யாருக்குத்தான் பிடிக்கும். ஆங்கிலத்தில் 'Persecution'என்று சொல்லப்படும் மனிதர்களால் துன்பத்துக்கு ஆளாகும் நிலைக்கே அகதிநிலை அந்தஸ்து வழங்கப்படுமாம் ஐ. நா. சாசனத்தின் படி. 

மேலும் இதுகுறித்து தெரியவிரும்பினால் கூகுளில் தேடினால் நிறையவே கொட்டுகிறது அந்தந்த நாட்டு ஊடகதர்மத்தின் படி. இருந்தாலும், எனக்கு சரியென்று பட்டது இந்தப் பக்கத்திலுள்ளது. 




Image: Google.

படைப்புகளின் ரசிகத்தன்மை

$
0
0
அன்றாட வாழ்வில் புரியாத எத்தனையோ விடயங்களை விரும்பியோ, விரும்பாமலோ கடந்து வரவேண்டியிருக்கிறது. ஒன்று எனக்கு அதில் ஆர்வமில்லாமலிருக்கலாம். அல்லது அதைத்தேடித் தெரிந்துகொள்ளும் தேவை இல்லாமலிருக்கலாம். நான் வரித்துக்கொண்ட வாழ்வைக் கழித்துவிட்டு என்னைச் சூழவுள்ள இயற்கையை, அதொயொட்டிய நிகழ்வுகளைக் குறித்து பார்வையாளனாய் எனைமறந்து ரசிப்பதும் உண்டு. இயற்கையை ஒதுக்கிவிட்டு என்னை, என் வாழ்வனுபவத்தை முன்னிலைப்படுத்தி வாழ்க்கையை அலசிப்பார்ப்பதும் உண்டு.

ஊர்விட்டு ஊர்வந்து அல்லது நாடு விட்டு நாடு வந்து வாழ்வை அதன்போக்கில் கற்றுக்குட்டியாய் கற்றுக்கொண்டது ஒரு தனியனுபவம். சிலது வலிகளாகவும், சிலதோ நகைச்சுவையாகவும் மனதில் பதிந்து போகும். மனதின் வலிகள் அனேகமாக வார்த்தைகளிலிருந்தே பிறக்கும் போல என்பது என் அனுபவம். பேசும்போது உரையாடலில் ஏன் புரிதல் குறித்த குழப்பம் ஏற்படுகிறது அல்லது ஏன் புரிதலில் சில வருவிக்கப்பட்ட தடைகள் குறுக்கே விழுகின்றன. சாதாரணர்களின் அன்றாடவாழ்வியல் குறித்த உரையாடல்கள் எல்லாமும் மனதில் தங்கிப்போவதில்லை. சிலதோ ஆணியடித்தாற்போல் மனதில் பதிந்துபோகும். அப்படி மறக்காத  வாழ்வியல் அசந்தர்ப்பங்கள் இரு திரைப்படக் காட்சிகள், முதலாவது கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவன் கதாபாத்திரம் பேருந்து பயணத்தில் ஒரு எழுத்தாளராய் தன்னுடைய வாசகனிடம் பேசும் காட்சி. அடுத்து ஒற்றன் படத்தில் வடிவேல் தொலைபேசிவிட்டு கட்டணக் கொடுப்பனவில் குழம்பிப்போகும் காட்சி.

கன்னத்தில் முத்தமிட்டால் காட்சியில் மாதவன் பேசுவது அசூசையாக, தர்மசங்கடமாக உணரப்படலாம். என்னதான் பெரிய எழுத்தாளராக இருந்தாலும் இவ்வளவு திமிரா என்று நினைக்கவைக்கும். படத்தில் மணிரத்தினம் என்ன செய்தியை அந்த காட்சி மூலம் (குயுக்தியாய்) கடத்த நினைத்தாரோ நான் அறியேன். இயக்குனர் மணிரத்னம் பின்னணிக்காட்சிகளில் அல்லது பின்னணியில் பலர்பேசும்போது தெளிவில்லாததுபோல் தெளிவாய் கேட்கும்படி குயுக்தியாய் அரசியல் கருத்தைத் திணிப்பார் அல்லது நையாண்டி செய்வார் என்பது அவர் படைப்புகள் குறித்த என் கலைப்பார்வை. அவர் உணர்த்தும் குறியீடுகள் குறித்த எனது புரிதல்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரப்படத்தில் இப்படிப் சில காட்சிகள் உண்டு. அது பழையகதை. அதைத் தவிர்த்து, மாதவன் என்கிற எழுத்தாளர் பாத்திரம் தன் வாசகன் ஒருவரிடம் பேருந்தில் பேசும் காட்சியில் எவ்வளவோ நினைக்கத் தோன்றும். அது aggressive ஆகவும், இன்னொருவரை மற்றவர் முன் தாழ்த்துவது போலவும் புரிந்துகொள்ளப்படலாம். அதில் assertiveness இருப்பதாய் தோன்றியதில்லை. அதற்கான சூழலும் இல்லை என்பதாய் காட்சியமைக்கப்படிருக்கிறது. ஒருவேளை அவரது கதாபாத்திரம் சமூகத்தின் மீதான கோபத்தின் Passive Aggressiveness இன் வடிவமாக இருக்குமோ என்றும் நினைக்கவைக்கும் அந்த்கக்காட்சியில். ஒருவிடயத்தை எவ்வளவு முயன்றும் புரியவைக்கமுடியாதபோது ஒருவருக்கு வரும் கோபமும், அயர்ச்சியும் இவ்வாறு பேசவைக்குமோ அவரை என்பதாய் தோன்றும்.

அதே நேரம் ஒரு வாசகன், ரசிகன் எப்படி சுயமிழக்கக் கூடாது என்பதையும் உணர்த்துகிறது காட்சி. தற்கால இலக்கியச்சூழலில் வாசகர்வட்டம், விவாதம் என்கிற நகைமுரண்களின் சிரிப்பு மெய்நிகர் உலகில் நிறையவே யோசிக்கவைகிறது, இலக்கிய ரசிகத்தன்மையை அதன் பக்திநயத்தைக் குறித்து. கன்னத்தில் முத்தமிட்டால் எழுத்தாளர் - வாசகன் சந்திப்பின் யதார்த்தத்தை காட்சியின் தார்ப்பரியம் உணர்ந்து தான் யாரோ அதை யூ ட்யூப்பில் சேர்த்திருக்கிறார்கள் என்று தேடினேன். ஆனால், யாரோ சித்தார்த்தின் ரசிகர் ஒருவர் மாதவனுக்கு பக்கத்தில் இருப்பது சித்தார்த் என்று கண்டுபிடித்து காட்சியை இணைத்திருக்கிறார். காட்சியைப் பதிவில் இணைத்திருந்தேன் ஆனால் Copyright infringement என்று பிரச்சனை போல அது இப்போது கிடைக்கவில்லை.

அடுத்து, ஒற்றன் திரைப்படத்தில் வடிவேல் தொலைபேசிவிட்டு அது குறித்த கட்டணக்கொடுப்பனவில் பிரச்சனைப்பட தமிழ்த்திரைப்பட கலாச்சாரமோ அல்லது நடிகர் அர்ஜுனின் திரைக்கலாச்சாரமோ அவரை கன்னத்தில் பளாரென்று அடித்து வாயை மூட வைப்பது. ஒரு பிரச்சனைக்குரிய விடயத்தை ஒருவர் புரிந்துகொள்ளாத போது அது குறித்த ஒரு தெளிவூட்டல் என்பது தவிர்த்து நகைச்சுவை என்கிற பெயரில் இது போல் காட்சியாகிறது. இதெயெல்லாம் நானும் ரசிக்கிறேன். நான் விதிவிலக்கல்ல. ஆனால், யோசிக்கும் போது ஏதோவொரு தர்மசங்கடம் உள்ளுக்குள் இல்லாமலில்லை.



கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன் மற்றும் வாசகன் கதாபாத்திரங்களுக்கும், ஒற்றன் பட அர்ஜுன், வடிவேல் கதாபாத்திரங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், மாதவன் கதாபாத்திரத்தை பார்த்து கர்வமோ என்கிற ஒரு தோற்றமும், அர்ஜுன் கதாபாத்திரத்தை பார்த்து ஹீரோயிசம் என்று ரசிக்கவும் பழக்கப்பட்டாச்சு. மாதவனின் பாத்திரம் உடைத்துப்போடும் யதார்த்தம். அர்ஜுனின் பாத்திரம் யதார்த்தத்துக்கு மீறிய காட்சிப்பிழை. இவற்றுக்கிடையே தான் பொழுதுபோக்கு கலாச்சாரம்.

திரைப்படங்கள் என்றாலே காட்சிப்பிழைகள் இல்லாமலா! திரையிலக்கியமோ, எழுத்திலக்கியமோ, நாடகமோ, நடிப்போ அதன் புரிதலுக்கான தளங்களே ஒரு ரசிகனை, வாசகனை, பார்வையாளனை கெளரவப்படுத்தவும், மட்டமாகப் பார்க்கவும் வைக்கிறது. ரசிகனோ, வாசகனோ அவனுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக்கொள்வது ஆரோக்கியம்.

என் புரிதல் என் அளவென்றால் அது என்னோட இருக்கட்டும். அது சமூகத்துக்கு எதையும் சொல்லவிளைவதல்ல. 




Image Courtesy: Google. 

தமிழக அரசியலும் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றமும்

$
0
0
அன்புள்ள ரதி இப்படி இணையமடல் வழி என்னை விளித்து Grassroot மட்டத்தில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய பிரச்சனைகளை மடைதிருப்பி, குழப்பி அரசியலாக்கும் எழுத்துக்கான திறனோ அல்லது தேவையோ இல்லாத; ஈழம் குறித்து மட்டுமே அனேகமாக பதிவெழுதும் எனக்கும் ஈழம் குறித்து நான் எழுதும் பதிவுகளின் விளைவால் ஒருவர் தமிழ்நாட்டின் தற்போதைய முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதால் மனம் நொந்து மடல் எழுதியிருந்தார். அவர் பெயர் வெளியிடவேண்டாம் என்கிற வேண்டுகோள் மதிக்கப்படுகிறது. 

தமிழக அரசியல் ஈழத்தமிழர்கள் குறித்து எந்தவகையான புரிதலோடு, செயற்திறனோடு செயலாற்றுகிறது என்பதை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடங்கிய நாள் முதல் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னான இன்றைய நாள்வரை கவனித்தே வருகிறோம். ஈழவரலாற்றின் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு வரையப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய பக்கங்களைப் போலவே வெட்கி, வேதனைப்படவேண்டிய பக்கங்களும் உண்டு. வார்த்தைகளை வளர்த்து ஆறியபுண்ணை மீண்டும் கிளறிப்பார்க்க மனம் ஒப்பவில்லை. இதோ அந்த மடல். 

”இதற்கான மூலம் டெல்லி இப்போது தமிழ்நாட்டில் உள்ள  சுயநலமே  அரசியல் கொள்கையாக கொண்ட எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதைதான் செய்யும். நான் இணைத்த ndtv விவாதம் மற்றும்  பல வட இந்திய  ஊடகங்களில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை சார்ந்த செயலாளர்கள் எல்லோரும் தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. காமன்வெல்த்தில் இந்தியா கல்ந்துகொள்ளகூடாது என்று நாம் கேட்பது அவர்களுக்கு கோபமூட்டுகிறது. அவர்களுக்கு இந்தியாதான் முக்கியம் அதற்க்கு தமிழர்களின் இரத்தம் கொடுத்துதான் வாங்கவேண்டுமென்றால் அதையும் செய்வார்கள்.

ஈழம் குறித்து பெரிதாய் அக்கறை கொள்பவர்கள் வெகு சிலரே.


நான் பார்த்த வரையில் ரதி, 


இந்தியாவில தமிழர்களை பிடிக்காத, இவ்வளவு அழிவுகளுக்கும் பின்புலமாய் இருந்த, இன்றைய இந்தியாவை இயக்கிகொண்டிருக்கிற சக்திகளை கேள்வி கேட்க்கும் வல்லமை பொருந்திய ஆளுமைகள் இன்றைய தமிழ் நாட்டு அரசியல் வெளியில் யாரும் இல்லை. 


தேர்தல் அரசியலில் உள்ள யார்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை வைகோ ,சீமான் உட்பட எனக்கு தெரிந்த அரசியல் அறிவை கொண்டு நான் பார்த்த வரையில் அந்த சக்திகளை அசைத்து பார்த்தவர்கள் ஒன்று பெரியார் மற்றொருவர் பிரபாகரன் 

தன்னலம் பாராமல் தனது கடைசி காலம்வரையில் அரசியல் தளத்தில்  தனது பிரச்சாரத்தின் மூலமே அந்த சக்திகளை  அசைத்து பார்த்தவர் பெரியார் (தமிழ் நாட்டில் அவரின் உழைப்பின் பலனை அறுவடை செய்துகொண்டவர்கள் திமுக ).

மற்றொருவர் பற்றி உங்களுக்கு தெரியும். 

நான் அவதானித்த யதார்த்தத்தில் இருந்து சொல்கிறேன் களத்தில் புலிகள் எவ்வளவுதான் சாதித்திருந்தாலும் அரசியல் களத்தில் (உலக அளவிலும், இந்திய அளவிலும் ) பெரிய தோல்வி அடைந்துவிட்டோம் என்பதையே பார்க்கமுடிகிறது. வடஇந்திய ஊடகங்களில் ஈழம் தொடர்பான விவாதங்களை முடிந்த அளவு தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் நமக்காக வாதிடுபவர்களின் குரல் எடுபடுவ்தே இல்லை பெரும்பாலும் டி ராஜாதான் பங்கேற்ப்பார் தமிழ்நாட்டில் மக்களுடன் தொடர்பிலே இல்லாத ஒரு கும்பல் இங்கு இருக்கிறது அவர்கள்தான் அறிவுஜீவி கணக்காய் அத்தகைய தொலைகாட்சிகளில் காட்சி தருவார்கள் நாம் ஒரு செண்டிமீட்டர் மேலே ஏறினால் ஒரு மீட்டர் கீழே இழுத்துவிடுவார்கள். அதைத்தான் இந்த இந்தியாவில் நம்பவைக்கபடுகிறது. இதை உடைக்கும் வல்லமை இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் யாரும் இல்லை.


மற்றவர்களை காட்டிலும் சிறிதளவு நம்பிக்கை வைகோவின் மீது இருக்கிறது அவருடைய அனுபவம்,வட இந்தியாவில் அவருக்கிருக்கிற செல்வாக்கை வைத்து சொல்கிறேன் அவருக்கு போதுமான பலம் இருந்தால் அவரால் சாதிக்கமுடியும்.


மற்றபடி எதிர்காலத்தில் யாரோ ஒரு தலைவன் அல்லது தலைவி கையில் தான் தமிழ் இனத்தின் தலைவிதி இருக்கிறது.”




செய்திகளை, அரசியல் குறித்த சில அடிப்படைகளைப் படித்து எழுதுவதோடு சரி. எனக்கென்று எந்தவொரு அரசியல் வட்டமோ அல்லது தொடர்புகளோ கிடையாது. இதைக் கவனிப்பவர்கள் கவனித்து செயலாற்ற வேண்டும் என்பதே என் அவா. 



மடலில் அவர் குறிப்பிட்டது போல ஒரு தலைவன் அல்லது தலைவியல்ல தமிழர்களின் விதியை நிர்ணயிப்பது என்பது என் கருத்து. தமிழர்களுக்கான அரசியல், பொருளாதார நிறுவனங்கள், கட்டுமானங்கள் (Political and Economic Institutions) வலுவானதாக இருக்கவேண்டும். அதைக்குறித்த கேள்விகேட்கும் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். இந்திய மைய அரசியலில் சிக்கி ஈழத்தமிழனின் நிலை தமிழகத்தமிழர்களுக்கு வராமல் இருக்கட்டும். 


மெய்நிகர் உலக ஈழம் குறித்த விவாதங்களில் நான் தமிழகம் மனதுவைத்தால் ஈழத்தமிழர்களுகான அரசியல் உரிமைகளை நிலைநாட்டும் வெளியக சுயநிர்ணய உரிமை சாத்தியம் என்று வாதாடினால், ஒன்று கிண்டலடிக்கப்படுகிறேன், இல்லையேல், தமிழகத்தை நம்பாதீர்கள்; ஈழத்தை நீங்களாகவே போராடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வருகிறது. அதிலெல்லாம் சுரணை போய் நாட்களாகிவிட்டது. காரணம் எனக்கு என் இனம் குறித்த சுரணை மட்டுமே என்னிடம் மிஞ்சியிருக்கிறது. 

மரணத்தின் போதும் என் இனத்துக்காக எதையாவது கிறுக்கியிருக்கிறேன் என்கிற திருப்தியாவது மிஞ்சும். 

Image: Google. 


இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்.

$
0
0

வரலாற்று அரசியல் காலந்தொட்டு இருவேறு உலகங்களாய் சந்தோசங்கள், துக்கம், கருத்துகள், வேறுபாடுகள் என மனிதவரலாறு அதன் இயங்குவிதிகளோடும், உருவாக்கப்பட்ட விதிகளோடும் இயல்பாக்கம் அடைந்தவண்ணமே இருக்கிறது. இதுகுறித்து அதிகம் கேள்வி கேட்கவோ, தேடிப்பிடித்து காரணகாரியத் தொடர்புகளை அறியவோ, அல்லது உட்பொருள் தேடவோ பொழுதும், அறிவும், முயற்சியும் நிறையவே தேவை. இதையெல்லாம் கலைப்படைப்பாக ஒரு இரண்டரை மணிநேரத்துளிகளில் எம் கண்முன்னே ஆவணமாகவோ, கற்பனையாகவோ காண்பிக்கப்படும்போது அது குறித்து விமர்சனங்கள் எழவே செய்கின்றன. 

இரண்டாம் உலகம்

எனக்கு செல்வராகவன் படைப்புகள் குறித்து நிறைய விமர்சனங்கள் என்வரையில், என் புரிதலுக்கு எட்டியவரையில் எழுதியதுண்டு. அவருடைய வழமைகள் இதிலும் மீறப்படப்போவதில்லை என்கிற ஒரு முன்முடிவோடு, அதிக எதிர்பார்ப்புகளின்றியே திரையரங்கில் இன்னும் 5 மட்டுமே படம் பார்த்தோம், என்னைத்தவிர 5 பேர். இரண்டாம் உலகம் திரைப்படம் குறித்து நிறையவே விமர்சனங்கள் எதிர்மறையாக வருகின்றன. இரண்டாம் உலகம் முற்றுமுழுதாக அவ்விமர்சனங்களை ஒட்டியபடி தான் இருக்கிறதென்பதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. நான் பொதுவெளியில் திரைவிமர்சனம் எழுதுவதில்லை. இது இரண்டாம் உலகம் பற்றிய என் பார்வை. 

Beautiful Mind, Russel Crow நடிச்ச படம் ஒன்று ஓஸ்கார் விருது பெற்றது. அதில் ரஸலின் பாத்திரத்தின் மனைவியின் அறிமுகத்தின் போது அவரை ஒரு Problem Solver ஆக அறிமுகக்காட்சியில் காட்டுவார்கள். 

அவர் வகுப்பறையில் இருப்பார். விரிவுரையாளர் பாடம் நடத்துவார். வெளியே கட்டிட வேலை நடந்துகொண்டிருக்க சத்தம் பெரிதாக இருக்கும். எல்லாரும் பேசாமலே இருக்க, இவர் சர்வசாதாரணமாக எழுந்து போய் யன்னலை மூடிவிட்டு வருவார். 


அவரை அவ்வாறு காட்டியதன் நோக்கம், அவர் தான் தன் கணவனின் பிரச்சனைகளை, மனநோயின் பிடியிலிருந்து அதன் தாக்கங்களிலிருந்து காக்கிறார் என்பதற்கான ஒரு அழகான பாத்திரப்படைப்பு. 


கணவருக்கு Paranoid Schizophrenia. அவர் இரு வேறு உலகில் தன்வரையில் வாழ்பவர். அந்த இரண்டும் ஒருபுள்ளியில் சந்திக்கும் போது பார்வையாளர்களுக்கு ஒரு திகைப்புவரும். 


இப்படித்தான் இருக்கப்போகிறது என்று காத்திருந்தேன் இங்கேயும், இரண்டாம் உலகம். ஆர்யாவின் கதாபாத்திரமான மதுபாலகிருஷ்ணனுக்கு ஏதும் உளவியல் பிரச்சனை என்கிற நோக்கோடும்; அனுஷ்காவை ஒரு problem solver ஆக ஒரு முன்னனுமானத்தோடு கவனித்தேன் திரைக்கதையை. 


செல்வராகவனின் காதல் கொண்டேன் ஏழ்மை-செல்வம்; ஆயிரத்தில் ஒருவன் சரித்திரகாலம்-தற்காலம்; அதே போல் இப்போதும் இரண்டாம் உலகம் இப்பூலோகம் - இன்னோர் புதுவுலகம். 


ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் விட்டதை இதில் பிடிக்கவேண்டும் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ரசிகர்களை Medieval Period போன்ற ஒரு காலப்பகுதிக்கு கூட்டிச்சென்று, அக்கால அரசியலையும் (ஒன்றே மதம், ஒரே கடவுள், ஒரே மொழி.... இப்படி, அதாவது எனக்குப் புரிந்தது அந்தக்காலப்பகுதியில் தான் இஸ்லாமிய ஒட்டமன் சாம்ராஜ்யத்தின் பிடியிலிருந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்துவ ஐரோப்பா விடுவித்த காலப்பகுதி. I am not a historical buff.) ஆங்காங்கே குறியீடாகக் காட்டியிருப்பதாய் தோன்றியது. இங்கே தொன்ம அரசியல், வரலாற்று, சமூகக் குறியீட்டுப் படிமங்கள் இருப்பதாக என் அறிவுக்கு ஏனோ தோன்றியது. அந்த அரசியல் வரலாற்றுக் காலப்பகுதியிலேயே இரட்டை இலை, ‘அம்மா, அம்மா’ குறியீடு. ஏன் செல்வராகவன்! 


ஏன் வரலாற்றின் ஒரு மத்தியகாலப்பகுதி என்றால் எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அந்தக்காலப்பகுதியை ஒரு புதிய உலகமாக்கி, அதை பிரபஞ்சத்தால் சூழவைத்து, காணவைத்த Visuals பார்க்கும்போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. காரணம், தமிழ்த்திரைப்படங்களில் அதையெல்லாம் கொண்டுவருகிறார்கள் என்று. 



சரி, கதைக்கும், செல்வராகவனின் கதாபாத்திரங்களிடமும் வருவோம். செல்வராகவனின் அதே கதைக்களமும், பாத்திரங்களின், ஆண்-பெண் psychological behavioral concept ம் மாறவே இல்லை. இரண்டாம் உலகில் அனுஷ்காவின் பாத்திரமான ‘வர்ணா’ ஆணாதிக்க ஆண்களுக்கு பிடிக்காத வழமையான செல்வராகவனின் உருவாக்கம். யாருக்கும் அடிமையாய் இருக்கமாட்டேன் என்று திருமணத்தையே வெறுப்பவர். சந்தர்ப்பசூழ்நிலை ’மருவா’ வை (ஆர்யா) கல்யாணம் செய்கிற சூழல். மருவாவுடன் சேர்ந்துவாழப்பிடிக்காததால் தனித்தே காட்டில் வாழ்கிறார் வர்ணா. காரணம் அதுமட்டுமல்ல, கட்டாயக்கல்யாணம் செய்துவைத்த ராஜாவை கொலைசெய்ய எடுத்த முயற்சியும் கூடவே. எதுவும் வழமை மாறவில்லை இயக்குனரின் வழக்கமான கதையிலிருந்து. இது ஒரு உலகம். அங்கே ஒரு ஆர்யா-அனுஷ்கா சோடி. 


இன்னொரு உலகம், தற்காலம். அங்கே இன்னோர் ஆர்யா-அனுஷ்கா. இவ்வுலகில் வழமையான காதல் துரத்தல்கள், துருத்தல்கள். 

இறுதியில், இருப்பதோ ஒரேயொரு அனுஷ்கா இரண்டு உலகிலும் சஞ்சரிக்கும் ஆர்யாக்களுக்கும். இரண்டு உலகிலுமுள்ள ஆர்யாக்களும் என்ன செய்வார்கள் என்று ரசிகர்களை கொஞ்சம் கவலைப்படவும் வைக்க முயற்சித்திருக்கிறார்.

எது எப்படியோ, கடைசியில் தமிழ்கலாச்சாரத்தை காப்பாற்றிவிட்டார் செல்வராகவன். செல்வராகவனின் கதைக்களத்தில் என்ன குறை என்று நான் நினைக்கிறேன் என்றால், இவர் ஆண், பெண் இருவரும் சார்ந்த காதல், கல்யாணம் என்பது அவர்கள் சுயாதீனமானக முடிவெடுத்து சுயமாய் வாழவேண்டும், அவர்களது முடிவின் அடிப்படையில் என்பதைச் சொன்னாலும், இவரது நாயக - நாயகியைப் பொறுத்தவரை ஏன் சமூகம் என்பது எப்போதும் ஒரு முடமானதாகவே இருப்பதை சித்தரிக்க மறுக்கிறார். இணையாய் ஆண் - பெண் வாழ்வில் சமூகத்தின் பங்குஎன்ன என்பதை ஏதோ குறியீடு போலப் பயந்து, பயந்தே காண்பிப்பது போல உள்ளது. 

வழமையான தமிழ் சினிமாக்களில் அழுவாச்சிக்காவியமாக காட்டப்படும் சில காட்சிகளை இயல்பாக அமைத்திருப்பது கவர்கிறது. தன் மனைவிக்கும், தன்னைப்போல இருக்கும் இன்னொரு ஆடவனுக்கும் இடையேயான உறவு இருப்பதாக நினைத்து, ‘கூசுதடி’ என்று ஆர்யா சொல்லுமிடம் இயல்பாய், அழகாய் கவர்கிறது. ஏன் செல்வராகவன், பெண்களுக்கு காதல் வந்தால் வாள் சுற்றமாட்டார்கள் என்கிற தமிழ்மரபை நீங்களும் காப்பாற்றியே தான் ஆகவேண்டுமா. உயிரா, சாவா என்கிற இடத்தில் அனுஷ்கா வெட்கப்பட்டே தான் ஆகவேண்டுமா! என்னமோ போங்க. 


இரண்டாம் உலகத்தின் Visuals, அனிருத்தின் பின்னணி இசை இரண்டையும் மிகவும் ரசித்தேன். சில பின்னணிகாட்சிகளின் இசையில் உடுக்கையும் இருக்குமோ!


பார்க்கலாம், Entertaining. ஆனால், நிச்சயம் ‘வர்ணா’வை எத்தனை ஆண்களுக்குப் பிடிக்கும்!! வர்ணாக்கள் புரிந்துகொள்ளப்படுவதில்லை.


நான் பொருத்திப்பார்த்த Beautiful Mind போல் இருவேறு உலகம் பொருந்தவுமில்லை. அவை சந்திக்கும் புள்ளியில் லாஜிக்கும் இல்லை.கதைக்குள்ளேயே அந்த இருவுலகங்களும் இணையும் புள்ளியில் லாஜிக் இன்னும் கொஞ்சம் வலுவாவனதாய் அமைத்திருக்கலாம். அனுஷ்கா வழக்கம்போல் வியாபாரக்குறியீடாய் ஆகியிருக்கிறார். 

இது கூகுள் ப்ளஸ் இல் அந்தியூரான் பழமைபேசி என்பவர் எழுதிய விமர்சனம். அவரது அனுமதியோடு இங்கே பகிர்கிறேன். 

”இரண்டாம் உலகம் அருமையான படைப்பு. அகமனத்தை முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய படம். எல்லாப் படங்களையும் போல நேரிடையான காட்சிகளால் கருத்துச் சொல்லக் கூடியதோ அல்லது வறட்டுக் கேளிக்கை விழுமியங்களால் ஆக்கப்பட்டதோ அல்ல இந்தப் படம். கதை இல்லை எனும் கருத்து எந்த அடிப்படையுமற்றதாகும். நல்ல படம் என்பது பல்விதமான படிமங்களைக் கொண்டே ஆக்கப்பட்டிருக்கும். படத்தைப் பார்க்கும் நுகர்வாளன், அந்த படிமங்களினூடாகப் பயணித்து கற்பனா சக்தியுடன் மனம் இருந்த வாக்கில் கதையை அமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைவதே நல்ல படம். அதன்படிதான் இப்படமும் படைக்கப்பட்டிருக்கிறது.

இரு உலகங்களை ஒரு சேரக் காண்பிப்பதன் மூலம் ஒரு மாய யதார்த்தவாதத்தை திரைப்பட நேயர்களுக்குள் நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அம்முயற்சிக்கு பாராட்டப்பட வேண்டியவர் அவர். புலன்களுக்கு வழமைப்படாத மாய அனுபவங்களைக் காட்டுவது போலவே துல்லியமான காட்சித் தன்மையுடனும் படிமங்களைக் காண்பிப்பதை கையிலெடுத்திருக்கிறார். அதாவது இயல்பானவற்றில் மாயத்தையும் ஒரு சேரக் கலப்பது. இப்படத்தில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திரிபுகளோ, மூட நம்பிக்கைகளோ அல்ல. ஒவ்வொரு படிமக்காட்சியும் ஏதோவொரு குறியீட்டுத்தன்மை கொண்டவை. அவற்றைப் பார்க்கத் தம்மைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். பழக்கப்படாதவர்களுக்கு படம் ஒரு எட்டாக் கனியாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இது போன்ற படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். தயவு செய்து எடுத்த எடுப்பில் படம் புரியவில்லை எனச் சொல்லும் போக்கை மக்கள் கைவிட வேண்டும். எவ்விதமான உழைப்புமற்று படம் புரியவில்லை என்பது படைப்பாளியின் ஆடைகளை உருவி அம்மணமாக ஓட விடுவதற்குச் சமமாகும்.



பொருள்வயமான உலகில் அடிப்படைக் காட்சிகளினூடாகக் கேளிக்கைகளைக் கொட்டிக் கொட்டிப் பழக்கப்படுத்தப்பட்ட வணிகப் படங்களுக்கு மத்தியில் படைப்பூக்கமும் புத்தூக்கமும் கொண்ட ஓர் அரிய படம் இரண்டாம் உலகம்.”

இது MSK Saravana என்பவர் எழுதியது கூகுள் ப்ளஸ் இல். 

”நாமிருக்கும் Milkyway Galaxy-ல மட்டும் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கு. இந்த மொத்த Observable Universe-ல மட்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் Galaxies இருக்கு. இதைத் தாண்டியும் இந்த Universe எவ்வளவு தூரம் விரிவடைந்திருக்குன்னு நமக்கு தெரியாது. நம் universe தவிர்த்து, அடுத்தடுத்த Universe/Universes இருக்கிறதா என்றும் நாமறியோம். நாமிருக்கும் பூமியில் கூட கார்பன் மூல உயிரினங்கள் மட்டுமல்லாது மீத்தேன் மூல பாக்டீரியாக்கள் இருக்கு. மில்லியன்கணக்கான விந்தணுக்கள்ல்ல நாம் மட்டுமே பிறந்திருக்கிறோம். இந்த மொத்த சராச்சரத்தின் ஒரே எளிய உண்மை Coincidence and Possibilities.

இங்க செல்வராகவன் ஒரு சின்ன fantasy possibility சொல்லியிருக்கார். இன்னமும் காதல் மலராத ஒரு வேற்றுலகத்துல, தன் காதலியையொத்த பெண்ணொருத்திக்கு, அதி அற்புதமான காதலையுணர்ந்த பூமியை சார்ந்த ஒருவன் காதல் உணர செய்கிறான், தன் பயணங்களை தொடர்கிறான். ரொம்பவே எளிய காதல் கதைதான். நிச்சயம் உங்களுக்கும் இந்தப்படம் பிடிக்கலாம், if you're not CYNICAL.

இங்கே, புவியில் நடக்கிற காதல் கதை typical செல்வராகவன் கதை. இது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வேற்றுலக காட்சிகள்தான் நம் மக்கள் சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கும். லாஜிக்/குறியீடு/க்ராபிக்ஸ் அது இதுன்னு மண்டையை உடைச்சிருப்பாங்க. நான் கொஞ்சமும் எதிர்பார்ப்பின்றி ரொம்பவே மொக்கையாயிருக்கும்ன்னு எண்ணத்தோடு எவ்வித முன்முடிவுகளுமின்றி ஒரு observer-ஆ படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.

The Fountain படம் மாதிரியெல்லாம் இல்ல. ஆர்யாவோட நடிப்பு வழக்கம்போல கொடுமை. அனுஷ்கா கொஞ்சம் அழகு, நிறைய முதிர்ச்சி. அனிருத் பின்னணியிசை சில இடங்களில் அருமை, சில இடங்களில் ஹாரிஸ் மாதிரி கொடுமை. ராம்ஜியின் ஒளிப்பதிவு அட்டகாசம். நிறைய துணைக்கோள்களை கொண்ட அந்த வேற்றுலகம் உயிர்ப்பு. Game of thrones மாதிரியான பறக்கும் ட்ராகன்கள் க்ராபிக்ஸ் அட்டகாசம். சிங்கம் யாளி, நரி பண்டோரா.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செய்த நிறைய தவறுகளை சரிசெய்து செல்வராகவன் கொடுத்திருக்கும் ஒரு நல்ல படம் இந்த இரண்டாம் உலகம். கொஞ்சம் அன்பும் பொறுமையும் கொண்டு பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் :)”


எனது இந்த சினிமா விமர்சனம் தேவையற்றதாகக் கூட இருக்கலாம். சினிமா வணிகமே என்றாலும் சில படைப்புகளுக்கான கிரடிட் கொடுக்கப்படவேண்டுமென்பதால் இப்பதிவு. 

Image Courtesy: Google


மாவீரர் நாளும் தமிழர் ஒற்றுமையும்!

$
0
0

வரலாறு அதன் அசைவியக்கத்தின் வழி மானுடவிடுதலைக்காய் சாதாரணர்களை சரித்திரநாயகர்களாக்கி பெரும் திருப்பங்களை, பிரளயங்களை உருவாக்கிச் செல்லும். உலகமே எப்போதும் வரலாற்று அச்சாணியின் சுழற்சியில் தான் தன்னை நகர்த்திக்கொண்டிருக்கிறது. எத்தனையோ இனங்களைப் போல, மக்கள்குழுக்களைப்போல தமிழர்களுக்கும் ஒரு தனித்தவரலாறு, அவர்தம் தனித்தன்மையோடு கூடிய அரசியல், பொருளாதார, நில, பண்பாட்டு, சமூகக்கட்டமைப்பும் அதுசார் வாழ்வியலும் மொழியும் கூட உண்டு. இவற்றின் மாட்சிமையும், மீட்சியும் தான் இலங்கை என்கிற நாடு பிரித்தானியக் காலனியாதிக்கதிலிருந்து விடுதலைவாங்கிய நாள்முதற்கொண்டு தமிழர்களுக்கு உரிமைகளாக மறுக்கப்பட்டும் வருகிறது. 

ஈழத்தில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கு அவப்பெயர் சூட்டிப்பார்க்க நினைக்கும் மனட்சாட்சியைத் தொலைத்தவர்கள் ஒருபுறமிருக்க, அனேகமாக ஒட்டுமொத்த உலகத்தமிழினமும் அவ்விடுதலைப் போராளிகளை கார்த்திகை 27 இல் வருடந்தோறும் நினைவுகூருகிறது. போரில் இறந்தவர்களுக்கான மரியாதை செலுத்துவதென்பது ஒரு சாதாரண மனிதாபிமான உணர்வு. அந்த உணர்வைக்கூட மதிக்காத சிங்கள பெளத்த பேரினவாதப்பிடியில் இன்றும் சிக்குண்டு கிடக்கிறது ஈழத்தின் வடக்கும், கிழக்கும். ஒன்றுகூடத்தடை, விளக்கோ, மெழுகுவர்த்தியோ ஏற்றத்தடை, சுவரொட்டிகள் ஒட்டத்தடை. இப்படி எத்தனையோ தடைகளைத் தாண்டியும் எப்படியோ தங்கள் வணக்கத்தை மானசீகமாவேனும் இதயசுத்தியுடன் செலுத்த தவறியதில்லை ஈழம்வாழ் தமிழர்கள். 

புலம்பெயர் தேசங்களில் இன்னும் பூரணமான ஒன்றுபட்ட ஒற்றுமை தமிழர்களிடையே தமிழ்தேசிய விடுதலை குறித்த அரசியல் முன்நகர்வுகளில் இல்லை என்கிற பெரும்குறை இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்தது போன்ற போட்டிகள் அதிகம் இல்லை என்றே தோன்றுகிறது மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் நடத்துவதில். 

ஒரு விடுதலைப்போராட்ட வரலாற்றின் சின்னங்கள் தான் இதுபோன்றதொரு நிகழ்வில் சுமைகளைச் சுமக்கும் அடையாளங்களாய் விளங்குவதுமட்டுமல்ல, அவையே ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளாகவும் பதியப்படும். இன்று தமிழர்கள் மண்ணில் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் கட்டப்பட்ட தலைவர்கள் சிலை முதல் விடுதலைப்போரின் வரலாற்றுச் சான்றுகளாய் திகழ்ந்த அனைத்தும் அழிக்கப்பட்டே வருகின்றன, தந்தை செல்வா சிலை முதல் மாவீரர் துயிலும் இல்லங்கள் வரை. 


இந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற தமிழறிஞர்கள், தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் முதல் ஈழவிடுதலைபோரின் தார்ப்பரியங்கள், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் சிற்பக்கலைகள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கான Strategic/Historical Location selection குறித்த கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தன. அவற்றை சமூகவலைத்தளங்களில் கேள்வியாக்கிய போது எனக்குக் கிடைத்த இரு பதில்கள் இவை. 

என் அறிவுக்கு எட்டியவரை தஞ்சாவூர் என்பது தமிழ்மன்னர்களான சோழர்களின் ஆட்சியில் புலிக்கொடி பறந்த ஊர் என்கிற அளவே. அதற்கும் மேல் இப்படியும் காரணம் இருக்கிறது என்றார் கே. ஆர். பி. செந்தில். 

மேலும் ஒருங்கினைந்த தஞ்சைப் பகுதி(தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்) மக்கள் மிகுதியாக ஈழத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள். வேதரண்யத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரைக்கும் விசா இல்லாமல் வரலாம், திருமணம் முடிக்கலாம் என அனுமதி இருந்தது. கோடியக்கரை எப்போதும் யாழிற்கு பக்கத்து ஊரும் கூட, என்ன குறுக்கே முன்பு கொஞ்சம் கடல் இருந்தது. இப்போது இந்திய- இலங்கை அரசுகளில் சுயநலம் இருக்கிறது.” 

இதற்கு விந்தைமனிதன் ராஜாராமன் என்பவரின் பதில் இப்படி இருந்தது. 

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் புரவலருக்கு சொந்த ஊர் விளார் என்பதாகவும் இருக்கலாம்!”

இதைத்தொடர்ந்து வந்த விவாதங்களில் விந்தைமனிதன் ராஜாராமனின் கருத்துகளின் சில பகுதிகள் இங்கே. 

அஸ்தினாபுரத்துக்குத் தூதுசென்ற கண்ணன், பொன்னும் மணியும் வேயப்பட்ட துரியோதன மாளிகையில், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தங்கத்தட்டில் நிறைந்த அறுசுவை உண்டி வேண்டாமென்று விதுரனின் குடிலுக்குச் சென்று பழைய சோறு சாப்பிட்டானாம்!

கலைஞர்கள் தம் உணர்வையும் உழைப்பையும் சிந்தி உழைத்த கலைக்கூடம்தான்! அங்கே இருப்பது எம் தமிழ் உறவுகளின் ரத்தமும் ஜீவனும் கசியும் கண்ணீர்க்கதைகளின் காட்சிகள்தாம்! ஆனால்... !

மானத்தோடும் சுதந்திர தாகத்தோடும் வாழ்ந்து மண்ணில் விதையான போராளிகளுக்கும், மக்களுக்கும் நினைவுச்சின்னம் ஒரு மாஃபியாக்கும்பலின் பணத்தில்!

ஒவ்வொரு நாளும் உழைத்துத் தன் சுயசம்பாத்தியத்தில் வீதிக்கு வந்து நம் உறவுகளுக்காகப் போராடினார்களே... அரசுக்கலைக்கல்லூரியிலும், பாலிடெக்னிக்கிலும் படித்துக் கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் குழந்தைகள்! அவர்களிடம் துண்டேந்தி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வாங்கி ஒரு நினைவுக்குடிசை கட்டி இருந்தால் அது காலத்துக்கும் தன்மானத்தோடு நிமிர்ந்து நின்று அழியாச்சின்னமாகி இருக்குமே?! இன்னும் கீழ்வெண்மணிக்குடிசைகளில் சாம்பலாய்ப்போனவர்களின் ரத்தசாட்சியாய் நிமிர்ந்து நிற்கின்றதே வெண்மணி நினைவுச்சின்னம்?!

இன்று புரச்சியம்மாளின் கருணைப்பார்வைக்காய் ஏங்கும், கோபப்பார்வைக்காய் நடுங்கும் நெடுமரங்களிடம் இல்லை ஈழத்தின் நினைவுச்சின்னம் என்பதை அப்பாவித் தமிழுணர்வாளர்கள் உணர்வார்களா?!

விளாரில் அமைந்த காரணம் சோழமோ, புலிக்கொடியோ, தஞ்சைக்கும் ஈழத்துக்குமுள்ள உறவோ அல்ல! ‘புரவலர் பெருமானின்’ சொந்த ஊர் மட்டுமே காரணம் என்பதைச் சிந்திப்பார்களா?”

மேலேயுள்ள கூற்றொன்றிற்கான பதில் இது....

//மாஃபியாக்களின் பணத்தில் மக்கள் விடுதலைப்போர் வென்றதில்லை என்பது வரலாறு//

”புலிகளையே மாஃபியாக்கள் என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பவர்கள் உள்நோக்கம் என்பது மட்டமான பார்வையாக இருக்கிறது. முள்ளி வாய்க்கால் முற்றம் எனபதின் நோக்கத்தை கொச்சைப்படுத்துவது மோசமான அடிப்படைவாதிகளின் சுயநலம்..”

இதற்கு மேலும் விவாதத்தில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவை இந்தப் பதிவில் தேவையற்றது என்பதால் தவிர்க்கிறேன். 

ஆக, ஈழத்தமிழர்களோ, தமிழகத்தமிழர்களோ இன்னும் எதிரிக்குச் சாதகமாகவே எமக்குள் நாமே சேற்றை வாரி இறைத்துக்கொண்டு ஒரு இனப்படுகொலையின் பின்னான விடுதலைக்கான நியாங்களை மறந்துபோக ஏதுவாகிறது இதுபோன்ற வாக்குவாதங்கள். இந்த மாவீரர் நாளிலேனும் வருடந்தோறும் தமிழர்கள் தங்களுக்குள்ளான ஒற்றுமையை மீட்டெடுப்போம் என உறுதிகொள்வது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, வரலாற்று கடமையும் கூட. 

ஈழவிடுதலைப்போரின் மாண்ட அனைத்து வீரர்களுக்கும், அப்பாவிப் பொதுமக்களுக்கும் மாவீரர் தின வணக்கங்கள். 




Image Courtesy: Google.


தமிழ் சினிமாவோடு.....!

$
0
0

தொழில்நுட்பம் வளர்ந்ததன் விளைவாக எவ்வளவோ பொழுதுபோக்குகளை ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி தொடர்களாகக் கண்டுகளித்துக்கொண்டிருக்கிறோம். சாதாராண இசை, நடனப் போட்டி நிகழ்ச்சிகளிலிருந்து தங்கள் படுக்கையறையின் அந்தரங்கங்கள் வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி பொருள் வெற்றியீட்டும் ஆர்வத்துடன் பங்குபற்றிக் கொள்கிறார்கள் பலர். திரைப்படங்களும் அதற்கான எத்தனை பரிமாணங்கள் உண்டோ அத்தனையும் தொட்டுவிட்டு பார்வையாளனை பார்த்து சிரிப்பது போலுள்ளது.

இப்படித் தான் ஒவ்வொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அதனதன் தார்ப்பரியங்களை, வியாபார உத்திகளை வளர்த்து கருத்து திணிப்புகளையும் பெரும்பாலும் செய்கின்றன. ஆசைகளை மனதில் விஸ்தரிக்கும் தூரங்களுக்கேற்ப வாழ்க்கையின் வட்டக்கோட்டை விஸ்தரிக்க முடியாமல் கட்டுப்பட்டவர்கள், தவிப்பவர்கள் கற்பனைத் தேரில் ஊர்வலம் போக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஏது சமைக்கிறது. இதுபோன்ற படைப்புகளில் எது தேவை என்பதை விட எது அதிகம் சுவாரஸ்யமானது என்பதே அன்றாடவாழ்வில் மனவழுத்தங்களைக் குறைக்கத் தேவையாகிறது பெரும்பாலானவர்களுக்கு. திரையில், பெரிய மற்றும் சின்னத்திரை, பார்க்கும் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போய் அந்தக் காட்சிகள் முடிந்தபின்னும் அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாதவர்களாய் (Dissociate) இருக்கும்போதும் உளவியல் பிரச்சனைகள் தோன்றுவதாக அண்மையில் இங்கே ஒரு மனநலம் சார்ந்த நிகழ்ச்சியில் ஒரு மனோதத்துவ மருத்துவர் குறிப்பிட்டார். அது புலத்தில் தமிழர்கள் மனநலம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியாக நடைபெற்றது.

நான் பாதியிலிருந்து தான் நிகழ்ச்சியைப் பார்க்கத்தொடங்கினேன். அதிலிருந்து, அந்த மருத்துவர் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தமிழ் திரைப்படங்கள் உளநல குறைபாடுகள் குறித்து பேசும்போது சரியான முறையில் விளக்கவோ, எடுத்துரைக்கவோ படாமல் மேலோட்டமாக எதையாவது சொல்லிச்செல்கிறது என்று குறிப்பிட்டார். அவர் உதாரணமாகக் குறிப்பிட்டவை சந்திரமுகி மற்றது அந்நியன் படக்கதாபாத்திரங்களின் பாத்திரப்படைப்புகள். அவர் சொல்லவந்தது என்று நான் புரிந்துகொண்டது இதுதான். இதுபோன்ற திரைப்படங்களில் நகைச்சுவைக்காகவோ அல்லது ஒரு சுவாரஸ்ய உந்துதலுக்காகவோ எதையோ சொல்லும்போது மனநல தாக்கம் பற்றி அதிகம் சரியானபடி விளக்கப்படாமல் அப்படி யாதார்த்த வாழ்வில் ஒருவருக்கு ஒரு பிரச்சனை இருக்கும்போது அது சாதாரணமான ஒன்று என மக்கள் நம்பும் அபாயம் இருக்கிறது என்பது தான்.


அந்நியனினில் ஏகப்பட்ட க்ராஃபிக்ஸ் காட்சிகளில் அதீதப்படுத்தப்பட்ட, யதார்த்தம் மீறிய மனநலக்குறைப்பாடுகளின் அறிகுறிகள், சந்திரமுகியில் ஜோதிகா ஒற்றைக்கையில் ஒரு தேக்கு மரத்தில் செய்த கட்டிலை தூக்குவது (க்ராஃபிக்ஸ்ல் தான்), ஆண்குரல் போல் கரகர குரலில் பேசுவது, பேய் என்றால் வெள்ளைப் புடவையில் தான் வரும் என்பதெல்லாம் தமிழ் சினிமா கற்றுக்கொடுத்தது தான். அதே போல் 555 என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் மனநிலை பாதிக்கப்படாத நாயகனுக்கு ஞாபகசக்தியை இழக்கச்செய்யவே கொடுக்கப்படும் பாரதூரமான சிகிச்சை முறைகள் என்பதான காட்சிப்படுத்தல்கள் மிக மோசமான வழிநடத்தல்கள். இதெல்லாம் பார்த்தால் எப்படி இதுபோன்ற சிகிச்சை முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை வரும். எப்படி இப்படியெல்லாம் தமிழ் சினிமாவில் இவர்களால் காண்பிக்கமுடிகிறது என்று ஸ்தம்பிக்கவைத்த ஒரு காட்சி. இது எப்படி தணிக்கைக் குழுவின் பார்வையிலிருந்து தப்பியது. சினிமாவை சினிமாவாகவே கடந்துபொகவேண்டியது தான். தமிழ் சினிமா தன்னைத் திருத்திக்கொள்ளப்போவதில்லை என்பதும் யதார்த்தமே.

விஞ்ஞான தொழில்நுட்பவளர்ச்சியின் உச்சத்தில் எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு விளையாட்டுக்களும், அதற்கான Games, அதை கடையில் Toys ஆக வாங்கி மீண்டும் அந்த உலகத்தை உள்வாங்கியபடி தன்னை அதனோடு இணைத்தபடியே வளர்ந்துவருகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னர் சினிமாவின் திரையில் காண்பது போலான விம்பம் குறித்த கற்பனைகளில் தன்னை கற்பிதம் செய்துகொள்கிறது வயது. 

இந்த மாயையான கற்பனைகளின் கற்பிதங்களில் தன்னைத் திணித்து பார்ப்பது என்பது எல்லார் மனதிலும் பொதுவாக உருவாகுவது தான் என்றும் அவர் குறிப்பிடத்தவறவில்லை. அது ஒன்றும் அசாதாரணம் கிடையாது என்றும் விளக்கினார். ஆனால், அதிலிருந்து தொடர்ந்தும் தன்னை ஒருவர் விடுவித்துக்கொள்ள முடியாத போது தான் அது உளநலக்கூற்றின் பிரச்சனையாக உருவாகிறது என்கிறார். அவர் பொதுவாக எல்லாருக்குமாக இதைச் சொல்லவில்லை. கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இப்படி விளக்கமளித்தார். சில மனநலைக்குறைபாடுகளுக்கான அறிகுறிகள் பெற்றோரால் கவனிக்காமல் விடப்பட்டு குழந்தைகள் வளர்ந்தபின் அதுவே இன்னும் அதிக தாக்கத்தோடு அவர்களைப் பாதித்திருக்கலாம் என்பதை விளக்கினார்.

எது எப்படியோ நான் சொல்லியா உலகம் திருந்தப்போகிறது என்பதில்லாமல் ஒரு விழிப்புணர்வை சமூகத்தில் கொண்டுவந்தாலே போதாதா என்பதால் ஏதோ எழுத்தத்தோன்றியது. நாங்களும் உழைத்து களைத்து, அலுப்பை தீர்க்கவே கலைப்படைப்புகளை நாடிப்போகிறோம். இது பொழுதுபோக்கு தான். ஒரு நான்கு மணிநேரம், அதற்குண்டான செலவு என்பதெல்லாம் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கவேண்டுமா. ஏன், அதில் உண்மைநிலைகளை மருந்துக்கேனும் சொல்லக்கூடாதா! அதில் கொஞ்சம் யதார்த்தத்தையும் கலந்தாற்தான் என்ன கெட்டுவிடும். 


அண்மையில் கேட்டு, பார்த்த ஒரு இனிமையான பாடல் இது. கேட்க நன்றாகவே இருப்பது காட்சியாய் காண சுவைக்கவில்லை. பதின்பருவம், அதற்குப் பின்னான ஒரு வாழ்வியல் அனுபவத்தை ஏன் இந்த வயதினரிடம் வலிந்து கலை என்கிற பெயரில் திணிக்கவேண்டும் என்று தோன்றியது. எல்லாமே வியாபரமயமாகிவிட்டபின்னர், அதைப் பற்றி விமர்சித்தால் விமர்சிப்பவர் ஊரோடு ஒத்துவாழாதவர் ஆகலாம். எது எப்படியோ நான் பாட்டை கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.


Image Courtesy: Google.

வாழ்க்கைப் படிமங்கள்

$
0
0
கருத்துகளால் வனையப்பட்டவர்கள் தான் எல்லோரும். அதை எவ்வளவு தூரம் நாம் வெளிப்படுத்துகிறோம் என்பது பொறுத்தே மற்றவர்களால் அறியவும், புரியவும் படுகிறோம்.

எனக்கும் என்னுடைய தனிப்பட்ட வாழ்வு அனுபவங்கள் தவிர ஈழம் குறித்த அரசியல் அடிப்படையிலேயே என்னுடைய கருத்துகள், சிந்தனைகள் evolve ஆகிறது.

பொதுவா சில நேரங்களில் இதுக்கா இவ்ளோ வெட்டியா விவாதம் செய்தேன் என்று தோன்றும், சிரிப்பும் வரும். இருந்தாலும் எல்லோரையும் போலவே என்னுடைய கருத்துகளோடு நான் நலம்.
 
 
இளமை


 










                                                                மத்திமம்









அந்திமம்



 

 
வர்ணங்கள் குழைத்துப் பூசிய
கனவுகளை
விலக்கிவைத்தே பார்க்கிறது
ஞானங்களால் நிரம்பிய ‘நான்’.
கலைத்துப்போடத் தேவையற்ற
வேஷங்களற்ற வாழ்க்கை.
 
 
 
கடவுளே, கடவுளே என்னைய மட்டும் காப்பாத்து :))
 
 
 
நாட்களாய் உதி்ரும்
நம்பிக்கையாய் மலரும்
அவநம்பிக்கையாய் வெறுப்பூட்டும்
அனுபவங்களாய் இறுமாப்புக் கொள்ளும்
சின்னச் சின்ன சந்தோசங்களில் வியாபிக்கும்
மனம் போல் வாழ்க்கை
என்னை எனக்குள் சிறைவைக்கும்.

 

Read these lines in Google Plus. I like them.

“If you can't convince them, confuse them.” - Harry S. Truman


If you can't blind them with brilliance, baffle them with bullshit...

 
படித்ததில் பிடித்தது......
 
Human beings exist in a state of constant warfare and experience life as "nasty, brutish, and short. People fear anarchy enough to surrender their freedom to an absolute ruler in exchange for peace, security, and the rule of law. - Thomas Hobbes. (Source: Unknown)
 
Images and Quotes from Google Plus.

2013, மீட்டவை!

$
0
0

2013, இன்னொரு வருடம். தன் வருட முடிவுக்கான நாட்களை எண்ணியபடி நிறைவுபெற்றுக்கொண்டிருக்கிறது. காலம் நிகழ்த்திச் செல்லும் அரசியல், வாழ்வியல், பொருளியல் மாற்றங்களை வருடம் மாதம், நாள், கிழமை என்று ஞாபகப்படுத்திக் கொண்டாடுவது வரலாறாகிவிட்டது. வரலாறு என்று தனியாய் ஏதுமில்லை. மனிதவிடுதலையே வரலாறாக கொள்ளப்படுகிறது. மனிதவிடுதலையே மனிதர்குலம் சென்றடைய வேண்டிய இலக்கு என்றாலும் வாழ்வியல் நிகழ்வுகளில் பொழுதுபோக்குகள் என்று இந்த வருடத்தில் எனக்குப் பிடித்தது என்று திரைப்படங்களை, பாடல்களை, வியாபாரநோக்கில் முக்கியப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைப் பட்டியலிட எனக்குத் தோன்றவில்லை. மாறாக, ஈழம் குறித்தே என்ன நடந்தது என்று திரும்பிப்பார்க்க வைக்கிறது. ஒரு தேசிய இனமான மக்களுக்கு (Peoples) கிடைக்கும் விடுதலை என்பதும் மானிடவரலாற்றின் ஒரு அசைவே.

அரசியல் விடுதலை பெறும் ஒரு இன மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பானது, உலகநடைமுறைகளோடு ஒத்துப்போவது, தங்களை பொருளாதார, அரசியல் ரீதியாக கட்டமைத்துக்கொள்வது என்பதான் பண்புகள், நெறிகளோடு; தம்மைத்தாமே ஆள்வதற்கு தகவமைத்துக்கொள்ளும் அரசநிர்வாக, ஆட்சி நிறுவனங்களின் கட்டமைப்புக்குக் கட்டுப்படும் அதேநேரம், கெளரவமாகவும், மனித உரிமைகளோடு சுதந்திரமாகவும் வாழவே விரும்புகிறார்கள். இருந்தும், ஒரு தேசிய இனம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவலப்படும்போது , தனக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க,வரலாற்று தேசத்தை கட்டியமைக்க செத்துப்பிழைக்கவேண்டியிருப்பதை நினைக்கும் தோறும்; கடந்தகால மனிதவரலாற்றைப் படிக்கும்போது மனதில் நிகழ்காலமும் இறந்தே பிறக்கிறது என்பதாய் தோன்றுகிறது. 

பாறைகளை முட்டி, மோதி முளைத்துக்கிளம்பும் சின்னஞ்சிறிய ஒற்றைச் செடியாய் அடிமைவாழ்விலிருந்து அரசியல் விடுதலைப் பெற மக்கள் இழந்ததும், இழந்துகொண்டிருப்பதும் ஏராளம். மனிதவிடுதலை முற்றுப்பெற்றுவிட்டதாய் நிறுவமுற்படும் அரசியல் தத்துவங்களும் உண்டு. முதலாளித்துவமும் ஜனநாயகமுமே மனிதன் தன்னை ஆள்வதற்கான தீர்வான அரசியல் மற்றும் சனநாயக நிறுவனங்கள் என தீர்மானமாக நிறுவமுற்படுவதால் அனைவருக்கும் அரசியல் விடுதலை கிடைத்துவிட்டது என்று நம்பவேண்டுமா! ஆள்வதற்கு வசதியாய் ஆயிரம் வழிவகைகளைக் கண்டுபிடித்தவர்கள் விடுதலைக்கான சர்வதேச சாசனங்களை, நியதிகளை, நீதிகளை அவரவர் வசதிக்கேற்றாற்போல் மறந்தும், மறைத்தும் விடுகிறார்கள். கிடைப்பதை, இருப்பதில் சிறந்ததாய் திணிக்கப்படுவதைத் தேர்ந்தெடுத்து திருப்திப்பட்டுக்கொள்ள மனிதவிடுதலையும் சுதந்திரமும் என்ன முதலாளித்துவச் சந்தையின் பண்டமா!

தமிழீழவிடுதலை கேட்டு சாத்வீக வழிகளிலும், ‘அரசியல்’ வன்முறையின் வழிகளில் ஆயுதப்போராட்டத்தின் வழி கேட்டபோது எப்போதும் புறக்குடத்தில் நீராய் ஊற்றப்படுவது, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு.’ தீர்வு கொடுக்க மனமிருப்பவனுக்கு எதுக்கு ஆறு அல்லது ஏழு தசாப்தங்கள்! உலகம் தரமறுக்கும் நீதிக்காய், நாங்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வுக்காய் போராடிப் போராடி இனவழிப்பின் கொடுமையையும் தாண்டமுடியாமல் இன்னும் எங்கள் மண்ணை, மக்களை காப்பாற்று என்று அபயக்குரல்  எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இந்த அபயக்குரலை ஒலித்தபடி அவ்வப்போது இன்னும் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும் ஒரு சில நீதியைப் பிழைக்கவைக்கும் அமைப்புகள் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற சர்வதேசம் உணர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உண்மையைப் போட்டுடைத்திருக்கிறார்கள். தமிழர்கள் இலங்கையில்  இன்னும் இனப்படுகொலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையை உரைக்கிறார்கள்.

மேலே தொடர்வதற்கு முன் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples' Tribunal) பற்றி ஓரிரு வரிகள். இந்த அமைப்பு 1979 இல் இத்தாலியில் Bologna என்கிற இடத்தில் உருவாக்கம் பெற்றிருக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவது, எந்த ஒரு நாட்டின் அரசையும் சாராத, சுயாதீனமான அமைப்பு என்று தன்னை கட்டமைத்து செயற்பட்டுவருவதாய் சொல்லப்படுகிறது. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அவற்றை விசாரணை செய்கிறது. இதில் நீதிபதிகளாக அங்கம் வகிப்பவர்கள் சர்வதேச அளவில் பிரபலமான நீதிபதிகளும், நோபல் பரிசு வாங்கியவர்களும் அடங்குவர். 

புலம்பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்ட ஒரு சில சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பான, ‘இலங்கையில் நடந்தது தமிழின இனப்படுகொலை’ என்பது இந்தவருடத்தின் தமிழர்களின் ஈழவிடுதலை நோக்கிய ஒரு சிறியவெற்றியே. இலங்கை அரசு போர்க்குற்றவாளி என்கிற தீர்ப்போடு தமிழர்களின் நிலங்கள் தொடர்ந்தும் தமிழர்கள் பகுதியில் சூறையாடப்படுவதும்; தமிழர்களின் பிறப்புவீதத்தை குறைப்பதற்கான இலங்கை அரசின் திட்டங்களையும் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பான குற்றமாக இலங்கை அரசின் மீது வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவோ அல்லது தங்கள் மீதான நம்பகத்தன்மையை இன்னும் மக்கள் விட்டுவிடக்கூடாது என்கிற நோக்கிலோ ஐக்கிய நாடுகள் சபையின் உரிய பிரதிநிதிகளும், ஐ. நா. இலங்கையில் போரின் உச்சக்கட்டதின் போது தன் (திட்டமிடப்பட்ட) செயலின்மையை பட்டும், படாமலும் ஒப்புக்கு "Systematic Failure"என்று ஒப்புக்கொள்கிறது. சார்ள்ஸ் பெற்றி என்பவரின் ஐ. நா. வின் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான நடவடிக்கைகள் குறித்த உள்ளக அறிக்கை யாவரும் அறிந்ததே. இருந்தும், அண்மையில் கூட ஐ. நா. வின் பிரதி செயலர் Jan Eliasson தங்கள் செயலின்மையை அராயோ, ஆராயோ, ஆரோயோ என்று ஆராய்ந்து இப்பொழுது 'Rights Up Front'என்கிற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்களாம் செயற்திட்டத்துக்காக, அதாவது 'Action Plan.' 

2008 இன் இறுதிப்பகுதிகளில் கிளிநொச்சியில் இருந்து இவர்களின் மனிதாபிமான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களிடம் நீங்கள் போனால் நாங்கள் சாட்சியின்றி கொல்லப்படுவோம் என்கிற தமிழர்களின் கூற்று முதல் ஆரம்பக்கட்டத்திலேயே இறந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கையை குறைத்தும், மறைத்தும் செய்த களவுநாடகங்களை, ஐ. நா. வின் செயலற்றதன்மையை ஈழத்தின் இறுதியுத்தம் சம்பந்தமாக இன்னர் சிட்டி பிரஸ் தன் செய்திக்குறிப்பில் சொல்லிச்செல்கிறது. ஐ. நா. பிரதி செயலர் மறுபடியும் சொல்வது, “Never again"என்று சொல்லிவிட்டு ஐ. நா. மறுபடியும், மறுபடியும் ஐ. நா. செயலர் மட்டும் தோற்கவில்லையாம், கூடவே அங்கத்துவ நாடுகளும் தோற்றுவிட்டனவாம். அவர் உதாரணமாய் கூறுவது ருவாண்டா. ருவாண்டாவில் நடைபெற்றது இனப்படுகொலை என உலகமே ஒப்புக்கொண்டது. அப்படியானால் ருவாண்டாவில் நடந்தது போல ஈழத்தில் நடந்ததும் ‘இனப்படுகொலை’ என்று தன்னை அறியாமலே உள்ளுக்குள் ஒத்துக்கொள்கிறாரா இந்த கனவான். அதை வெளிப்படையாக எப்போது சொல்வார்களோ! ஐ. நா. வின் செயலற்ற தன்மைகளைப் பேசினால் ஆயுளுக்கும் அதைப்பற்றியே பேசி காலவிரயமும் அயற்சியும் மட்டுமே மிஞ்சும். 

அடுத்து, இந்த வருடம் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகள் மற்றும் பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் உருவான நாடுகளின் விளையாட்டு அமைப்பான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகளில் பங்குகொள்ளும் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தொடர் இலங்கையில் நடைபெற்றது. உலகெங்கும் வாழும் தமிழர்களின் எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளை எல்லாம் சேர்த்தும், கரைத்தும் நடந்துமுடிந்திருக்கிறது. மருத்துவர் பிரயன் செனிவிரட்னே சொல்வது, இலங்கையில் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாக ராஜபக்‌ஷேவை பொறுப்புக்கூற (Accountability) வைப்பதை பொதுநலவாய நாடுகளின் தலைமைகள் செய்யும் என்று நம்புவர்கள் 'realpolitik'தெரியாதவர்கள் என்று. 

ஐ. நா.வின் மனித உரிமைகள் சபையின் ஆணையர் நவநீதம்பிள்ளை சொல்வது போல், இலங்கை  ஏதேச்சாதிகார ஆட்சியின் திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அது தமிழர்களு மட்டுமல்ல, சிங்கள மற்றும் மற்றைய இனசமூகத்துக்கும் இலங்கையில் அச்சுறுத்தலே. எப்படியோ, பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தொடரில் பங்குபற்றிய பிரித்தானியக் கூட்டமைப்பின் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் இறுதி யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு ‘சுயாதீன விசாரணை’ தேவை என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார். 1799 ம் ஆண்டில் இலங்கையில் மூன்று ராச்சியங்கள் இருந்தது, தமிழர்களின் கோட்டை ராச்சியம் உட்பட, என்று ஒப்புக்கொண்டவர்கள் பின்னர் 1833 ம் ஆண்டு Colebrooke - Cameron Reforms என்று மூன்று ராச்சியங்களையும் ஒன்றாக்கி, இன்று ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு முதற்புள்ளி வைத்த பிரித்தானியாவுக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அதிகம் பொறுப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார் திரு.செனிவிரட்னே. (The British Owe a Lot to the Tamil People, November 14, 2013). அரசநிர்வாகம் முதல் அரச ஆட்சி நிறுவனங்கள் வரை எல்லாமே தோற்றுப்போன இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான அரசியல் உரிமைக்காகப் பேசவேண்டிய, செயற்படவேண்டிய கடமை பிர்த்தானியாவுக்கு உண்டு. 

அதே நேரம் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் இலங்கை அரசு இப்படி ஒரு இனப்படுகொலையை தனியாக செய்துமுடிக்க சக்தியற்றவர்கள். இதற்கு ஐக்கியராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் துணைப்போதலும் இருந்திருக்கிறது என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். இவ்வண்ணம் குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிடம் தமிழர்கள் இன்னும் வலுவான கோரிக்கைகளை வைத்தவண்ணமே இருக்கிறார்கள், தமிழர்களின் அரசியல் நிர்ணய உரிமைகள், மற்றும் தமீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு என. ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை நிறுவ இன்னும் ஆதாரம் தேவை என்கிறது நிரந்தர மக்கள் தீர்ப்பாயம். காலங்காலமாக தமிழகத்தின் சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்கள் சார்பில் இயற்றப்படும் தீர்மானங்கள் எழுத்து வடிவில் அமோகமாகவே இருந்தன, இருக்கின்றன. அவற்றை எல்லாம் மத்தியில் கிடப்பில் போட்டுவிட்டு, இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்கள் ஈழத்தமிழர்கள் தலையில் மண் அள்ளிப்போடுவதையே வரலாற்றுக் கடமையாகவும் கொண்டிருக்கிறார்கள். 


எது எப்படியோ, தொடர்ந்தும் சர்வதேசத்துக்கு தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும், தமிழீழத்துக்கான சுதந்திரமான பொதுவாக்கெடுப்பும் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடம் நடத்தப்படவேண்டுமென அழுத்தம் கொடுக்கப்படவேண்டுமென அரசியல் ஞானம் உள்ளவர்கள் கருத்து சொல்கிறார்கள். இனி வரும் 2014 வது ஆண்டாவது தமிழர்களுக்கான ஒரு நல்ல தீர்வுக்கான திட்டத்தை கொண்டுவரும், சர்வதேசத்திடமும் இருந்து அவர்களால் தமிழர்களுக்கு இளைத்த குற்றங்களுக்கான தீர்வும் கிட்டும் என்கிற நம்பிக்கையுடன்! 

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2014 இனிமையாக அமையட்டும் அனைவருக்கும். 

Image Courtesy: Google. 


தமிழருக்கு வாய்த்த பிரதிநிதிகள்!

$
0
0
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை 25வது கூட்டத்தொடரில் இலங்கையின் தமிழர்களுக்கு தீர்வு சொல்லாத, தமிழர்களின் இனப்படுகொலையை ஒப்புக்கொள்ள மறுக்கிற, தமிழர்களால் மட்டுமல்ல சர்வதேச அமைப்புகளால் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அமைக்கப்படாததும், நடத்தப்பட்டதுமான நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை, மற்றும் அறிக்கையின் பரிந்துரையின் பிரகாரம் ஏதோ மனித உரிமைப் பிரச்சனை மட்டுமே எங்கள் பிரச்சனை என்கிற ரீதியில் மறுபடியும் பேசப்போகிறார்கள். அதற்காக இப்போது முஸ்தீபுகள் நடைபெறுகின்றன. 

அவை எவை என்று பார்த்தால், இந்தியாவிலிருந்து ஒரு குழு தமிழர்களை வடக்கில் சந்தித்தது. அமெரிக்காவின் பிரதி ராஜாங்க மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான நிஷா தேசாய் பிஸ்வால் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சகிதம் யாழ்ப்பாணத்தில் மரியாதைக்குரிய ஆயர் தோமஸ் சுந்தரநாயகம் முதற்கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு அனந்தி சசிதரன் மற்றும் சிலரை சந்தித்து அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு பேசுவதாக செய்திகள் சொல்லுகின்றன. 

குறிப்பாக, யாழ்ப்பாண ஆயர் இனப்படுகொலை நிகழ்ந்தமைக்கான விசாரணை வேண்டும் என்கிற வேண்டுகோளுக்கு அமெரிக்க பிரதிநிதிகள்   மீளிணக்கத்தை வலியுறுத்திப் பேசியதாக செய்தி. கூடவே, காணாமற்போனோருக்கு என்ன கதி என்பதை பற்றியும் அறிய உதவும்படி அவர்களிடம் ஆயர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதையெல்லாம் கேட்டு மனித உரிமைகள் சபையில் தமிழர்களுக்காகப் பேசுமாம் அமெரிக்கா. நாங்கள் நம்பத்தான் வேண்டும்!

தமிழர்களுக்காகப் பேசவேண்டுமெனில் ஐ. நா. வின் பொதுச்சபையில் பாலஸ்தீனியப் பிரச்சனையைப் பேசியது போல் ஈழத்தமிழர்கள் பிரச்சனையைப் பேசலாம். ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள், இன்னும் தமிழர்களுக்கெதிரான மொழி, கல்வி, கலாச்சார, அரசியல், பொருளாதார, இனப்படுகொலை தொடர்கிறது என்று தமிழர் தரப்பு வேண்டுவதைப் போல உண்மையைப் பேசலாம். அதுதானே நியாயமும் கூட. அப்புறம், நீங்கள் மன்னார் புதைகுழிப் பிணங்களுக்கான விசாரணை பற்றி ஏதும் கேட்கவில்லையா! அது தமிழர்களின் எலும்புக்கூடுகள் என்று மன்னார் ஆயர் குறிப்பிட்டு சொன்னதாக AFP செய்தி வெளியிட்டிருந்தது. 

ஏற்கனவே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஈழத்தில் 2009 ம் ஆண்டு நிகழ்ந்தது இனப்படுகொலை என திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கியதும்; இலங்கை தன் முயற்சியில் மட்டும் இந்த இனப்படுகொலையை நடத்தி முடிக்கும் வல்லமையற்றது. அதற்குத் துணைபோனவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இன்னும் நிரூபிக்க ஆதாரம் வேண்டும் என்கிற இந்தியாவின் பங்கு வரை தீர்ப்பாயம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. 


தமிழர்களின் தலைவிதியே இதுதான் போலும். ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்ய முன்நின்று உழைத்த சிங்கள ராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமிழ்தேசிய கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்ந்து தமிழர்களை அவரைக்கூட ஆதரிக்கும் நிலைக்கு தள்ளியது முதல் அமெரிக்கா, பிரித்தானியா வரை மிகவும் நல்லவர்கள் என்று நம்பும்படி நம்மை எட்டித்தள்ளும் இடக்கு முடக்கான எட்டிக்காய் உள்ளூர், சர்வதேச அரசியல் சூழல். தற்போது, வடமாகாண சபை என்று ஏதோ கொஞ்சம் அதிகாரம் என்கிற பெயரில் கூட்டம் கூட்டவும் பேசவும் இருக்கும் அதிகாரத்தில் இருந்து கொண்டு அதன் பிரதமர் சி.வி. விக்னேஸ்வரன் சொல்வது ’இனப்படுகொலை விசாரணை’ வேண்டுமென்று நேரடியாகச் சொல்லக்கூடாதாம். அதற்கு இணையான என்று சொல்லவேண்டுமாம். அதாவது இனப்படுகொலைக்கு இணையான விசாரணை என்று சொல்வது. 

தற்போதிருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகள் இந்த தரத்தில் இருக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, அண்மையில் கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் Scarborough Rouge River தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபயீசன் பேட்டி ஒன்று தமிழகத்தின் புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சி இணையத்தில் பார்க்க நேர்ந்தது. மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபயீசனிடம் ஒரேயொரு முக்கியமான கேள்விதான்; புலம்பெயர் தமிழர்கள் என்றால் யாரென்று ஒரு வரையறை சொல்லுங்களேன். 

புலம்பெயர் தமிழர்கள்! யார் இவர்கள்! ஈழத்திலிருந்து ஏறக்குறைய 250 000 தமிழர்கள் 31 நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் என்பது ஒரு புள்ளிவிவரம்.  இவர்களுக்கும் ஈழத்து மண்ணில் இனவழிப்புக்கு மத்தியிலும் இன்னும் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு என்று எங்களை நிறையவே யோசிக்க வைக்கிறார்கள். 2009 ம் ஆண்டுக்குப் பிறகு புலம்பெயர் தமிழர்கள் வேண்டப்படாதவர்கள் போலவும், பிரச்சனைக்குரியவர்கள் போலவும் உள்ளூரிலும், புலம்பெயர்தேசங்களிலும் ஈழம் தொடர்பான விடயங்களில் திட்டமிடப்பட்டே புறக்கணிக்கப்படுகிறார்கள். இதை இலங்கை அரசாங்கம் மிகத்திறமையாகச் செய்துவருகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான இலங்கை தூதரகங்களின் விஷப்பிரச்சாரம் தமிழர்களுக்கு புலம்பெயர் தேசங்களில் கசப்பான அனுபவம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. 

அப்படிப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபயீசன் பேச்சும் துணைபோகும் படியாய் இருக்கிறதோ என்று ஐயம் தோன்றியது புதியதலைமுறையில் அவர் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாகவும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும் பேசிய பேச்சுக்கள். 

புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேட்டி கண்டவர் தமிழக, இந்திய அரசியலுக்கு எதுவேண்டுமோ அதற்கேற்றவாறு கேள்விகளை கேட்டு, பதிலையும் வாங்கிக்கொண்டார். அந்த இடத்தில் ராதிகா சிற்சபயீசன் தான் ஒரு அனுபவமில்லாத மேற்கத்திய அரசியல்வாதி என்பதை நன்றாகவே வெளிப்படுத்திக்கொண்டார். முக்கியமாக இரண்டு விடயங்களை திருப்பி, திருப்பி கேட்டார் பேட்டி கண்டவர். ஒன்று புலம்பெயர் தமிழர்கள் பற்றியது. மற்றது, ஈழத்து மண்ணில் வாழும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கேட்டார்களா அல்லது போர்க்குற்ற விசாரணை வேண்டுமென்று கேட்டார்களா என்பது. 

தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் ராதிகா சிற்சபயீசன் தமிழரே என்றாலும் அவர் ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பேசும் தமிழர்களுக்கான ஒரு பிரதிநிதி அல்ல. அவர் தொகுதியில் வாழும் மற்றும் அவருக்கு வாக்களித்து அவரைத் தங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தவர்களுக்காகவே உழைப்பார். அப்படித்தான் உழைக்கவும் வேண்டும். அதுதான் நியாயம். இது புரியாதவர்கள் அல்ல தமிழர்கள். 

அவரது பேச்சுக்களை கனேடிய மண்ணில் தமிழர்கள் மத்தியில் பேசியபோதுகூட அவர் தன் அரசியல், தான் சார்ந்த கட்சி கொள்கைகள், கோட்பாடுகளுக்கு வெளியே பரந்துபட்ட ரீதியில் ஈழம் தொடர்பாகப் பேசியதில்லை. இங்கே மேடைகளில் பேசும்போதும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றி மறந்தும் அவர் பேசி நான் கவனித்ததில்லை. மாறாக, அவர் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்கிற ரீதியிலேயே பேசியிருக்கிறார். அப்படியே அந்த எல்லைக்குட்பட்டே தன் பயண அனுபவம் என்கிற ரீதியில் புதியதலைமுறை தொலைக்காட்சியிலும் பேசியிருக்கலாம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான கேள்விகளுக்கும், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான கேள்விகளுக்கும் அவரது பதில்கள் மேற்கத்திய அரசியல்வாதி ஒருவரின் ஈழப்பிரச்சனையின் அடிப்படை புரியாத ரகமான பதில்கள் அயர்ச்சியையே உருவாக்கின. 

என்னதான் அனுபவம் போதவில்லை என்றாலும் வட்டுக்கோட்டை தீர்மானம் முதல் தமிழர்களுக்கு Historical, earned and Remedial Sovereignty இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியே இருந்திருந்திருந்தால் இங்கே இதை நான் மாண்டு, மாண்டு எழுதவேண்டியிருந்திருக்காது. தமிழர்களுக்கு இவ்வளவு நடந்த பிறகும், இவ்வளவு துன்பத்துக்கு ஆளான பிறகு இனி ராணுவப் பயமின்றி நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு தான் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கேள்விகளுக்குப் பதில். அதை ஏனோ சொல்லத்தவறிவிட்டார் மரியாதைக்குரிய கனேடிய பாராளுமன்ற உறுப்பினர். கனடாவிலும் Quebec மாகாணம் பிரிந்துபோக நினைத்து அதற்கு ஒருமுறை பொதுவாக்கெடுப்பு நடத்திய நாட்டில் தானே வாழ்கிறீர்கள். பிறகேன், தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்து பேச இவ்வளவு ஒளிவுமறைவு. உங்கள் கட்சி கொள்கைகள், கோட்பாடுகளுக்குட்பட்டு அரசியலைப் பேசுங்கள் பாதகமில்லை. புலம்பெயர் தமிழர்கள் ‘வீரவசனம் பேசுபவர்கள்’ என்கிற முத்திரை குத்தாதீர்கள். 


அதைவிடுத்து கனடாவில் தன் தொகுதியில் எத்தனைவீதமானோர் தனக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்கிற கணக்குப் பார்க்கத் தெரிந்தவருக்கு ஈழத்தில் தன்னிடம் பேசியவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை பேசினார்கள், பேசவில்லை என்பதை ஆராய்நது பார்க்க, சொல்ல ஒப்பீட்டுரீதியிலான கணக்கு தெரியாதா? 



இப்படித்தான் இருக்கிறார்கள் 2009 ம் ஆண்டுக்குப் பிறகு தமிழர்களுக்கு வாய்த்த தலைவர்களும், தங்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும். இவர்களை நம்பலாமா வேண்டாமா என்கிற பாரதூரமான கேள்விகளுக்குள்ளாக்குகிறார்கள் எங்களை. இவர்களை நம்புவது ஒருபுறமிருக்க எங்களை நாங்களே ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் தொடர்பாக கற்பித்துக்கொள்வதும், அதற்கு இவர்கள் செவிசாய்த்து எங்கள் பிரதிநிதியாக இருங்கள் என்று சொல்வதுமே சரியாக இருக்கும். இவர்களின் மேடைப்பேச்சுக்களை அப்படியே நம்பாமல் சீர்தூக்கி ஆராய்ந்து பார்ப்பதுவே நன்று. 

Image Courtesy: Google. 

முடிவில்லா முள்ளிவாய்க்கால் மே 18

$
0
0
துல்லியம் காட்டும்
தொலைநோக்கியில்
தெரியாமல் போனவை
முதுகுக்கு பின்நின்ற
துரோகமுகங்கள்.

-ஓவியர் புகழேந்தி.

ஈழத்திலும் புலத்திலும் எங்குமே தமிழர்களின் குரல்வளையும், குரல்களும் நசுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

முள்ளிவாய்க்கால், மெளனமாய் மனதிற்குள் முணுமுணுக்கும் சோகம். இரத்தமும், சதையுமாய் ஈழத்தின் அழியாத போராட்டவரலாற்றுச் சுவடு. இழப்பின் வலியை சொல்லியழக்கூட ஒன்றுகூடமுடியாத மண்ணில் தொடரும் தமிழர்கள் அவலம். சிங்களப் பேரினவாதத்தின் ராட்சசக் கரங்கள் தமிழர்கள் மண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை ஒட்டி ஒன்றுகூடி அழவோ, மெழுகுவர்த்தி ஏற்றவோ தடைபோட்டு கழுத்தை நெரிக்கின்றன. பொது இடங்களில் ஒன்றுகூடத் தடை. யாழ் பல்கலைக்கழகம் மூடிவைப்பு முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தையொட்டி. தமிழர்கள் ஒன்றுகூடமுடியாது. ஆனால், சிங்களச் சிப்பாய்களின் குடும்பங்களுக்கு வடக்குக்கு வரவழைக்கப்பட்டு தமிழர்கள் மண்ணில் மரியாதை. வடக்கில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேல் விதவை தமிழச்சிகள் கூடி அழ உரிமையில்லை. அடுத்த தமிழ் இளம் தலைமுறைக்கு ’மாறுதலுக்கு தயாராகுங்கள்’ என்று பெளத்தம் தலைமைக் கல்வியாம். இலங்கை அரசின் தமிழின அழிப்பை போர்வெற்றி என்று தமிழ்ச்சிறார்கள் சிங்கள ராணுவ அதிகாரிகளை கெளரவிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 

முள்ளிவாய்க்கால் ஒரு அவலம். தமிழர்களின் ஒற்றுமை குறித்த அக்கப்போர் இன்னோர் அவலம். என்றைக்கு புலிகளின் பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கு இல்லாமற் போயிற்றோ, அன்றுமுதல் தமிழர்கள் பிரதிநிதிகள் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை முறையாய் வெளிப்படுத்தியதாய் எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. ஈழத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இருப்பவர்களின் ஆளொருக்கொரு கூற்றுக்குள் அவர்களுக்குள் முரண்பட்டு சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறெதுவும் மனதில் தோன்றவில்லை. தங்கள் கட்சியைப் பதிவதில் இன்னமும் தமிழரசு கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு என்று உள்கட்சி பூசல்கள் மறுபுறம். தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையையும், இழப்புகளுக்கான அரசியல் தீர்வையும் பேசும் நிலையிலிருந்து வழுவிக்கொண்டே இருக்கிறது தமிழர்களின் பிரதிநிதித்துவம். 

மறுபுறம், புலம்பெயர் தமிழர்களை ஓரங்கட்டும் சர்வதேச சதியும் ஒரு அங்கமாய் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. International Crisis Group இன் முனைநாள் தலைவர் Gareth Evans  புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று மிகைப்படுத்தி சொல்கிறார்கள் என்று கருத்தறிவித்திருக்கிறார். இவ்வளவு இழப்புகளை சந்தித்த தமிழர்களுக்கு தீர்வாக Remedial Sovereignty பற்றிக் கேட்டால் இவர்களின் மேற்குலக அரசியற்சார்புகளோடே பதில் சொல்லி மழுப்புகிறார். இலங்கைக்குள் ஒற்றையாட்சி, தமிழ் மாகாணங்களுக்கு எந்த அதிகாரமுமில்லாத 13வது திருத்தச்சட்டம், சிங்கள - பெளத்த மொழி மதத் திணிப்புகள், தமிழர்களை அழிக்கும் திட்டமிடப்பட்ட இனவழிப்பு, கல்வி, கலாச்சார, பண்பாட்டு, பொருளியல் அழிவுகளை பேரினவாதத்துக்கு ஆதரவாகவும் ஊக்கப்படுத்தியும் தமிழர்களை எள்ளிநகையாடும் விதமாகவே International Crisis Group அமெரிக்கா - இந்தியா சார்பாக மந்திர உச்சாடனமாய் பேசிக்கொண்டிருக்கிறது. 

தமிழக அரசியல் சூழல்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இனிவரும் காலங்களிலும் அதே பழைய குருடி கதைவத்திற என்கிற போக்கிலேயே இருக்கும் போல. இன்னும் கூட ஈழத்தமிழ் அகதிகள் புழல் சிறையில் அடைக்கப்படுவது முதல் அவர்கள் தமிழகச் சிறைகளில் மோசமாக நடத்தப்படுவதும், தற்கொலை செய்வதும் தொடர்கிறது. இப்படி இருக்க எப்படி நம்பிக்கை வரும் தமிழகத்தின் அரசியல் மேல். ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பேசக்கூடியவர்களும் அரசியல் பலமற்றவர்களாக இருப்பதும் ஒரு குறைபாடு. 

தன் கையே தனக்குதவி என்பது போல், எல்லாப் பிரச்சனைகளுக்கும் புலம்பெயர் தமிழர்களே இன்று முன்னின்று உழைக்கவேண்டியது அவசியமாகிறது. புலம்பெயர் தமிழர்கள் மேலும் உறுதிபெற்று முள்ளிவாய்க்காலில் தம் உயிர்களை இழந்தவர்களுக்காக உழைப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது சொந்தமண்ணில் சிறைவைக்கப்பட்ட இளம் தலைமுறை.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள்! 



Image Couretsy: TamilNet, Google and Google Plus.

பொய்களை வாங்கும் உலகம்!

$
0
0

ஒரு தனிமனிதனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ அநியாயம் நிகழ்ந்துவிட்டால் அதற்குரிய நியாயம் கிடைக்கவேண்டும் என்று பதைப்பதும், துடிப்பதும் மனித இயல்பு. இந்த அடிப்படையே தற்காலத்தில் எத்தனையோ  வழக்குகள், மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்த பிரச்சனைகள் குறித்த தொலைக்காட்சித் தொடர்கள்  வெற்றிக்கு காரணம் என்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒருவருக்கு நியாயம் கிடைக்கும் என்று அது வழங்கப்பட்ட பரிமாணங்களைக் கொண்டு பார்வையாளர் ஒரு முடிவுக்கு வரலாம். சில சமயங்களில் ஏற்கனவே அறியப்பட்ட ஒரு வழக்கு அல்லது நிகழ்வு குறித்த பல்கோணப்பார்வையை கொண்டவர்களுக்கு அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த பார்வைப் பரிமாணம் அதுவழங்கப்பட்ட கோணத்திலிருந்தும் மாறுபடலாம்.

தவறு ஒன்று இழைக்கப்பட்டது என்றாலே உடனடி நியாயம் கிடைக்கவேண்டும் என்னும் மனித இயல்பின் தன்மையே ஒரு சினிமா குறியீட்டு நாயகன் அல்லது நாயகி தன்வழியில் தீர்ப்பு வழங்கும் மசாலா சினிமாக்களின் வெற்றிக் குறியீடும் ஆகியும் போகிறது.


சரி, இதிலிருந்து விலகி நான் பேசவந்ததை பேசுகிறேன். இலங்கை என்கிற நாட்டில் தசாப்தங்களாக திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இறுதித்தீர்வை நோக்கிய போராட்டமும் பல தசாப்தங்களாக தொடர்கிறது. ஈழத்தமிழர்களின் போராட்டக் களம் அந்த மண்ணைக் கடந்தும் சர்வதேச அளவில் அப்பிரச்சனை பேசப்படும் அளவுக்கு ஒரு குறிப்பிட்ட பரிமாண வளர்ச்சியை கண்டிருக்கிறது, லட்சணக்கான அப்பாவிகளின் உயிர்ப்பலி, காணாமற்போனோர், மற்றும் விடுதலைக்காகப் போராடியவர்களின் தியாகம் என்பவற்றை உள்ளடக்கியபடி. 2009 மே மாதத்திற்குப் பிறகு இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் எத்தனையோ பிரச்சனைகளில் ஒன்றாக தவணைமுறையில் பேசப்பட்டு வருகிறது. ஈழப்பிரச்சனை பாலஸ்தீனப் பிரச்சனை போல் ஐ. நா. வின் பொதுச்சபையில் பேசப்படவேண்டியது. ஆனால், அவ்வாறு பேசப்படுவது கிடையாது.


முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்டது போர்க்குற்றம் என்கிற குறுகிய சட்டத்திற்குள் இப்பிரச்சனையை அடக்கியதோடு மட்டுமில்லாமல், ஏதோ தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காரணத்தால் தான் அங்கே தங்கள் சொந்தமண்ணில் வாழ்ந்த தமிழர்களுக்கு எந்தவொரு அரசியல் உரிமையும் கொடுக்கமுடியவில்லை என்பது போல் நாடகமாடிய பெளத்த  சிங்கள  அரசாட்சியாளர்களுக்கு கொஞ்சம் நெருக்கடி. இயலுமானவரை Lobbying Group, International Crisis Group, இந்தியா, அமெரிக்கா போன்றோரது உதவியுடன் ஒருவேளை இதை தட்டிக்கழிக்கழிக்கலாமென்றால் மனித உரிமை அமைப்புகள் விடுவதாயில்லை. கூடவே பிரித்தானிய காட்சி ஊடகமான சனல் 4 வேறு கிடுக்கிப் பிடி போடுகிறார்கள். விளைவு இலங்கை ஆட்சியாளர்கள் வழக்கம் போல் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்கிற தென்னாபிரிக்கப் பாணியில் ஏதோ ஒரு குறைகளுடன் கூடிய அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் மனித உரிமைகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் நாடகம்.  நல்லிணக்க ஆணைக்குழுவை மனித உரிமை அமைப்புகள் கூட்டாக அது சர்வதேச தரத்தை கொண்டதல்ல என்பதோடு மட்டுமல்ல அந்த அமைப்பின் அறிக்கையை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.


இம்முறையும் எதிர்வரும் மார்ச் மாதம் மறுபடியும் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரமும் பேசப்படும், நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், அதை பரிசீலனை செய்யவும் மறுபடியும் கால அவகாசம் வழங்கப்படும்.


பாதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதுமே தங்களுக்குரிய நீதி தாமதமின்றி கிடைக்கவேண்டுமென்றே நினைப்பார்கள். ஆனால், அந்த நீதியை வழங்கும் ஜனநாயக பரிபாலனமும், நீதியலகுகளும் எவ்வாறு குறைபாடுகளைக் கொண்டது என்பது இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு கிடைத்த அனுபவமும் சாட்சி. இதுகுறித்த அடிப்படைகளை வசதியாய் ஒதுக்கிவிட்டு, இலங்கை அரசியல் யாப்பின் வழி தமிழர்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை மறந்துவிட்டு வெறுமனே நான்கு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய இறுதித்தீர்வு நோக்கிய நடைமுறை அல்ல.

இதைப் பலமுறை எழுதியாகிவிட்டது என்றாலும் மறுபடியும் காலத்தின் தேவைகருதி, இலங்கை அந்நியப்படையெடுப்புக்கு முன் மூன்று தனித்தனி ராச்சியங்களை கொண்டிருந்தது. யாழ்ப்பாண ஆட்சி (Kingdom) 1215-1619 AD வரை நிலைத்திருந்தது என்பதும்; Colebroke-Cameron Reforms 1833 தான் மூன்று ராச்சியங்களையும் பிரிதானிய ஆட்சியில் ஒன்றிணைத்து அபிவிருத்திக்கான ஆட்சி அதிகாரத்தையும் சிங்களர்களிடம் கொடுத்தது என்பது வரலாற்று உண்மைகள். இதன் பிறகு சுதந்திர இலங்கையின் பெளத்த சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்குக் காலம் அரசியல் யாப்பில் தமிழர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைக் கூட பறித்ததும், தாங்களே ஆளுவதற்கு ஏற்றவாறு யாப்பை மாற்றியமைத்ததும் வரலாறு. சுயநிர்ணய உரிமை குறித்து எந்தவொரு அரசியல்வாதியும் பேசமுடியாது என்கிறது இலங்கை அரசியல் யாப்பின் 6வது திருத்தச்சட்டம். இது தான் இலங்கை பேணும் ஜனநாயகத்தின் போலிமுகம்.

இலங்கை அரசியல் யாப்புக்கு முற்பட்ட வெளியக சுயநிர்ணய உரிமையையும் எமக்குரிய வரலாற்று நிலத்தையும் மீளக்கேட்டால் அது தவறு இல்லை. அதைப்போலவே, வரலாற்று ரீதியான சுயநிர்ணய உரிமையையும் தாண்டி ஒரு தனித்தேசிய இனமாக எங்களுக்கு ஐ. நா. சர்வதேச ஒப்பந்தங்களின் படி சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்கும் உரிமை உண்டு. ஆனால் இதெல்லாம் 2009 மே மாதத்திற்குப் பிறகு நிறையவே அரசியல் திசைதிருப்பல்களால் போர்க்குற்ற விசாரணை என்கிற ஒரு கோணத்தில் வேறு பார்க்கப்படுகிறது. போர்க்குற்ற விசாரணை தேவைதான், மறுக்கவில்லை. அத்தோடு சேர்த்து சமாந்தரமாக தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்தும் பேசவேண்டியது கட்டாயம் என்பது என் புரிதல்.


இந்த அடிப்படைகளை மாற்றித்தான் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கவேண்டும். ஆனால், அதற்கு காலம் நிறைய எடுக்கும். இதெல்லாம் நான் அவ்வப்போது ஈழத்தமிழர்கள் குறித்த விடயங்களை அறியத்தரும் தமிழ் ஊடக அரசியல் அவதானிகள் சொல்வது. சில அரசியல் அவதானிகள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அது ஒருபுறமிருக்க, இந்தமுறை ஐ. நா. மனித உரிமை சபைக் கூட்டத்தொடர் இடம்பெறும் போது அங்கே இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை உடைக்க தமிழர்கள் அமைப்புகள் இருக்குமா என்றால், நான் வாழும் நாட்டிலிருந்து இரண்டே இரண்டு அமைப்புகள் பங்குபற்றும் என்கிறார்கள் தமிழ் ஊடகங்கள். ஒன்று, Canadian Centre for Tamils, மற்றது Lawyers Right Watch. இந்த அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள் தங்கள் செயற்பாடுகளை, மனித உரிமை சபையின் நடைமுறைகளை இலங்கை விடயத்தில் கொஞ்சம் அறியத்தந்தார்கள்.

இதில் நாடுகடந்த தமிழீழ அரச நிலைப்பாடுகள் என்னவென்றால், அவர்கள் இந்தமுறை இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளப்போவதில்லையாம். அவர்களின் நிலைப்பாட்டை உருத்திரகுமாரன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கினார் போலிருக்கிறது. நான் தவறவிட்டுவிட்டேன். இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர்களால் எப்படி தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எப்படி மக்கள் ஆணை வழங்கப்பட்டதோ அதே போல் தானே புலம்பெயர்தேசத்தில் ஜனநாயக வழியில் நாடு கடந்த அரசுக்கும் மக்கள் தங்கள் தார்மீக ஆதரவை ஈழம் நோக்கிய இறுதிதீர்வை நோக்கி முன்னெடுக்க வேண்டுமென்று ஆதரவு வழங்கினார்கள். இடையில் இவர்கள் இருவரது நிலைப்பாடுகளும் ஒட்டுமொத்த தமிழர்களையும் குழப்பமடையவே வைக்கிறது. கொடுக்கப்பட்ட மக்கள் ஆணையை நிறைவேற்றாதவர்களிடம் விளக்கம் கேட்கவேண்டியதும் எம் கடமை.

இதைத் தவிர்த்து மனித உரிமை கூட்டத்தொடரின்போது பிரித்தானிய காட்சி ஊடகமான சனல் 4 காண்பிக்கப்போகும் இன்னொரு இறுதிப்போரின் No Fire Zone இல் நடைபெற்ற போர்க்குற்றங்களின் காணொளி ஒன்றையும் காண்பிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அது குறித்த எதிர்ப்பார்ப்புகளும் உண்டு. ஏற்கனவே அது இந்தியப் பாராளுமன்றத்தில் காட்டப்பட்டும் விட்டது. அதில் வரும் ஒரு சில காட்சிகள் குறித்த நம்பகத்தன்மையை குறித்து இந்திய உள்துறை அமைச்சர் சந்தேகம் எழுப்பியிருந்தார் என்பது தெரிந்ததே.

வழக்கம் போல் இலங்கை ஆட்சியாளர்கள் இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவார்கள். அதை போலி என்றே தாங்களே ஆராய்ந்து அறிக்கை விடுவார்கள். அல்லது சென்ற முறை போல் "Lies Agreed Upon"என்கிற ஒரு பிரச்சாரப் படம் International Crisis Group இன் உதவியுடன் வெளியிடப்பட்டதாக இந்தத் தளம் சொல்கிறது.
 "This story starts in September of last year with a screening of “Lies Agreed Upon” – a government of Sri Lanka propaganda film which was expertly deconstructed by the International Crisis Group."
இந்த தளத்தின் இணைப்பை இங்கே கொண்டுவர இஸ்டமில்லை என்றாலும் தேவை கருதி இணைப்பை கொடுத்திருக்கிறேன்.

இதுபோன்ற பாலுக்கும் காவல். பூனைக்கும் காவல் என்கிற இரட்டை வேடதாரிகள் சொல்வதைக் கொண்டு இப்போது மீளிணக்கம் பிறகு சுயநிர்ணய உரிமை என்பதற்காகவா இவ்வளவு போராட்டம் இழப்பு எல்லாம். எதிர்வரும் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் மீண்டும் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் செய்திகள் கண்ணில் படுகின்றன. எல்லாமே போர்க்குற்ற சர்வதேச விசாரணையை மழுங்கடித்து, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை கைவிடவேண்டும் தமிழர்கள் என்பதே காரணம் என்கிறார்கள் சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள்.
ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அது நீண்ட நாட்கள் எடுக்கலாம். இதெல்லாம் யதார்த்த உண்மைகள் என்றே கொண்டாலும், எப்படி தெற்கு சூடானுக்கு விடுதலை கிடைத்தது! அதையும் கொஞ்சம் கருத்திற்கொள்ளலாமே. சர்வதேச போர்க்குற்ற விசாரணை  தேவை என்கிற அதேவேளை சுயநிர்ணய உரிமையையும் முன்னிறுத்தி பேசலாமே அரசியல் தெரிந்தவர்கள்.
இதற்கு மேல் எனக்கும் சொல்ல ஏதுமில்லை. மீதியை மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடக்கும் போது காணவேண்டியது தான். நீதி வேண்டுமென்று ஏங்கிக் கிடக்கும் ஈழத்தமிழனுக்கு மனித உரிமைகள் சபையின் செயற்பாடுகள் நிச்சயம் குறியீட்டு திரை நாயக, நாயகிகள் போன்ற வெற்றுத்தோற்றமே என்பதையும் ஜீரணிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
Image: Google.

கத்தி, புலிப்பார்வை என் இரண்டு சதங்கள்!

$
0
0
காலங்காலமாக எப்படி மனித சமூகத்தை கட்டி அமைப்பது,  என்று ஆராய்ச்சிகள் செய்து அந்த கோட்பாடுகளை apply செய்து, trial and error ஆகத்தான் மனித இனம் ஆளப்படுகிறது. எல்லாமே இன்னமும் அதன் இயங்குவிதிகளில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. Tribal society முதல் Modern WEIRD (Sociology acronym stands for Western, Educated, Industrialized, Rich, Democratic) சமூகம் வரை அததற்கான அரசியலும், அரசியல் சார் கட்டமப்புகளும், தகவமைப்புகளும் எப்படி மைய அரசியலில் கொள்கை ரீதியாக கட்டியமைக்கப்படுகிறது, அமுலாக்கப்படுகிறது என்பது சிம்பிள் லாஜிக். 


குற்றங்களுக்கும் காவல்துறை பணியாளர்களுக்குமான எண்ணிக்கையில் இல்லை குற்றங்களை குறைப்பது என்பது. அது சரியான அரசியல், பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் விளைவது. ஒரு சாதாரண குடிமகனை சட்டம் உன்னை தண்டிக்கும் என்று பயம் காட்ட உருவாக்கப்பட்ட, பயத்தை உண்டுபண்ணும் விம்பமே, authority figure, காவற்துறைக்கான சீருடையும், துப்பாக்கியும். அதுபோல மற்ற மற்ற துறைகளும் அதற்கான authority figure களும். அதுவே, ஒருவன் அல்லது ஒருத்தி உலகமகா திருடனாகவோ, திருடியாகவோ இருக்கும் பட்சத்தில் இந்த 'authority figure'பயங்காட்டல்கள் வேலைக்காகாது. காரணம், அங்கே பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு இருக்கும். அங்கெல்லாம் குற்றம் களையவேண்டிய அதிகாரிகள் சிவில் உடையில் ஊடறுத்தும், தொழில் நுட்பத்தை நாடவேண்டியதுமான நிலை. என்ன ஒரு முரண் நகை. 


இது இரண்டிலும் அடங்காமல் தங்களை ஆளவும், ஆளப்படவும் அனுமதிகொடுத்தவர்கள் தங்கள் நியாயங்களை சம்பந்தப்பட்டவர்கள் கருத்திற்கொள்ள தவறுமிடத்தில் அதை உரியவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டியது தான் ஊடகங்கள், மற்றும் இன்னபிற கலைவடிவங்கள், அதன் பிரதி நிதிகளாக தங்களை வரித்துகொண்டவர்கள் கடமை. கலை வடிவம் என்பது முதலில் வணிகம் சார்ந்தது. பிறகு தான் மிச்சம் எல்லாம். கோடி கோடியாகப் பணம் புழங்குமிடத்தில் அதிகபட்ச மனட்சாட்சியை யாரிடமும் எதிரிபார்க்க முடியுமா தெரியாது. தமிழ் சினிமாவின் கோடிகளில் புரட்டப்படுகிறது ஒரு இனத்தின் வாழ்வும், சாவின் அவலங்களும். 


சர்வதேச அரசியலின் சதி வலைக்குள் சிக்குண்டபடியே இருக்கும் ஈழத்தமிழர்கள் என்கிற இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்கும்  சர்வதேச அரசியலுக்கும், சிங்களப் பேரினவாதத்தின் கருவிகளாக செயற்படும் மனிதர்களால்  கலைவடிவங்கள் என்னும் போர்வையில் தற்காலத்தில் ஏனோ பலவிதமான கருத்துருவாக்கங்கள் பண்ணப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் தமிழர்களுக்கு எதிரான, தமிழர்களின் ஆண்டாண்டுகால இனப்படுகொலையை நியாப்படுத்தும் போக்குடையவையாகவே வலிந்து வடிவம்கொடுக்கப்படுகிறதா! இந்து சமுத்திரத்தில் ஊடுருவ நினைக்கும் சர்வதேச அரசியலில் தமிழர்கள் என்கிற இனக்குழுமத்தின் ஒற்றுமையும், போராட்டமும் நசுக்கப்படவேண்டும் என்கிற கொள்கைகளோடு செயற்படுபவர்களுக்காகன ஆதாரசுதி போலவே இருக்கிறது ஈழம் குறித்த சில தமிழக கலைப்படைப்புகள், மற்றும் இந்திய மைய அரசியலின் கொள்கைகளை மையமாகக்கொண்டு இயக்கப்படும் ஈழம் குறித்தான படைப்புகள், படைப்பாளிகள், மற்றும் படைப்பாளிகளின் ஆதரவளர்களின் பேச்சுக்களும் அது குறித்தான அரசியல் நிலைப்பாடுகளும். இதற்கான அண்மைய உதாரணங்கள் மெட்ராஸ் கஃபே, இனம் பொன்ற படங்கள். இந்த இரண்டு படைப்புகளிலும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை, விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கலைவடிவங்களை எதிர்த்தவர்களில் சிலர் இப்போது கத்தி, புலிப்பார்வை என்கிற ஈழ அரசியல் சார்ந்து தமிழர்களின் பக்கமுள்ள நியாயமான கோரிக்கைகளுக்கு பாரதுரமான, பாதகமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய படைப்புகளின் அரசியலை ஆதரிப்பது தான் சாபக்கேடு. 


புலிப்பர்வை இயக்குனரின் ஒரு காணொளி பார்க்கும்போது மனதில் தோன்றியவை இவை. தமிழ் நாட்டில் இதுவரை அப்பிடி யாரும் உள்ளது உள்ளபடி, இயல்பாய் ஈழம் பற்றி அதன் விடுதலைப் போர் பற்றிப் படம் எடுத்ததுமில்லை. எங்கள் தமிழை தமிழ் நாட்டில் உடைச்சு, உடைச்சுத் தான் அனேகமா எல்லாருமே பேசுவார்கள். அதையே கலைவடிவமாய்ப் பார்க்கும்போது இயல்போடு ஒட்டுவதில்லை. தவிர, எந்த ஒரு வரலாற்றையும், உண்மையையும் பாதிக்கப்பட்டவர்கள் தவிர வேற யாரால் கலைவடிவம் கொடுக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மை ஒத்துக்கொள்ளாது. அது இயற்கை. Blood Diamond என்கிற ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கப்பட்டது. Sierra Leone என்கிற நாட்டில் இருக்கும் வண்டல் குவியல் வைரங்களை வைத்து பின்னப்பட்ட ஒரு அரசியல் கதை. வண்டல் குவியல் என்றால் வைரங்கள் ஆற்றுப்படுகையின் வண்டல் மண்ணுக்குள் அதிகம் ஆழமில்லாமல் புதைந்திருக்குமாம். அதை 'Panning'என்கிற முறையில் வடித்தட்டுப் போன்ற ஒன்றில் அரித்து எடுப்பது. வைரங்களுக்கான இரண்டு நிறுவனங்களின் சண்டையை ஹோலிவுட் ரசிகனின் ரசனைக்காய்ப் படமாக்கினால் எப்படி பாதிக்கப்பட்டவர்களின் கதை சொல்லப்படும்! அந்தப் படம் பற்றி அந்த நாட்டின் அரசியல் நிலவரங்களை சரியாச் சொல்லாமல், அது பற்றிய குறைந்தபட்ச உண்மைகளையெனும் சொல்லாமல் எடுக்கபட்ட படத்தை சம்பந்தப்பட்ட அந்த நாட்டை சேர்ந்தவர்கள் திட்டியவர்கள் தான் அதிகம். ஏன், Spielberg's movie Amistad ஐ கூட பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் விமர்சிக்கவே செய்தார்கள். அனேகமா அப்பிடித்தான் இதுவும் இருக்கலாம். மற்றப்படி, சினிமாத்தனங்கள் இல்லாமல் இருந்தாலே நல்லது. உங்கள் சினிமாத்தனங்களில், இலாபநோக்கங்களில் போராட்டத்தின் நியாயமும் வலியும் சிதைக்கப்படும், முடமாக்கப்படும். 

'இந்தியாவை நேசிக்கிறோம்' என தமிழீழத் தேசியத் தலைவர் முதன்முதல் சொன்னது அமைதிப்படையாக வந்து ஈழத்துக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்ல, பிரபாகரன் தான் இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களிடம் பேசியே ஆகவேண்டும் என்று சுதுமலையில் 1987 ஆகஸ்ட் 04 ம் திகதி முதன்முதல் அல்லது ஒரேயொரு தடவை ஈழத்தமிழர்கள் முன் பேசினார் என்று அன்ரன் பாலசிங்கம் எழுதியிருக்கிறார். அப்போது தான்,  'நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கிறோம். இனி, சிங்கப் பேரினவாத ராணுவத்திடமிருந்து தமிழர்களின் பாதுகாப்புக்கு இந்தியா தான் பொறுப்பு. 'நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்'என்பதாக பதியப்பட்டிருக்கிறது வரலாற்றில். அதைத்தான், 'We love India speech'என்று இந்தியப் பத்திரிகைகள் குறிப்பிட்டன. புலிப்பார்வை படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி  பேசும்போது அதிகம் ஈழவரலாறு தெரிந்தவராக எனக்குப் படவில்லை. You tube காணொளிகளை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வலிந்து தனது படைப்புக்கான reference ஆகக் குறிப்பிடுவது இயக்குனரின் ஈழவரலாறு குறித்த ஆராய்ச்சியின் அளவின் பஞ்சத்தையே சுட்டுகிறது. இந்தியாவை நேசிக்கிறோம் என்கிற பேச்சின் வரலாற்று ஆரம்பத்தை குறிப்பிட்டிருக்கலாம் இயக்குனர். அவருக்கே தெரியவில்லை போல. எந்தப் பிரச்சனையினதும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு தமிழ் சினிமாவில் காசுபார்க்கலாம் என்கிற நிலை தான் அதன்மீதான பரிதாபத்தையும் உண்டுபண்ணுகிறது. பார்க்கலாம் படம் எப்பிடி வருதுன்னு. கண்டிப்பாக நான் படம் பார்க்கப்போவதில்லை. விமர்சனங்கள் வழி மட்டுமே அறிய ஆவல். முயற்சி தமிழர்களின் பிரச்சனையை குறைந்தபட்சம் தமிழ் நாட்டில் நல்லவிதமாக கொண்டுசேத்தாலே நல்ல விடயம் தான். ஆனால், அதற்கான எதிர்ப்பும், அரசியல் முண்டுகொடுப்புகளும் படத்தின் மீது சந்தேகத்தை வரவைக்கின்றன. 


எந்தவொரு ஈழத்தமிழனாலும் இந்தியா என்கிற வல்லூறை நேசிக்கமுடியுமா என்பது சந்தேகமே! 

கத்தி படம் பற்றியம் அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா (LYCA) பற்றியும் இதுவரை நிறைய செய்திகளும், அதற்கான தமிழக அரசியல் சார்ந்து சிலரது முண்டுகொடுப்புகளும் இன்னும் தொடர்கிறது. LYCA என்கிற பிரித்தானியாவை மையமாக கொண்டு  இயங்கும்  தொலைதொடர்பு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும், ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சூத்திரதாரிகளுக்குமான தொடர்பும், கத்தி படம் பற்றி தமிழர்கள் பெரும்பாலானவர்களின் மனதில் ஒரு தாளமுடியா கசப்பை உருவாக்கி இருக்கிறது. இதுபோன்ற இலங்கையைச் சேர்ந்த ராஜப்க்ஷேக்களின் கருவிகளாகச் செயற்படுபவர்களின் தமிழ்த் திரைத்துறையில் ஊடுருவும் பொருள்முதலீடானது தமிழர்களுக்கு எதிரான கருத்தை உருவாக்குவதுடன், தமிழர்களின் வரலாற்றை திரிப்பதாகவும் விஷமத்தனத்தோடு அமைக்கப்படுகின்றன என்பதே பிரச்சனையாகிறது. தவிர, தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை கொண்டுவரப்படவேண்டும் என்கிற தீர்மானத்தின் பின்னும் இதுபோல் இலங்கை ஆட்சியாளர்களின் கருவிகளின் வழி அவர்களின் பொருள்முதலிடுகளை தமிழகத்திற்குள்ளேயே  கலை என்கிற வடிவில் கொண்டுவருவதை தமிழக மாணவர்களும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் சில அரசியல் சார்ந்த, சாராத அமைப்புகளும் எதிர்க்கின்றனர். 

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். ஆனால், இங்கே கூத்தாடிகள் ஊரை பிளவுபடுத்தி தமிழர்களின் உணர்வுகளை வேடிக்கை பார்க்கிறார்கள். கத்தி, புலிப்பார்வை இரண்டுக்குமான எதிர்ப்பின் அலைகளில் தமிழக ஈழ ஆதரவாளர்கள் முரண்களோடு பேசுவதும், நடந்துகொள்வதும் தான் கூத்தாடிகள் ஒன்றுபட்டதால் ஊர் பிளந்து கிடக்கும் அவலம் நடக்கிறது என நினைக்கவைக்கிறது. ஈழம் குறித்து கலைப்படைப்பு பண்ணும் இந்திய, தமிழக படைப்பாளிகள் ஒரு விடயத்தை ஏன் புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்! தமிழ்நாட்டில் உண்மையில் ஈழ ஆதரவு, ஈழத்தின் வரலாற்றை சொல்லும் எல்லாளன் போன்ற படங்கள் தணிக்கை துறைகளால் வெளிவராமல் தடுக்கப்படுகிறது. ஆனால் ஈழஆதரவு என்ற போர்வையில் விஷம் கக்கும் படங்கள் உடனடியாக திரைக்கு வருகிறது. உணர்வாளர்களின் எதிர்ப்புக்கு பிறகுதான் கைவிடப்படுகிறது. 

இந்த உணர்வாளர்களும், தமிழ்தேசியவாதிகளும் இன்று கத்தி, புலிப்பார்வை படவிவகாரங்களில் பிரிந்தே கிடக்கிறார்கள் என்பதும் கண்கூடு. குறிப்பாக நாம் தமிழார் கட்சியின் தாபகர் சீமான் அவர்களின் திரைத்துறையை அதன் பொருளீட்டும் நோக்கங்களை வெளிப்படையாய் பேசவோ, எதிர்க்கவோ செய்யாத போக்குகள் தான் பலரையும் அவர்குறித்தான விமர்சனப் பார்வையில் பேசவைக்கிறது. சீமான் போன்ற ஈழ ஆதரவாளர்களை விமர்சிப்பதற்கான அரசியற் காரணங்களை, ஏதுக்களை அவரே உருவாக்கியும் விட்டிருக்கிறார் இந்த சர்ச்சைகளில். சீமான் எந்த அரசியல் இலக்கை நோக்கி நகர்ந்தாலும் சாண் ஏறி முழம் சறுக்கிக்கொண்டிருக்கிறார். இப்போது கத்தி, புலிப்பார்வையை எதிர்க்கும் மாணவர்களுக்கும், நாம் தமிழர்கள் இயக்கம் அல்லது கட்சியின் தொண்டர்களுக்குமான கைகலப்புகள், தாக்குதல்களில் அரசியல், சினிமா, பண, அதிகார பலம் எந்த ஆழம் வரை பாய்ந்திருக்கிறது என்பது யாரும் அறியாதது. 

தமிழினம் மைய அரசியலில் ஆளப்படவும், அடிமைப்படுத்தப்படவும் சினிமா என்கிற ஒரு பாரிய ஊடகமும் அதன் பிம்பங்களும், அதன் கருத்துருவாக்க தந்திரங்களின் வழி தன் பங்கை செய்துகொண்டிருக்கிறது. இதை தமிழகத்தில் எதிர்ப்பதென்றாலும் அதற்கான அரசியற்பலம் அல்லது பாரிய மக்கள் பலம் வேண்டும். ஆனால், இரண்டுக்குமிடையே ஊடகங்களின் செய்தி தயாரிப்புகள், சமூகவலைத்தலங்களில் விவாதங்கள், காணொளிகள், எதிர்வாதங்கள் என்று அவரவர் நியாயங்கள் சொல்லப்படுகிறது. இதில் யாருக்காகப் போராட்டம் நடத்தப்படுகிறதோ அந்த ஈழத்தமிழர்கள் இலங்கையிலும் சரி, புலத்திலும் சரி மெட்ராஸ் கஃபே, இனம் படங்கள் போன்றே கத்தி, புலிப்பார்வை படங்களையும் குறைந்தபட்சம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டால் அவற்றைப் பார்க்காமல் தவிர்க்கலாம்.  இதில் ஈழத்தமிழர்கள் உணராதது என்று நான் நினைக்கிறது, புலத்தில் தமிழர்கள் தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு பெரிய பொருளாதாரச்சந்தையை உருவாக்கிக்கொடுக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கே புரியவில்லை. அதற்கு ஒரு சின்ன உதாரணம் என்றால் இனம் படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக திருப்பதி பிரதர்ஸ் என்கிற நிறுவனம் வெளியிட்டால் புலத்தில் அஞ்சான் திரைப்படம் வெளியிடப்படமாட்டாது, புறக்கணிக்கப்படும் என்கிற நிலை வந்ததும் அந்த நிறுவன உரிமையாளர் லிங்குசாமி உடனடி, தடாலடியாய் ஒரு அறிக்கையோடு ஒதுங்கிக்கொண்டார். அந்த பொருளாதார பலம் குறித்த சரியான அறிவும், புரிதலும் இருந்தால் தமிழ் சினிமாவின் இதுபோன்ற ஈழத்தமிழர்களுக்கு எதிரான சில்லுண்டித்தனங்கள் பலிக்காது ஈழத்தமிழர்களிடம். அதை ஈழத்தமிழர்கள் உணர மறுக்கிறார்கள். இதை உணர்ந்துகொண்டால் முள்ளிவாய்க்காலில் மாண்டவர்க்கும், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காய் உன்மையில் குரல்கொடுப்பவர்களுக்குமான கெளரவம். 


Image Courtesy: Google. 

தமிழிசை மரபும் தமிழர் சாதியும் - யாழ்

$
0
0

குழலினிது யாழினிது யாழ் இனிது என்ப-தம் மக்கள்.... திருக்குறள்  படித்த காலந்தொட்டே யாழ் என்னும் பண்டைய தமிழர் இசைக்கருவி குறித்த ஒரு ஆர்வம் உள்ளூர இருந்துகொண்டே இருந்தது. குழல் நிலைத்ததைப் போல் யாழ் நிலைத்து நீடிக்காமல் ஏன் அற்றொழிந்து போனது தமிழிசை மரபில் என்கிற ஒரு சிறு தேடலின் விளைவே இப்பதிவு. யாழ் மீட்டப்படுவதை எங்குமே இன்றுவரை பார்த்ததில்லை, கேட்டதில்லை. சங்ககாலத்துக்கு முன்பிருந்தே தமிழர் மரபில் யாழ் வாசிப்பவன்  ஆண்,பெண் முறையே பாணன், பாடினி என்னும் காரணப்பெயர் அறிந்ததுண்டு. அண்மையில் தேடற்களஞ்சியமாம் கூகுளில் கிடைத்த ஒரு ஓவியம் வைத்து தேடிப்போக யாழ் என்னும் இசைக்கருவி பற்றிய சில தகவல்கள் கிட்டின. சரி, எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் கிடைத்ததை பகிர்வதில் என்ன்வோ ஒரு திருப்தி.

யாழ் என்னும் இசைக்கருவி பற்றி, 

"யாழ், தொல்காப்பியம் தோன்றுவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் உருவாயிற்று. 
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தில் "யாழ்"காணப்படுகிறது. 
21 நரம்புகள் கொண்டது பேரியாழ்.
17 நரம்புகள் கொண்டது மகரயாழ் 
16 நரம்புகள் கொண்டது சகோடயாழ் 
7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்." 

மூலம்: 
http://eluthu.com/view-ennam/6289

********​​​​​​​​​​​------------**********



"யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக் கருவியாகிய யாழே, தமிழர்கள் வாசித்த முதல் இசைக்கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது."  

மூலம்: 
http://blog.dinamani.com/?p=3634

****************

இவ்வாறு பழந்தமிழ்ப் பண்பாட்டு இசைக்கருவி எப்படி மருவி வீணை ஆனது என்பதை சொல்கிறது இப்பதிவு. இவர் எழுத்தை அந்த தளத்திலிருந்து பிரதி எடுத்துப் பதிகிறேன், ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார் என்கிற நம்பிக்கையுடன். பண்ணோடு இசைமீட்டி பண்டைத்தமிழர் வாழ்வியலின் அங்கமான யாழ் பக்தி இலக்கியத்தில் எப்படி தெய்வீகத்தன்மை கற்பிக்கப்பட்டு வீணையாய் மருவியத்தை விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர். 

தமிழரின் மறைந்த இசைக்கருவி

"இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் - வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில்தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.வடிவம் வகை:யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) 'பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்'என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது 'இசையும் யாழும்'என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.யாழின் பரிணாமம்:வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்'என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.

அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்தள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை 'ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்''பண்ணோடி யா‘ வீணை பயின்றாய் போற்றி'என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் 'வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)'என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், 'வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)'என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.

ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று." 

Posted by: AK 

மூலம்:
http://tamilkadhalkavithai.blogspot.ca/2013/05/tamilar-isai-karuvi-yaalvilyaal.html

****************



பழந்தமிழர் இசை என்று தேடலில் முதலில் கிட்டியது தமிழ் விக்கிபீடியா தகவற்களஞ்சியம் தான். தமிழர்களின் இசை பற்றிய நூல்கள் முச்சங்க காலத்துக்கு முன்னரே எழுதப்பட்டதாகவும்; அது மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்டது எனவும் இந்த இணைப்பில் சொல்லப்படுகிறது. இயல், இசை, நாடகம் என கலையம்சங்கள் பொருதியிருந்ததாகவே பண்டைத் தமிழர் வாழ்வியலும் இருந்திருக்கிறது. இசை பற்றிய சில பண்டைய நூல்கள் காலத்தால் அழிந்துபோனாலும், இன்றும் தமிழிசையின் தோற்றம், வளர்ச்சி, மருவிய வரலாறுக்கான சான்றுகள் கிடப்பதாய் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேற்கொண்டு படிக்க இணைப்பு கீழே. இந்த இன்ணைப்பில் கிட்டிய தமிழிசை சுரங்களும், பின்னர் அவை எப்படி வடமொழி வடிவம் கொண்டன என்பதும் மேலும் ஆவலைத் துண்டியது. 

வ எண்  ஏழிசையின்      ஏழிசையின்                  பறவை/விளகுகளின் ஒலி 
              தமிழ்ப்பெயர்      வடமொழிப் பெயர் 

1            குரல்                  சட்சம்                           மயிலின் ஒலி 
2            துத்தம்                ரிஷபம்                          மாட்டின் ஒலி 
3            கைக்கிளை        காந்தாரம்                    ஆட்டின் ஒலி 
4            உழை                 மத்திமம்                       கிரவுஞ்சப்பறவையின் 
                                                                             ஒலி 
5            இளி                   பஞ்சமம்                       பஞ்சமம்      
6            விளரி                  தைவதம்                      குதிரையின் ஒலி       
7            தாரம்                  நிஷாதம்                      யானையின் ஒலி 

இச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன. அவை
  1. குரல் - சட்சம் (ஷட்ஜம்)- ச
  2. மென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1
  3. வன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2
  4. மென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1
  5. வன்கைக்கிளை - அந்தர காந்தாரம் - க2
  6. மெல்- உழை சுத்த மத்திமம்- ம1
  7. வல்- உழை பிரதி மத்திமம் - ம2
  8. இளி-பஞ்சமம்- ப
  9. மென் விளரி- சுத்த தைவதம்- த1
  10. வன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2
  11. மென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1
  12. வன்தாரம் - காகலி நிஷாதம் - நி2

மூலம்: 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
************************

இயல், இசை, நடனம் என கலைகளைப் பற்றிப் பேசும் நூல்கள், வகைகள், ஏழிசையின் தற்காலத்தில் திரிபுபடுத்தப்பட்ட, திரிபுபட்ட (!) வரலாற்றுவடிவத்தை இப்பாடலின் வழி ஆரம்பத்தில் இளையராராஜா இசைவடிவம் கொடுத்திருப்பது இனிமை. இசை நுணுக்க நயங்கள் ஞானமரபுகள் தாண்டி கடத்தப்படுவதில்லை, வளர்வதில்லை என்பதைக் கட்டுடைத்த தமிழ் சாதி இளையராஜாவும் இன்னும் சிலரும் தான் தமிழர்களின் இன்றைய பரிமாண இசையின் முகவரிகள் என்பதையும் மறுக்கமுடியாது. இப்படியானவர்கள் வர்த்தக இசை கடந்தும் ஒரு இனவழிச் சமூகத்தின் மரபுவழி இசை எனும் களத்தில் என்ன பங்காற்றியிருக்கிறார்கள், அதற்கான புதிய பரிமாணம் எதையாவது கொடுத்திருக்கிறார்களா என்று தேடவேண்டியுள்ளது. 


பாடலின் சில ஆரம்ப வரிகள் இசை, இயல்,  கலை நுணுக்க வரலாற்றுச் சான்றுகளைப் பகிர்கிறது.


"......

முதுநாரை, முதுகுருகு, இசை நுணுக்கம், களரி, யாவிரை, யாழ் நூல், பஞ்சமரபு 
இவை இசை கூறும்.
செயிற்றியம், கூத்தநூல், நடனக்கலை வகை கூறும்.
பல தொன்நூல்கள் கூறும் தோற்கருவி 
உழவு, முரசு, உடுக்கை, மிருதங்க தாளமேளமாகும்.


துளைக்கருவி புல்லாங்குழலொடு 

மரகிளை ஒடித்து அமைத்து சீவாளி பொருந்தும் முகவீணை 
திமிரி நாயணம் நாதஸ்வரமாகும். 
நரம்புக்கருவி மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ்
ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழ்
சாரங்கியொடு 
என்றும் நிறை வீணையாகும்.


மிடற்றுக்கருவி குரலாகும் 

பண்பட்டுப் பண்பாடும் குரல் வகையாகும் 
இத்தனையும் ஒருங்கிணைந்து 
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரமென 
ஏழிசை எழும்பு(த்)  தாளம் தவறாமல் 
இசைந்தாடும் நடனக்கலை தன்னில்... "
****************
மேலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பதன் பொருள் என்னவென்று இன்னோரு இணைப்பில் கிட்டிய தகவல். 

குரலே துத்தம் கைக்கிளை உழையே 
இளியே தாரம் என்றிவை 
எழும் யாழின் இசைகெழு நரம்பே 
என்பது பிங்கல நிகண்டு 

மூலம்: 
http://malaysiathamizhnerivazhviyaliyakkam.blogspot.ca/2013/11/blog-post_7019.html

சுவாமி விபுலானந்தரின் 'யாழ் நூல்'விமர்சனமாக அமைந்த இக்கட்டுரை மிக மேலோட்டமாக யாழ் இன் வரலாற்றுப்படிமம் பற்றிய ஆதாரங்களை விட்டுச்செல்கிறது.

"சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகா ரத்தையும் தேவாரங்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழரின் இசைப் பாரம் பரியத்தைத் தொடர்ச்சியாக இனங்காண முயலுகிறார் அடிகளார். பாயிரவியல், தேவராவியல், ஒழிபியல், சேர்க்கை என்ற பகுதிகளாக இந்நூல் வகுக்கப்பட்டுள்ளது. பாயிரவியலில் தன் நோக்கம் கூறிய அடிகளார் யாழுறுப்பியலில் பண்டைத் தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகவும் தாம் கற்ற மேற்கு நாட்டு வரலாறுகளை துணையாகவும் கொண்டு பண்டைத் தமிழர் மத்தியில் வழக்கிலிருந்த யாழ்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியிலீடு படுகிறார். வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ் எனப்படும் செங்கோட்டு யாழ், சகோடயாழ் ஆகிய யாழ் வகைகளை வெளிக் கொணர்கிறார். பெளதீகவியலுக்கு ஏற்ப யாழின் நரம்பின் அமைப் புக்கள் கூறப்பட்டு ஒலிகள் அளக் கப்படுகின்றன. இசை நரம்புகளின் சிற்றெல்லை, பேரெல்லை என்பன கூறப்படுகின்றன.

பாலைத்திரிபியலில் பாலையின் வகைகள் செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என வகுக்கப்பட்டு சகோடயாழுக்கு இசை கூட்டும் முறையும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையில் யாழா சிரியனது அமைதி கூறிய செய்யுட் பாகத்துக்கு உரை கூறும் முகத்தான் பண்டைய யாழ் பற்றித் தன் கருத்துரைக்கிறார் அடிகளார்.

இறுதியாக, சேர்க்கையில் தேவார இசைத்திரட்டும் இசை நாடகச் சூத்திரங்கள் சிலவும் சேர்க்கப்பட் டுள்ளன. முடிவுரையில் யாழ் நூலின் நோக்கம் கூறப்படுகிறது. சிலப்பதிகார அரங்கேற்று காதையில் யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத் தைந்து அடிகளுக்கு இயைந்த ஒரு விரிவுரை இந்நூல் என்று கூறுகிறார் அடிகளார்.

01. பண்டைத் தமிழர் இசைக் கருவிகளையும் இசையையும் வெளிக்கொணர்வதும்,
02. தமிழிசை வரலாற்றை விளக்குவதும்,
03. இசை ஆராய்ச்சிக்கு இன்றிய மையாத கணக்கு முறை களைக் கணித மூலம் விளக்குவதும்,
இந்நூலின் நோக்கங்கள் என நாம் சுருக்கமாகக் குறிப்பிடலாம்."

மூலம்:
http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/04/21/?fn=f13042116&p=1

****************


இப்படி யாழ் என்னும் இசைக்கருவி மூலம் தமிழர் மரபிசை குறித்து அறியும் முயற்சிக்கான தேடலில் கிடைத்தது பிரித்தானியாவிலிருந்து பிபிசி செய்தி நிறுவனம் உருவாக்கிய யாழ், Harp எனப்படும் இசைக்கருவியின் ஆவணப்பதிவு. அதில் Harp எனப்படும் யாழின் ஆரம்பம், அது பரவி, விரவியிருக்கும் திசை, இசை நுணுக்கம் வரை பேசும் பிபிசி ஆவணம் ஐரோப்பாவை மையமாக வைத்து சர்வதேச விருதுபெற்ற Harpist, Cartin Finch பிரித்தானிய "Royal Harpist to the Prince of Wales 2000 - 2004"ஐக் கொண்டு ஒர் சர்வதேச ஆவணப்படம் தயாரித்திருக்கிறது. எத்தியோப்பாவில் ஹார்ப் இன் ஆதி அந்தத்தைத் தேடிப்போய் ஐரோப்பாவில் நிறுத்தியிருக்கிறார்கள். இத்தாலியில் Harp உற்பத்தியில் தொடங்கி தெற்கு அமெரிக்காவில் வெனிசுவேலா, பிறகு ஸ்பெயின், ஃப்ரான்ஸ் என்று பயணிக்கிறது தொகுப்பு. ஒவ்வொரு இனமும், மக்களும் அவர்களிடையே தனித்திறமையோடு வளர்ந்து நிற்கும் Harpists கள் அவரவர் திறைமையை இசைவழி ரசிக்கவைக்கிறார்கள் காணொளியில். 


தமிழர்களின் யாழ் இந்த Harp வகையைச் சேர்ந்தது தானே என்று அவாவில் கடைசிவரை பொறுத்திருந்து முழுதும் பார்த்து முடித்ததில் தமிழ் யாழ் பற்றி எந்தக் குறிப்பும் கானொளியில் இல்லை என்பது ஏமாற்றமே. என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று யோசித்ததில் எல்லா நாடுகளிலும் அந்த இசைக்கருவியின் பாரம்பரியம் இன்றும் புழக்கத்தில் இருந்தபடியே காலத்துக்கும், இசைக்கும் ஏற்றாற்போல் பரிணாமம் கொடுத்தபடி  வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பண்டையத்தமிழர்களின் யாழ் ஆரியர்களால் வீணைவடிவம் கொடுக்கப்பட்டு திரிபடைந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் சமூகத்தில் வீணையும், கர்நாடக சங்கீதமும் தெய்வீகமாகி வேறு தளத்தில் ஆளப்படுகிறது. தொன்மநூல்களின் வழி நரம்புக்கருவியான யாழ் போன்ற இசைக்கருவிகளைப் பற்றிப் பேசும் தமிழ் மரபு அதற்கான சிற்பங்கள், ஓவியங்கள், இன்னபிற சான்றுகளை வடிக்காமல் எப்படி கோயிற் சிற்பங்களில் கூட வெறெதையெல்லாமொ வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் தமிழ் மன்னர்கள்! கைவிடப்பட்ட, கவனிக்காமல் புறக்கணிக்கப்பட்ட தமிழர் பாரம்பரியங்கள் இன்னும் எத்தனையோ என்கிற கேள்விகள் தொக்கி நிற்கிறது.


இதுபோன்ற எண்ணங்கள் உந்தித்தள்ள காணொளியில் இருக்கும் கருத்துக்களைப் படிக்கத் தலைப்பட்டு அங்கேயும் ஒரு தமிழர் என்று நினைக்கிறேன், தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தது கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. அவர் குறிப்பிட்டது, பிபிசி ஆசியாவில் தமிழர்களின் யாழ் என்கிற தொன்மைவாய்ந்த இசைக்கருவி பற்றிக்  குறிப்பிடவில்லை. இந்த ஆவணப்படம் முழுமையான ஒன்றாக இல்லை என்கிறார். அவர் கருத்து முழுமையாக இதோ, 

/Believeitornaught Apr 9, 2014

"This documentary is incomplete and to a great extent misleading without covering the Asian harp history. As many informed global historians would know harp is also a Tamil music instrument called Yaazh that dates back to 2000 plus years with literary evidences and archeological evidences. In fact there were variety of harps called Bary Yaazh, Magara Yaazh, Sengottu Yaazh etc. played with different number of strings and at various occasions. One of the earliest aboriginal Tamil places in Sri Lanka is called Yaazhpanam (misspelt by Britishers as Jaffna) in the name of harp. Also, harpists are called Paanan and his lady would be called Paadini. Never thought BBC would just cover european history alone and mislead the public by ignoring Tamil history of Harp, which comparably or rather more historic than Irish or Welsh or Celtic harp histories."


Comment Courtesy: Believeitornaught. 

இவர் கருத்தைப் படித்த பிறகு 'யாழ்ப்பாணம்'என்ற ஈழத்தின் வடக்கில் ஒரு பகுதிக்கும் யாழ் இசைக்கருவிக்கும் என்ன தொடர்பு இருக்ககூடும் என்று மீண்டும் ஒரு கேள்வி மனதில் தோன்றியது. கட்டற்ற தேடற்களஞ்சியம் கூகுள் கொடுத்த இந்த இணைப்பு இப்படி சொல்கிறது. 

"யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராய்ந்தால் யாழ் இசைக்கருவிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணரமுடியும். சோழநாட்டிலிருந்து வந்த பாணன் ஒருவன் ஜெயதுங்கராசன் முன்னிலையில் யாழை வாசித்து மகிழ்வித்தமையால் மணற்றியின் காலப்போக்கில் குடாநாடு முழுவதுக்கும் அப்பெயர் வழங்கப்பட்டது."

மூலம்: 
http://ejaffna.blogspot.ca/2010/11/blog-post_4548.html

விக்கிபீடியா தகவல்கள் எப்போதும் யாரால் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்கிற நிலையால், இந்தப் புத்தகத்தின் இணைப்பைத் தேடி இணைத்துள்ளேன். அதில் யாழ்ப்பாணம் என்கிற பெயர்க்காரணம் ஒரு வரியில், "யாழ்ப்பாணம் அது யாழில் வல்ல ஒரு பாணனுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டமையின் யாழ்ப்பானமமெனப்படுவதாயிற்று."வரலாறு முக்கியம் என்பதால் இதன் சுட்டி கீழே. என் சேமிப்பிற்க்காகவும் வேண்டி. 

http://www.noolaham.net/project/13/1207/1207.pdf

http://noolaham.net/project/06/565/565.pdf

(ஈழத்தமிழர் தொன்மை)

யாழ்ப்பாணம் என்ற காரணப்பெயருக்கு பல செவிவழிக்கதைகளும் உண்டு என்கிறார்கள். எதுவாயினும் 'யாழ்'க்கும் யாழ்ப்பாணத்துக்கும் இருக்கும் தொடர்பை யாரும் நான் தேடியவரையில் மறுக்கவில்லை. 


தேடித்தேடி தொலைந்து ஒருவாறு முக்கியமான பகுதிகளை மட்டும் அல்லது எனக்கு முக்கியம் என்று தோன்றியவைகளை மட்டும் இங்கே யாழ் பற்றி, அதுக்கும் தமிழர்களும் இடையேயான தொன்மக்கூறுகள் பற்றியும் கண்டெடுத்துக் கொடுத்திருக்கிறேன். மறுபடியும், நான் வரலாறு படித்தவர் கிடையாது. அழிந்துபோன, அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் வரலாறு குறித்த ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த எறும்பின் முயற்சி. 

என்னை இப்பதிவெழுதத் தூண்டிய ஓவியம். 




Image & Source Courtesy: Google. 

பொய்களை வாங்கும் உலகம்!

$
0
0

ஒரு தனிமனிதனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ அநியாயம் நிகழ்ந்துவிட்டால் அதற்குரிய நியாயம் கிடைக்கவேண்டும் என்று பதைப்பதும், துடிப்பதும் மனித இயல்பு. இந்த அடிப்படையே தற்காலத்தில் எத்தனையோ  வழக்குகள், மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்த பிரச்சனைகள் குறித்த தொலைக்காட்சித் தொடர்கள்  வெற்றிக்கு காரணம் என்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒருவருக்கு நியாயம் கிடைக்கும் என்று அது வழங்கப்பட்ட பரிமாணங்களைக் கொண்டு பார்வையாளர் ஒரு முடிவுக்கு வரலாம். சில சமயங்களில் ஏற்கனவே அறியப்பட்ட ஒரு வழக்கு அல்லது நிகழ்வு குறித்த பல்கோணப்பார்வையை கொண்டவர்களுக்கு அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த பார்வைப் பரிமாணம் அதுவழங்கப்பட்ட கோணத்திலிருந்தும் மாறுபடலாம்.

தவறு ஒன்று இழைக்கப்பட்டது என்றாலே உடனடி நியாயம் கிடைக்கவேண்டும் என்னும் மனித இயல்பின் தன்மையே ஒரு சினிமா குறியீட்டு நாயகன் அல்லது நாயகி தன்வழியில் தீர்ப்பு வழங்கும் மசாலா சினிமாக்களின் வெற்றிக் குறியீடும் ஆகியும் போகிறது.


சரி, இதிலிருந்து விலகி நான் பேசவந்ததை பேசுகிறேன். இலங்கை என்கிற நாட்டில் தசாப்தங்களாக திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இறுதித்தீர்வை நோக்கிய போராட்டமும் பல தசாப்தங்களாக தொடர்கிறது. ஈழத்தமிழர்களின் போராட்டக் களம் அந்த மண்ணைக் கடந்தும் சர்வதேச அளவில் அப்பிரச்சனை பேசப்படும் அளவுக்கு ஒரு குறிப்பிட்ட பரிமாண வளர்ச்சியை கண்டிருக்கிறது, லட்சணக்கான அப்பாவிகளின் உயிர்ப்பலி, காணாமற்போனோர், மற்றும் விடுதலைக்காகப் போராடியவர்களின் தியாகம் என்பவற்றை உள்ளடக்கியபடி. 2009 மே மாதத்திற்குப் பிறகு இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் எத்தனையோ பிரச்சனைகளில் ஒன்றாக தவணைமுறையில் பேசப்பட்டு வருகிறது. ஈழப்பிரச்சனை பாலஸ்தீனப் பிரச்சனை போல் ஐ. நா. வின் பொதுச்சபையில் பேசப்படவேண்டியது. ஆனால், அவ்வாறு பேசப்படுவது கிடையாது.


முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்டது போர்க்குற்றம் என்கிற குறுகிய சட்டத்திற்குள் இப்பிரச்சனையை அடக்கியதோடு மட்டுமில்லாமல், ஏதோ தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காரணத்தால் தான் அங்கே தங்கள் சொந்தமண்ணில் வாழ்ந்த தமிழர்களுக்கு எந்தவொரு அரசியல் உரிமையும் கொடுக்கமுடியவில்லை என்பது போல் நாடகமாடிய பெளத்த  சிங்கள  அரசாட்சியாளர்களுக்கு கொஞ்சம் நெருக்கடி. இயலுமானவரை Lobbying Group, International Crisis Group, இந்தியா, அமெரிக்கா போன்றோரது உதவியுடன் ஒருவேளை இதை தட்டிக்கழிக்கழிக்கலாமென்றால் மனித உரிமை அமைப்புகள் விடுவதாயில்லை. கூடவே பிரித்தானிய காட்சி ஊடகமான சனல் 4 வேறு கிடுக்கிப் பிடி போடுகிறார்கள். விளைவு இலங்கை ஆட்சியாளர்கள் வழக்கம் போல் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்கிற தென்னாபிரிக்கப் பாணியில் ஏதோ ஒரு குறைகளுடன் கூடிய அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் மனித உரிமைகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் நாடகம்.  நல்லிணக்க ஆணைக்குழுவை மனித உரிமை அமைப்புகள் கூட்டாக அது சர்வதேச தரத்தை கொண்டதல்ல என்பதோடு மட்டுமல்ல அந்த அமைப்பின் அறிக்கையை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.


இம்முறையும் எதிர்வரும் மார்ச் மாதம் மறுபடியும் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரமும் பேசப்படும், நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், அதை பரிசீலனை செய்யவும் மறுபடியும் கால அவகாசம் வழங்கப்படும்.


பாதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதுமே தங்களுக்குரிய நீதி தாமதமின்றி கிடைக்கவேண்டுமென்றே நினைப்பார்கள். ஆனால், அந்த நீதியை வழங்கும் ஜனநாயக பரிபாலனமும், நீதியலகுகளும் எவ்வாறு குறைபாடுகளைக் கொண்டது என்பது இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு கிடைத்த அனுபவமும் சாட்சி. இதுகுறித்த அடிப்படைகளை வசதியாய் ஒதுக்கிவிட்டு, இலங்கை அரசியல் யாப்பின் வழி தமிழர்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை மறந்துவிட்டு வெறுமனே நான்கு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய இறுதித்தீர்வு நோக்கிய நடைமுறை அல்ல.

இதைப் பலமுறை எழுதியாகிவிட்டது என்றாலும் மறுபடியும் காலத்தின் தேவைகருதி, இலங்கை அந்நியப்படையெடுப்புக்கு முன் மூன்று தனித்தனி ராச்சியங்களை கொண்டிருந்தது. யாழ்ப்பாண ஆட்சி (Kingdom) 1215-1619 AD வரை நிலைத்திருந்தது என்பதும்; Colebroke-Cameron Reforms 1833 தான் மூன்று ராச்சியங்களையும் பிரிதானிய ஆட்சியில் ஒன்றிணைத்து அபிவிருத்திக்கான ஆட்சி அதிகாரத்தையும் சிங்களர்களிடம் கொடுத்தது என்பது வரலாற்று உண்மைகள். இதன் பிறகு சுதந்திர இலங்கையின் பெளத்த சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்குக் காலம் அரசியல் யாப்பில் தமிழர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைக் கூட பறித்ததும், தாங்களே ஆளுவதற்கு ஏற்றவாறு யாப்பை மாற்றியமைத்ததும் வரலாறு. சுயநிர்ணய உரிமை குறித்து எந்தவொரு அரசியல்வாதியும் பேசமுடியாது என்கிறது இலங்கை அரசியல் யாப்பின் 6வது திருத்தச்சட்டம். இது தான் இலங்கை பேணும் ஜனநாயகத்தின் போலிமுகம்.

இலங்கை அரசியல் யாப்புக்கு முற்பட்ட வெளியக சுயநிர்ணய உரிமையையும் எமக்குரிய வரலாற்று நிலத்தையும் மீளக்கேட்டால் அது தவறு இல்லை. அதைப்போலவே, வரலாற்று ரீதியான சுயநிர்ணய உரிமையையும் தாண்டி ஒரு தனித்தேசிய இனமாக எங்களுக்கு ஐ. நா. சர்வதேச ஒப்பந்தங்களின் படி சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்கும் உரிமை உண்டு. ஆனால் இதெல்லாம் 2009 மே மாதத்திற்குப் பிறகு நிறையவே அரசியல் திசைதிருப்பல்களால் போர்க்குற்ற விசாரணை என்கிற ஒரு கோணத்தில் வேறு பார்க்கப்படுகிறது. போர்க்குற்ற விசாரணை தேவைதான், மறுக்கவில்லை. அத்தோடு சேர்த்து சமாந்தரமாக தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்தும் பேசவேண்டியது கட்டாயம் என்பது என் புரிதல்.


இந்த அடிப்படைகளை மாற்றித்தான் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கவேண்டும். ஆனால், அதற்கு காலம் நிறைய எடுக்கும். இதெல்லாம் நான் அவ்வப்போது ஈழத்தமிழர்கள் குறித்த விடயங்களை அறியத்தரும் தமிழ் ஊடக அரசியல் அவதானிகள் சொல்வது. சில அரசியல் அவதானிகள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அது ஒருபுறமிருக்க, இந்தமுறை ஐ. நா. மனித உரிமை சபைக் கூட்டத்தொடர் இடம்பெறும் போது அங்கே இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை உடைக்க தமிழர்கள் அமைப்புகள் இருக்குமா என்றால், நான் வாழும் நாட்டிலிருந்து இரண்டே இரண்டு அமைப்புகள் பங்குபற்றும் என்கிறார்கள் தமிழ் ஊடகங்கள். ஒன்று, Canadian Centre for Tamils, மற்றது Lawyers Right Watch. இந்த அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள் தங்கள் செயற்பாடுகளை, மனித உரிமை சபையின் நடைமுறைகளை இலங்கை விடயத்தில் கொஞ்சம் அறியத்தந்தார்கள்.

இதில் நாடுகடந்த தமிழீழ அரச நிலைப்பாடுகள் என்னவென்றால், அவர்கள் இந்தமுறை இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளப்போவதில்லையாம். அவர்களின் நிலைப்பாட்டை உருத்திரகுமாரன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கினார் போலிருக்கிறது. நான் தவறவிட்டுவிட்டேன். இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர்களால் எப்படி தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எப்படி மக்கள் ஆணை வழங்கப்பட்டதோ அதே போல் தானே புலம்பெயர்தேசத்தில் ஜனநாயக வழியில் நாடு கடந்த அரசுக்கும் மக்கள் தங்கள் தார்மீக ஆதரவை ஈழம் நோக்கிய இறுதிதீர்வை நோக்கி முன்னெடுக்க வேண்டுமென்று ஆதரவு வழங்கினார்கள். இடையில் இவர்கள் இருவரது நிலைப்பாடுகளும் ஒட்டுமொத்த தமிழர்களையும் குழப்பமடையவே வைக்கிறது. கொடுக்கப்பட்ட மக்கள் ஆணையை நிறைவேற்றாதவர்களிடம் விளக்கம் கேட்கவேண்டியதும் எம் கடமை.

இதைத் தவிர்த்து மனித உரிமை கூட்டத்தொடரின்போது பிரித்தானிய காட்சி ஊடகமான சனல் 4 காண்பிக்கப்போகும் இன்னொரு இறுதிப்போரின் No Fire Zone இல் நடைபெற்ற போர்க்குற்றங்களின் காணொளி ஒன்றையும் காண்பிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அது குறித்த எதிர்ப்பார்ப்புகளும் உண்டு. ஏற்கனவே அது இந்தியப் பாராளுமன்றத்தில் காட்டப்பட்டும் விட்டது. அதில் வரும் ஒரு சில காட்சிகள் குறித்த நம்பகத்தன்மையை குறித்து இந்திய உள்துறை அமைச்சர் சந்தேகம் எழுப்பியிருந்தார் என்பது தெரிந்ததே.

வழக்கம் போல் இலங்கை ஆட்சியாளர்கள் இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவார்கள். அதை போலி என்றே தாங்களே ஆராய்ந்து அறிக்கை விடுவார்கள். அல்லது சென்ற முறை போல் "Lies Agreed Upon"என்கிற ஒரு பிரச்சாரப் படம் International Crisis Group இன் உதவியுடன் வெளியிடப்பட்டதாக இந்தத் தளம் சொல்கிறது.
 "This story starts in September of last year with a screening of “Lies Agreed Upon” – a government of Sri Lanka propaganda film which was expertly deconstructed by the International Crisis Group."
இந்த தளத்தின் இணைப்பை இங்கே கொண்டுவர இஸ்டமில்லை என்றாலும் தேவை கருதி இணைப்பை கொடுத்திருக்கிறேன்.

இதுபோன்ற பாலுக்கும் காவல். பூனைக்கும் காவல் என்கிற இரட்டை வேடதாரிகள் சொல்வதைக் கொண்டு இப்போது மீளிணக்கம் பிறகு சுயநிர்ணய உரிமை என்பதற்காகவா இவ்வளவு போராட்டம் இழப்பு எல்லாம். எதிர்வரும் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் மீண்டும் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் செய்திகள் கண்ணில் படுகின்றன. எல்லாமே போர்க்குற்ற சர்வதேச விசாரணையை மழுங்கடித்து, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை கைவிடவேண்டும் தமிழர்கள் என்பதே காரணம் என்கிறார்கள் சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள்.
ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அது நீண்ட நாட்கள் எடுக்கலாம். இதெல்லாம் யதார்த்த உண்மைகள் என்றே கொண்டாலும், எப்படி தெற்கு சூடானுக்கு விடுதலை கிடைத்தது! அதையும் கொஞ்சம் கருத்திற்கொள்ளலாமே. சர்வதேச போர்க்குற்ற விசாரணை  தேவை என்கிற அதேவேளை சுயநிர்ணய உரிமையையும் முன்னிறுத்தி பேசலாமே அரசியல் தெரிந்தவர்கள்.
இதற்கு மேல் எனக்கும் சொல்ல ஏதுமில்லை. மீதியை மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடக்கும் போது காணவேண்டியது தான். நீதி வேண்டுமென்று ஏங்கிக் கிடக்கும் ஈழத்தமிழனுக்கு மனித உரிமைகள் சபையின் செயற்பாடுகள் நிச்சயம் குறியீட்டு திரை நாயக, நாயகிகள் போன்ற வெற்றுத்தோற்றமே என்பதையும் ஜீரணிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
Image: Google.

வருமுன் வழிமொழியப்படும் தீர்மானம்!

$
0
0
இலங்கையில் 65 வருடங்களுக்கு மேலாக நடந்துகொண்டிருப்பது வெறும் மனித உரிமை மீறல்களே என்று வல்வந்தமாகத் திணிக்கப்பட நிறைய முயற்சிகள் நடைபெறுகிறது. ஆம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் அமெரிக்கத் தீர்மானம் தான் இப்போதைய ஈழத்தமிழர்களுக்கெதிரான ஆயுதம். அது ஈழத்தமிழர்களுக்கான அரசியல் சுயநிர்ணய உரிமையை வென்றுதராமல், அவர்களை மேலும் பெளத்த-சிங்கள அரசியலுக்கு பலியாக்குவதே ஆகும்.
 
இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால் இந்தத் தீர்மானத்தை வரும்முன்னமே இந்தியாவால் வழிமொழியப்படுமோ என்னும் எதிர்பார்ப்பைக் கொடுப்பது  அரசியல்வாதிகளின் அரைகுறை அறிக்கைகள் தான். இலங்கை எதிரி நாடு கிடையாது; தமிழர்களுக்கு அரசியல் யாப்பு, சாசனத்தின் வழி உரிமைகள் கிடைக்க வலியுறுத்தப்படும் என்று திடீரென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகிறார். அப்படியானால், ஏற்றுக்குள்ளுகிறதா இந்தியா, ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசியல் சாசனத்திலேயே உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை!

அரசியல் சாசனத்தில் மறுக்கப்படும் உரிமைகள் எப்படி இரண்டு பக்க மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் மூலம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் கேள்வி எழுகிறது மனதில். இல்லையென்றால் வேறோர் நாட்டின் தயாரிக்கப்பட்ட பேச்சை ஐ. நா. சபையில் வாசித்த முன்னாள் வெளியுறவு அமைச்சரின் செயல் போல் தானா இதுவும்!! ஏன் இந்த தீர்மானம் குறித்து இத்தனை விளம்பரங்கள் என்று கேள்விகளும் ஓடாமல் இல்லை. பிரித்தானிய காட்சி ஊடகத்தின் வழி வெளிவந்த 'No Fire Zone - Sri Lanka's Killing Fields' ஆவணக்காட்சிப்படுத்தலும் காரணமோ!

தவிர, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி இம்மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டதும் செய்திகளில் வெளிவந்தது. நாராயணசாமியும், சல்மான் குர்ஷித்தும்   மாற்றி, மாற்றி என்ன சொல்லவருகிறார்கள் என்பது ஒருபுறம்!  இப்படி இந்த தீர்மானத்தை இந்தியாவானது வருமுன் ஆதரிக்கிறேன், ஆதரிக்கவில்லை என்பது போன்ற அரைகுறையான   அறிக்கைகள் எப்படி இருந்தாலும், இலங்கை-இந்திய உறவுக்குப் பின்னான வரலாற்று நிகழ்வுகளை, அதனால் தமிழர்களுக்கு ஏதும் நன்மைகள் விளைந்ததா என்பதையும் மீளப்பார்க்க வைக்கிறது.

1840-1850 வரையான காலப்பகுதியில் பிரிதானிய காலனியாதிக்கத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் தமிழகத்தமிழர்கள் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து தோட்டத்தொழிலுக்காக தேயிலைதோட்டங்களில் வேலை செய்யக் கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் குரியுரிமையை பறிக்கும் இலங்கையின் குடியுரிமைச் சட்டம் முதல், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போன்றோரது காலத்தில் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் அவர்களில் ஒருபகுதியினர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டது, இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதன் பின்னான அமைதிப்படை அட்டூழியம், அதைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முடிவு என்பது கடந்தகால இந்தியாவின் தமிழர்கள் குறித்த வரலாற்று அரசியல். இப்போது மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான அமெரிக்கத்தீர்மானமும், தமிழர்கள் மீது மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நடத்தப்படும் Structural Genocide க்கு எந்தவொரு கண்டனமோ, வருத்தமோ கூட இல்லாத அந்த தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவும், இதிலெல்லாம் இந்தியாவின் பங்கை உள்ளூர் முதல் உலக, சர்வதேச ஊட்கங்கள் வரை பேசிவிட்டன. என்ன, சில உள்ளூர் அரசியல்வாதிகள் தான் இன்னும் selective amnesia விலேயே இருக்கிறார்கள்.
 
 
அவர்கள் எப்போதுமே அப்படித்தானே என்று இந்தமுறையும் கடக்கிறேன். மொத்தத்தில் இந்தியா ஈழத்தமிழர்களின் நலன் கருதி எந்தவொரு ஒப்பந்தமும் இலங்கையுடன் செயதே இல்லை என்பதே வரலாறு.
அப்படி என்னதான் இருக்கிறது இந்த தீர்மானத்தில் என்று அதன் Draft ஐ இணையத்தில் தேடிப் படித்தேன். அடேங்கப்பா! பெளத்த-சிங்கள அரசியல் யாப்பை சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி முனையில் நடைமுறைப்படுத்தி, ஈழத்தமிழனுக்கான 65 வருட உரிமை மறுப்புகளை அமெரிக்கா ஒன்றிரண்டு பக்கங்களில் ஏதோ எழுதி தீர்க்கப்போகிறதா என்று வியந்து தான் போனேன். படித்துப் பார்த்தால் அந்த தீர்மான வார்த்தைகளில் தமிழன் என்றோ அல்லது தமிழர்களுக்கான உரிமைகள் என்கிற வார்த்தைப் பிரயோகமோ மருந்துக்கும் கிடையாது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்கம் என்கிற ஒரு பாரிய குறைபாடுகளுடனான ஒரு அறிக்கையை ஒட்டியே இந்த தீர்மானமும் (L.2). இலங்கையின் அரச நிர்வாகம், நீதிபரிபாலனம், பத்திரிகை சுதந்திரம் எல்லாமே சீர்கெட்டுக்கிடக்க அந்த நாட்டிடமிருந்து Meaningful Accountability யை எதிர்பார்க்கிறது என்கிற வெற்று நாடகங்களின் தீர்மானம்.
 
சென்றமுறை மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்துக்கு என்ன ஆனது என்று தேடினால், Inner City Press (http://innercitypress.blogspot.ca/2013/02/on-sri-lanka-uns-ban-ki-moon-accepts.html காட்டும் ஆதாரம் காறி உமிழ வைக்கிறது கேடுகெட்ட ஐ. நா. வின் செயற்பாடுகள் மீது. இலங்கையில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்காணித்து இப்போது 'Whitewash Report'கொடுத்திருக்கிறது என்கிறது Inner City Press. இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஜப்பான் பிரதிநிதி, பங்களாதேஷ், ருமேனியா, மற்றும் Columbia University பிரதிநிதிகளை கொண்டதாம் இந்தக் குழு. இன்னொரு செய்தியில் இதே இன்னர் சிட்டி ப்ரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது, இலங்கையின் மனித உரிமைகள் சபைப் பிரதிநிதி மகிந்த சமரசிங்கேவுக்கு ஐ. நா. வின் செயலர் இலங்கைப் பிரச்சனை ஐ. நா. வின் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ளப்படாது என்று கூறினாராம் பெருமையாக பீத்திக்கொள்கிறாராம்.

இவை தவிர, இந்தியாவில் சனல் 4 இன் Callum Macrae தயாரித்த No Fire Zone - Sri Lanka's Killing Field காட்சிப்படுத்தல் ஒருவிதமான அலையை அரசியல் மட்டம் முதல் பொதுமக்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது. இந்தியாவானது அமெரிக்கா இம்முறை கொண்டுவரவிருக்கும் தீர்மானம் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் யாப்பின் வழியான பெளத்த-சிங்கள அடக்குமுறையும், காலங்காலமாக இடம்பெறும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையும் தடுத்த நிறுத்தப்படும் என்கிற ஒற்றை வார்த்தை கூட இல்லாத ஓரு தீர்மானம் யாருக்கு என்ன லாபம்!
 
வல்லான் வகுத்ததே சட்டம். வென்றவன் எழுதியதே வரலாறு. இது தான் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழினத்துக்கே வரலாற்று சறுக்கல். எங்கள் சுயநிர்ணய உரிமையை மறுப்பதில், வரலாற்றை திசைதிருப்புவதில் தான் எத்தனை சர்வதேச கூட்டு முயற்சிகள்.

Image: Google.
 

இங்கிலிஷ் விங்கிலிஷ் - திரைவிமர்சனம்

$
0
0

இந்தப் படம் பற்றி ஏன் விமர்சனம் எழுதத்தோன்றியது என்றால், இப்படம் பற்றி நிறையப்பேசினார்கள், எழுதினார்கள், கட்டாயம் பார்க்கவேண்டிய படம் என்றார்கள். அதனால் என் இரண்டு சதங்கள் மட்டுமல்ல. இது பெண்கள் பற்றிய அவர்களின் self-esteem, சுயமரியாதை குறித்த படம் என்பதால் எழுதத்தோன்றியது.

மூன்றாம் உலகையும் முழுதாய் விழுங்கிவிட்ட உலகமயமாக்கல் வாழ்வியல் சூழலில் நடுத்தரவர்க்க குடும்பத்தலைவிகளின் சுயகெளரவத்தைச் சோதிக்கும் சவாலான ஆங்கில மொழி பற்றிய படம். சசி என்கிற ஸ்ரீதேவியின் பாத்திரப்படைப்பின் அறிமுகத்துடன் படம் ஆரம்பிக்கிறது. உலகமயமாக்கப்பட்ட கல்வித்திட்ட பாடவிதானங்களின், பாடசாலை நடைமுறைகளின் பின்னணியில் ஸ்ரீதேவி எதிர்கொள்ளும் சவால்களும், அதில் அவர் துவண்டுபோவதும் காட்சியாக்கப்படுவதில் தொடங்குகிறது கதைக்களம்.

தனது மகள் தன் வயதுக்குரிய குட்டி, குட்டி கெளரவங்களோடு தாயாராடு மல்லுக்கட்டுவதும், அம்மாவான ஸ்ரீதேவி அதில் சிக்கி மகளிடமே அவமானபடுவதும் இயல்பாய் அமைந்திருக்கிறது. சுட்டியாய் ஒரு மகன் அம்மாவுக்கு ஆறுதல். காலையில் சாப்பாட்டு மேசையில் குழந்தைகளோடு சாப்பிடுவது, இரவில் தனிமையில் மனைவியிடம் பேச்சுக்கு இடமில்லை ஒன்லி ஆக்‌ஷன் என்கிற  தனக்குரிய தேவைகளை எதிர்பார்க்கும் சராசரி Bread winner கணவர் என்பதைத் தவிர வேறேதும் தோன்றாத கதாபாத்திரம். அதற்கேற்றாற் போன்ற வசன அமைப்பு. மறுபடியும், காட்சியின் நீட்சி ஸ்ரீதேவி மறுநாள் காலையில் சமயலறையில் பிரசன்னமாவதோடு தொடர்வது கச்சிதம். கணவர் சின்னச் சின்ன விசயங்களில் மனைவியின் சுயகெளரவத்தை சுட்டுவிட தனக்குள் சுருண்டுபோன ஸ்ரீதேவி எப்படி அதிலிருந்து தான் குறித்த சுயத்தை கட்டி எழுப்புகிறார் என்பதே மீதிப்படம்.

தன் அக்கா மகள் கல்யாணத்துக்கு அமெரிக்கா போவதில் தொடங்கி ஸ்ரீதேவியின் ஆங்கில பேச்சாற்றலுக்கு அவர் இந்தியா திரும்பி வரும்வரை யார் யாரெல்லாம் positive reinforcement ஆக இருக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
அஜித் கதாபாத்திரம் ஸ்ரீதேவிக்கு ஊக்கம் கொடுப்பது போலவே அமெரிக்க அதிகாரியிடம் எள்ளலாக அவர்கள் நாட்டு பொருளாதாரத்தை குத்திக்காட்டும் கொஞ்சம் உலக அனுபவம் உள்ள பாத்திரப்படைப்பு.

அமெரிக்காவில் ஆங்கிலம் கற்கும் காலத்தில் எதேச்சையாய் பிரான்ஸ் நாட்டு  ஆண் ஒருவர் ஸ்ரீதேவியின் பால் கவரப்பட்டு அவரை நெருங்குவதில் ஊடாடும் மெல்லிய காதல். ஆங்கிலம் கற்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதை ஆரம்பத்தில் கவனிக்காத ஸ்ரீதேவி, பின்னர் தனக்குரிய மரியாதையை கொடுக்காத உறவுகள் பற்றிய மனக்குமுறலை தன் மொழியில் கொட்டக் கேட்டுக்கொண்டே இருக்கும் பிரெஞ் காரரிடம், ‘நல்லாருக்கில்ல, இப்பிடி புரியாமலே பேசிக்கிறது’ என்பதில் கொஞ்சம் நெருக்கமாகிறார்கள். பின்னர் வரும் காட்சி ஒன்றில் அவரும் ப்ரெஞ்சில் ஏதோ உருக்கமாய் சொல்வதும், அதை ஸ்ரீதேவி புரிந்துகொண்டாரா என்பது பார்வையாளரான எனக்குப் புரியாததும் கூட அழகு.  இவரும் நாயகியின் ஆங்கிலப் பேச்சுத்திறமையை மெச்சுவதில் தன் பங்கை செய்கிறார்.

தவிர, இந்த மெல்லிய காதலை நாயகி ஏன் கன்னாபின்னாவென்று பதட்டத்தில் வார்த்தைகளை கொட்டித்தான் மறுக்கவேண்டுமா, வழக்கமான சினிமாக்கள் போல. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்பிடியே காட்டுவார்களோ. இன்னும் கொஞ்சம் ஆழமாக adult talk ஆக புரிந்துணர்வுடன் ஏன் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் பேச முடியவில்லை. மற்றப்படி, அவர் சொல்லும் எனக்கு காதல் தேவையில்லை. எனக்கு வேண்டியது கொஞ்சம் மரியாதை என்பதை இன்னும் தெளிவாக பிரெஞ்காரரிடமே சொல்லியிருக்கலாமோ! அப்படிச் சொல்லியிருந்தால் அவரும் கடைசி வரை சோகமாவே முகத்தை வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.



மற்றப்படி, வகுப்பில் எல்லோரையும் போல சர்வசாதாரணமாய் பிரெஞ்காரர் நாயகியை She is beautiful என்பதும்; தான் ஆங்கில வகுப்பில் அதிகம் விரும்பி வருவது நாயகிக்காகவே என்று இயல்பாய் சொல்வதும்; அதற்கு நாயகி கலாச்சார நயங்களோடு சங்கடப்படுவதும்; கூட இருந்த இந்தியர் நீ எப்படி ஒரு பெண்ணைப் பற்றி பொதுவெளியில் இப்படிப் பேசலாம் என்பதும் சமூகம் குறித்த குறியீடுகள். பிரெஞ்காரர் பாவம் ஙேஏஏஏ என்று பார்க்கிறார்.


இவர்களை விட, நாயகியான ஸ்ரீதேவியின் அக்கா மகள், மற்றும் ஆங்கில வகுப்பின் ஆசிரியர், கூடப்படித்தவர்கள் என எல்லோரும் ஸ்ரீதேவியின் ஆங்கிலத்தை பாராட்டி ஊக்கம் கொடுக்கிறார்கள். தான் ஆங்கிலம் கற்கும் முயற்சியில் இருக்கும் போது, சிறிய விபத்தாய் குழந்தைக்கு அடிபடும் இடத்தில் குழம்பும் அம்மாவின் பொறுப்பு குறித்த குற்ற உணர்வு, குழப்பம், அழுகை, கணவர் உனக்குள்ளேயே நீ தனியாய் சந்தோசமாய் இருக்கிறாய் என்னுமிடத்தில் அதிர்ச்சியாவது எல்லாம் சராசரிப் பெண்ணின் உருவகப்படுத்தல்கள்.

இதையெல்லாம் கடந்து வீடு விட்டு வெளியே வந்ததும் தான் சந்தித்த மனிதர்களின் வழி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, தன் சொந்தமுயற்சியில் ஒரு அந்நிய மொழியை கற்பதும் பெண்களுக்கான செய்தி.

இறுதியாக, ஆங்கிலம் கற்கவேண்டுமென்றால் அமெரிக்காவுக்குத் தான் போகவேண்டுமா என்கிற கேள்வி மனதில் ஏனோ எழாமல் இல்லை. பொருளாதாரச் சிக்கலின்றி வாழும் ஒரு நடுத்தரவர்க்க குடும்பப் பெண்ணின் அன்றாடவாழ்வின் சுயகெளரவம் குறித்த சவால்கள் என்பதும்; பெண் என்பவள் தனக்குரிய சுயமரியாதையை தானே கட்டியமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைத் தவிர பெரிதாய் ஏதும் சொல்லத்தோன்றவில்லை படம் பற்றி.

படம்: கூகுள்

அமெரிக்கத் தீர்மானமும், ஐ. நா. வும் மற்றும் பலரும்!!

$
0
0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் இலங்கை குறித்த நிகழ்ச்சி நிரலில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது அமெரிக்காவால் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் இரண்டாம் பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
 
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் நான்கின் ஆவணப்படமும் தமிழர் தரப்புக்கு கொஞ்சம் வலுச் சேர்ப்பதாகவே இருக்கிறது. கூடவே, தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் சிறு அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் என்பனவும் நடைபெறுகின்றன. தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும், மற்றைய சிறிய அமைப்புகளின் இலங்கை குறித்த கொள்கைகளும், போராட்டங்களும் வேறுபாடுடையதாகவே இருப்பதாய் காணப்படுகிறது. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு அமெரிக்கா கொண்டுவரவிருப்பதாய் சொல்லப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரி என்பதாகும். ஆனால், சிறிய அமைப்புகளின் கோரிக்கையானது சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணையும், சுயநிர்ணய உரிமைக்கான ஐ. நா. தலைமியிலான வாக்கெடுப்பும் என்பதாகும்.
 
இதற்கிடையே ஐ. நா. வின்  Accountability Assessment Observation Project தொடர்பான கண் துடைப்பு அறிக்கை ஜப்பானின் பிரதிநிதி தலைமையில் ஐ. நா. செயலாளரிடம் கையளிப்பு நடைபெற்றது. அது ஐ. நா. செயலுருக்கு திருப்தியாம். ஆனால், அது இன்றுவரை வெளியிடப்படவில்லை. 
 
மறுபுறம், ஐ. நா. செயலருக்கு ஐ. நா. வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்க ஐ. நா. வின் அறிக்கையிலேயே போர்க்குற்றம் புரிந்திருக்கிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சவேந்திர சில்வா அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதி அன்ரொனின் ஸ்கேலியாவுடன் கூட படம் பிடித்தும், அமெரிக்க கடற்படைக்கு முன் பேச்சு நிகழ்த்தியும் தன் நெருக்கத்தை காட்டிக்கொண்டிருக்கிற அரசியல் காட்சிப்பிழைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன.
 
இதைவிட அமெரிக்காவின் முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர் மைக்கேல் எஸ். போஸ்னர் ஓய்வுபெறும் தறுவாயில் இலங்கையைப் பொறுத்தவரை அமெரிக்க ஜனாதிபதி வெற்றியை சந்தித்தார் என்று பேசியதாக இன்னர் சிட்டி ப்ரஸ் குறிப்பிட்டிருக்கிறது. 2009 இல் நிகழ்ந்த பாரிய இனப்படுகொலைக்கு யாரும் பொறுப்புக் கூறவேண்டிய தேவையை கடந்தே எல்லாம் நிகழ்ந்தேறுகிறது. ஒரு புறம் சவேந்திரா சில்வா, பாலித ஹோஹனவுக்கும் அமெரிக்கா உறவு. கூடவே தமிழர்களுக்கும் மனித உரிமைகள் சபயில் காவல் என்கிற அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து தமிழனுக்கு எந்த தீர்வும் கிடைக்காது என்பது ஈழத்தமிழ் பச்சைப்பிள்ளைக்கும் தெரியும்.
 
இந்த அமெரிக்காவின் முயற்சியில் தான்  இத்தீர்மானம் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஐ. நா. இரண்டினதும் கண்களை மூடிக்கொண்டே யானை தடவும் கதைகளை தவிர்த்து, இந்த தீர்மானம் பற்றி தமிழகம், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்திய பிரதமர் என்போர் அவரவர் கருத்துகளோடு செயலாற்றுகிறார்கள், பேசுகிறார்கள்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிறேமச்சந்திரன் சொல்வது இதுவரை வரைவுத் தீர்மானத்தின் வார்த்தைகள் வரையில் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு திருப்தியாய் இல்லை. அது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இல்லை என்கிறார். கூடவே, சுயாதீன, சர்வதேச விசாரணையே தேவை எனவும் வலியுறுத்துகிறார்.
 
தமிழக அரசியல் கட்சி சார்பில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதும், அந்த தீர்மானத்தில் இடம்பெறும் வார்த்தைகளின் அடிப்படையிலேயே இந்தியா அதற்கான ஆதரவு குறித்து தீர்மானிக்கும் என்பதாய் இந்திய பிரதமர் கூறுவதாய் செய்திகள் சொல்லுகின்றன. இடையே சு. சுவாமி வேறு இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலரை சந்தித்துவிட்டு, பிறகு எங்கே போனார்....!!
 
எந்த தீர்மானமும் அழிந்துகொண்டிருக்கும், அவதிப்பட்டுத் தத்தளிக்கும் ஈழத்தில் வாழ்பவருக்கு எந்த விடிவையும் கொண்டுவருமா என்பதே எதிர்பார்ப்பு என்றாலும், அதன் யதார்த்தம் கசப்பாகவே இருக்கும்.
 
 
படம்: கூகுள்.
 

தமிழக மாணவர்களும் ஈழத்தமிழர் உரிமையும்!

$
0
0
 
உலகவரலாற்றில் போராட்டங்களின் வழி தமக்கென்று தனி நாட்டையோ அல்லது பறிக்கப்பட்ட தங்கள் தேசத்தையோ மீளப்பெற்று தமக்கென்று இறையாணமையுடனான தேசத்தை உருவாக்கிய இனங்கள், மக்கள் உண்டு. கொசொவோ 2008 இல் இறையாண்மையுடன் கூடிய தனித்தேசமாக தன்னை நிறுவிக்கொண்டதும்; சர்வதேசத்தின் மேற்பார்வையிலான சுதந்திரமான வாக்கெடுப்பில் 2011 இல் விடுதலை அடைந்த தெற்கு சூடானும்  அண்மைய உதாரணங்கள்.
 
இதைப்போலவே தமிழர்களுக்கான இறையாண்மையுடன் கூடிய வெளியக சுயநிர்ணய உரிமை உண்டு. ஆனால், கிடைக்கப் பெறுவதிலுள்ள சர்வதேச, பிராந்திய அரசியல் சிக்கல்கள் குறுக்கே நிற்கின்றன. மனித உரிமை சபையின் கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதே சமயம், அங்கேயே இன்னொரு பக்கம் ஈழத்தமிழர்களின் தனித்தமிழீழத்துக்கான நியாயமான காரண காரியத்தொடர்புகளை, அரசியல் வரலாற்றுப் பின்னணிகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான முயற்சியில் சர்வதேசத்தைச் சேர்ந்த அரசியல் ஆராய்ச்சிப் படிப்பில் அது சார்ந்த துறையில் இருப்போர் ஈடுபட்டிருக்கின்றனர். அதாவது, கொசோவோவிற்கும், தெற்கு சூடானுக்கும் எந்த அடிப்படையில் சுதந்திரம் கிட்டியதோ அதே அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கும் அவர்கள் சுதந்திரமாகவும், இறையாண்மையோடும் வாழும் உரிமை உண்டு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு Remedial Sovereignty உண்டு என்பது முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இன்னும் காத்திரமாக சொல்லப்படுகிறது.
 
Remedial Sovereignty சொல்வது, சரிசெய்யமுடியாத இழப்பு என்பது இனப்படுகொலை, மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் வரையானவற்றை ஒரு இனத்தின் மீது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டால் அவர்களுக்கு தனியே பிரிந்துசென்று தங்களைத்தாங்களே ஆளும் உரிமை உண்டு என்பதே. அதாவது சரிசெய்யவோ, சமப்படுத்தவோ முடியாத இழப்புகளுக்கான பரிகாரமான இறையாண்மையுடன் கூடிய தனியாட்சி வழங்குவது. தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானர்கள் என்பதற்கான நேரடியான வார்த்தைப் பிரயோகம் ஐ. நா. வின் அறிக்கைகளிலேயே இல்லை என்றாலும், அதை சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார்கள். அது இனப்படுகொலையை குறிக்கிறது என்று ஏன் நேரடியாகச் சொல்லமாட்டார்கள் என்பது ஏகாதிபத்திய சர்வதேச அரசியல்.
 
இப்போது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவிருப்பதாக சொல்லப்படும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தில் Remedial Sovereignty என்பது கண்டிப்பாக குறிப்பிடப்படவேண்டிய ஆனால் வழக்கம் போல் ஈழத்தமிழர்களின் உரிமையின் பால் காட்டப்படும் மெத்தனப்போக்காக அது தவிர்க்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
 
ஈழத்தில் வாழ்பவர்களுக்கோ குரல்வளைகள் நெரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் எவ்வளவு தான் தொண்டை வறளும் அளவு கத்தினாலும் புறக்கணிக்கப்பதையே பழக்கமாக கொண்ட மேற்குலகம், இவைகளுக்கு மத்தியில் இப்போது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான குரலாக யாருமே எதிர்பாராத வகையில் தமிழக மாணவர்களிடம் தன்னெழுச்சியான போராட்டங்கள் காலத்தின் தேவைக்கேற்றாற்போல் முளைத்திருக்கிறது! இவர்களது கோரிக்களுக்கான நிலைப்பாடானது மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச கண்காணிப்புடனான வாக்கெடுப்பைக் கோரியும், ஆசிய நாடுகள் அல்லாத தலைமையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்பதாகும். இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமானதும், சுதந்திரமானதுமான தீர்வு தனித்தமிழீழம் என்பதே இவர்களின் நிலைப்பாடு.

தமிழக மாணவர் போராட்டம் இப்போது தான் முளைவிட்டாலும் அதன் நோக்கங்கள், கோரிக்கைகளில் ஈழம் தொடர்பில் தெளிவான போக்கு காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக-இந்திய அரசியல்வாதிகளை நம்பி, நம்பி ஏமாந்துபோன கசப்பும், வெறுப்பும் அவர்களது பேச்சில் வெளிப்படுகிறது.  இது குறித்து தமிழகத்தின் காட்சி ஊடகமான புதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சி பார்த்தபின் உருவான எண்ணங்களும், பிரதிபலிப்பும்.
 
ஈழம் குறித்த அமெரிக்க தீர்மானம் பற்றிய கோரிக்கைகளில் மாணவர்கள் மிகத்தெளிவான, காத்திரமான, திட்டவட்டமான முடிவுகளுடன் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள் என்பது பேச்சில் தெரிகிறது.

இருந்தாலும் 2 அல்லது 3 நாட்களே ஆன போராட்டம் பற்றிய இலக்குகளை கேட்கிறோம் பேர்வழிகள் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளரும், இலக்கியவாதியுமான மனுஷ்யப்புத்திரன் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவரின் கேள்விகளும் அவரே தங்கபாலு ஐயா நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்கன்னு முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவையே பேசவைத்து அழகுபார்த்ததும் நிகழ்ச்சியின் சறுக்கல் மட்டுமல்ல, எரிச்சலும் கூட.

பெரும்பாலும் இலக்கியவாதிகள் என்றாலே நுண்திரிபு நயமாக அரசியல் பேசுபவர்கள் மற்றும் அரசியலிலிருந்து விலகி யதார்த்தம் என்னும் பேரில் மனிதவாழ்வை எழுத்தில் அறுத்துப் பார்ப்பவர்களுக்கு மத்தியில் ஒரு இலக்கியவாதியாக மனுஷ்யப்புத்திரன் தங்கபாலுவிடம் கேட்ட தடாலடிக் கேள்விகளுக்கு சபாஷ். பிறகு, அவரே மாணவர்கள் தங்களுக்கு அரசியல்வாதிகளோடு இணைய விருப்பமில்லை என்று சொன்னபிறகும் அதையே வற்புறுத்தி இல்லை அவர்களோடு இணைந்து போராடுங்கள் என்கிற கருத்தை விதைப்பது போல் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. அரசியல் சாராமல் யாருமே ஒரு பொதுப்பிரச்சனைக்காகப் போராடவே முடியாதா! ஆனால், மாணவர்களின் நிலைப்பாடு இதுவரை அரசியல்வாதிகளை இதில் சேர்த்துக்கொள்வதாய் இல்லை.

ஒரு வேளை தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போல் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவோடு போராடுவதென்றாலும், இந்நாட்களில் எந்தக்கட்சி அவ்வாறான நம்பிக்கைத்தன்மையை வைக்குமளவிற்கு இருக்கிறது.

மாணவர்கள் அவர்கள் வழியில் அவர்களுக்கு தெரிந்தவரையில் போராடுகிறார்கள். அவர்களே தான் பிரச்சனைகளை முன்னெடுத்து போராடவேண்டுமென்றால் எதற்காக அரசியல், ஜனநாயகம், அதன் பிரதிநிதிகள் என்கிற அலுப்பான கேள்விகளும் தோன்றித்தொலைக்கிறது.
 
சமூகவலைத்தளத்தில் மாணவர்களின் போராட்டம் பற்றி சொல்லப்பட்ட ஒரு கருத்து.
 
“தமிழ் நாட்டில் ஈழ பிரச்சனை மாணவர் அமைப்பு போன்று எந்த அமைப்பால் முன்னெடுக்கபட்டாலும்  அதனுடைய உடனடி பலனை அறுவடை செய்யபோவது அ தி மு க தான்  ஏனென்றால் இந்த போராட்டம் தீவிரமாகும்போது போர் உச்சகட்டத்தில்  ஆட்சியில் இருந்த தி மு க  வின் செயலற்ற தன்மைதான் பேசுபொருளாக மாறும் அது அ தி மு க விற்கு வாக்குகளாக மாறும் இதுதான் சட்டசபை தேர்தலிலும் நடந்தாது

உண்மையில்  கருணாநிதிக்கு பயமெல்லாம் ஜெயலலிதாவின் மேல்தான் அதனால் தான் இந்த டெசோவெல்லாம்  ஆளும் கட்சி இதை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்

என்னை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராத அளவுக்கு  ஆளும் கட்சி இதை ஆதரிக்கிறது

ஏனென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் கருணாநிதி அதை வைத்து அரசியல் செய்துவிடுவார்.”
 
 ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், கெளரவமான வாழ்வுக்கும் குரல்கொடுக்கும் தமிழக மாணவர்களுக்கு நன்றியை தெரிவிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம் எஞ்சியுள்ள ஈழத்தமிழர்கள்.


Image: Google.
 

எத்தனைமுறை திரும்பி, திருப்பி பார்க்க..!

$
0
0
பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஒரு தீர்வு கிடைக்காமலே, மறுக்கப்பட்டுகொண்டே இருக்கும் நியாயத்தை குறித்து யோசிக்கும் போது அது குறித்த வரலாற்றை திரும்பிப் பார்க்க நேரிடுகிறது. எத்தனை முறை அதை திருப்பித் திருப்பி யோசிக்கும்போதும் எங்கே பிழை விடுகிறோம், எங்கே தோற்றுப்போகிறோம் என்று கேள்விகள் உள்ளுக்குள் அறைந்துகொண்டே இருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமை மீட்டெடுக்க அகிம்சை முதல் ஆயுதப்போராட்டம் வரை எல்லா வழிகளிலும் போராடியாயிற்று. இருந்தும் தீர்வுகள் தான் இன்னும் மனித உரிமைகள் சபை, ஐ. நா. சபை என்று சர்வதேசத்தினை நோக்கியே வாய்பார்க்க வைக்கிறது. ஐ. நா. வின் பொதுச்சபையில் பேசவேண்டியதை இன்னும் கூட மனித உரிமைகள் சபையில் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது சர்வதேச சமூகம்.

வரலாற்று ரீதியாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்கள் தமிழர்களுக்கு சொந்தமான பூர்வீகபூமி, தமிழர்களுக்கு வரலாற்றுரீதியான இறையாண்மை இருந்தது. எந்தவொரு இனத்தின் சுயநிர்ணய உரிமையை யாரும் மறுக்க முடியாது. இதிலெல்லாம் மற்றவர்கள் யாரும் உரிமை கோரவோ அதை தட்டிப்பறிக்கவோ முடியாது என்பது காகிதங்களில் எழுதப்பட்ட நியாயம்.

இதனடிப்படையில் தமிழர்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகள், சுயநிர்ணய உரிமைகள் பற்றி உரக்கப்பேசினாலும், வட்டுக்கோட்டை தீர்மானம் முதல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதல் மக்கள் ஆணையை வழங்கினாலும் அதெல்லாம் கணக்கில் எடுக்கப்படாமல் தயவுதாட்சண்யமின்றி தட்டிக்கழிக்கப்படுகிறது.

எப்படி இருந்தாலும் இது குறித்தெல்லாம் தொடர்ந்து பேசவேண்டிய கட்டாய சூழலும் இருந்துகொண்டே இருக்கிறது. இலங்கைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தியாவின் அனுசரணை, ஆதரவின்றி ஈழத்தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்கிறார்கள் சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் வரவேண்டும் என்கிறார்கள். சரி, இந்தியாவின் ஈழத்தமிழர்கள் குறித்த நிலைப்பாட்டை இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளாலே மாற்ற முடியும் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு மாற்றம் நிகழ தமிழகத்தமிழர்களின் காத்திரமான அரசியல் பரப்புரை மற்றும் செயற்பாடுகள் தேவை என்பது ஈழத்தமிழர்கள் எண்ணம். ஆனால், தமிழகத்தில் எத்தனை சதவீதமானோருக்கு ஈழப்பிரச்சனை குறித்து தெரிந்திருக்கிறது என்கிற யதார்த்தமான உண்மையோடு; ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதில் தமிழகத்தமிழர்களை நம்பிப் பலன் இல்லை என்கிற தமிழகத்தமிழர்களின் குரல்களும் ஒலிக்காமல் இல்லை.

இந்த சூழ்நிலையில் தான் இப்போது தமிழகத்தில் தலையெடுத்திருக்கும் கல்லூரி மாணவர்களின் எழுச்சி ஈழத்தை நோக்கி எழுந்திருக்கிறது. இந்த எழுச்சியின் காரிய, வீரியத்தை வரவிருக்கும் நாட்களே தீர்மானிக்கும். காலங்காலமாக தமிழகத்தில் இருக்கும் திராவிட மற்றும் பெரியார் கொள்கைகள் சார் அமைப்புகளிடம் இருந்து ஒலிக்கும் குரலானது நியாயத்தை ஒலித்தாலும், அது பலரை சென்றடைவதில்லை. இது அதிகம் பேரை சென்றடையாவிட்டாலும் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் அற்பத்தனமான உளறல்கள் போலன்றி உலகவரலாற்றோடும், மனித விடுதலை குறித்த கொள்கைகள் சார்ந்து இருக்கின்றன.

கொளத்தூர் மணி அவர்களின் இந்தப் பேச்சு ஈழத்தமிழர்களின் இறையாண்மை குறித்து தெளிவாக விவரிக்கிறது. இந்தியாவும், இலங்கையும் பேசும் போலி இறையாண்மை அல்ல இது. ஈழத்தமிழர்களின் வரலாற்று இறையாண்மை (Historical Sovereignty), அது பெளத்த சிங்கள பேரினவாதத்தால் விழுங்கப்பட தமிழீழ விடுதலைப் புலிகளால் வென்றெடுக்கப்பட்ட இறையாண்மை (Earned Sovereignty), இப்போது புலிகளின் பின் இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கான தீர்வான இறையாண்மை (Remedial Sovereignity) என்பவற்றை தெளிவாக உலகவரலாற்றில் இன்றுவரையுள்ள உதாரணங்களோடு விளக்குகிறார். தமிழகத்தமிழர்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் எங்கே தவறியிருக்கிறார்கள் என்பதையும் விளக்கியிருக்கிறார்.
 
அதேபோல், சர்வதேச ரீதியில் உலகமக்களின் விடுதலை நோக்கிய மார்க்சிய தத்துவத்தை கடைப்பிடிக்கும் ரஷ்யா, சீனா, க்யூபா என்கிற சோஷலிச நாடுகள் இம்முறை சுழற்சி முறையில் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பயன்படுத்த இல்லாமல் இருக்கிறார்கள் என்பது கூட சந்தோசமான ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுவதாக கொளத்தூர் மணி சொல்வதும் கசப்பான யதார்த்தம். இந்தப் போலிகள் நிறைந்தது தான் சர்வதேசம்.

எங்களுக்கான நியாயங்களும், அதற்கான போராட்டங்களும் சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், தீர்வுகள் மட்டும் தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
 

 
Viewing all 68 articles
Browse latest View live